Saturday, July 5, 2014

தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

து சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம்...

குடியுரிமை சான்றிதழ் விசயமாய் பாரீசிலுள்ள இந்திய தூதரகத்துக்கு சென்றிருந்தேன். வரவேற்பறையில் ஒரு வடஹிந்தியர் ! ( இ இல்லை, ஹி தான் ! ) வந்த விசயத்தை ஆங்கிலத்தில் சொன்னேன்...

" இங்கிலீஸ்  நஹீ... நஹீ... "

என கடுகடுத்தார் !

சரி, பாரீசிலுள்ள  தூதரகம், பிரெஞ்சு மொழியாவது பேசுவார் என்ற நினைப்பில் பிரெஞ்சில் கேட்டேன் ! அதற்கும் அதே நஹீ ! நஹீயை தொடர்ந்து அவர் பேசியது புரியவில்லையென்றாலும் தொனியை வைத்து கணித்ததில் ஹிந்தி பேசத்தெரியாத நீயெல்லாம் இந்தியனா என கரிந்திருப்பார் என தோன்றியது ! நானாவது பரவாயில்லை, எனக்கு பின்னால் நின்ற பிரெஞ்சு இளைஞனுக்கும் அதே நஹீ தான் ! அவன் தலையை சொரிந்துகொண்டு அவருக்கு பின்னால் ஒட்டியிருந்த "  Welcome to India  " போஸ்ட்டரை பார்த்தான் !

வடஹிந்தியர்கள் அப்படிதான் ! இந்தியாவில் ‍ஹிந்தி மொழியை போல இன்னும் ஒரு நாற்பத்து சொச்சம் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் இருப்பதெல்லாம் தெரியாது ! இந்தியா என்றால் அவர்களுக்கு ஹிந்தியா தான் ! வடநாட்டின் அரசியல் தலைவர்களோ தேர்தல் சமயத்தில் மட்டும் வணக்கம் என்ற தமிழ் வார்த்தையுடன் ,

" சாம்பார் தோசா ரொம்ப  புடிக்கும் "



போன்ற வரிகளை மனப்பாடம் செய்து தேர்தல் முடிவு வந்தவுடனேயே அவர்களின் வாக்குறுதிகளைப்போல தமிழ் வார்த்தைகளையும் மறந்துவிடுவார்கள் ! அப்படி ஒரு தீவிரமான " மொழிப்பற்று " அவர்களுக்கு !

உள்ளேயிருந்து ஒரு மலையாள சேட்டன் வந்ததால் நான் தப்பித்தேன் !

" ஆ... தமிளோ... இவிட வா ! "

மலையாள மக்களுக்கு தமிழில் பன்மை இருப்பதே தெரியாது !

வெளிநாட்டு இந்திய தூதரகங்களாகட்டும், உள்நாட்டின் விமான நிலையங்களாகட்டும் தமிழனுக்கு மொழி உதவி செய்வது அவனின் அண்டை மாநிலத்தவர்கள்தான் ! நீர் பங்கீட்டு அலும்பு, அணைக்கட்டு அடாவடி என எத்தனை பிரச்சனைகளிருந்தாலும் தென்னிந்தியன் என்ற முறையிலாவது உதவி விடுவார்கள் !

ஆனால் அவர்களின் மொழியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் ! பல தலைமுறைகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் குடியேறி தமிழர்களாகவே வாழும் மலையாளிகளும் தெலுங்கர்களும் இன்றளவிலும் அவர்களின் வீடுகளில் அவரவர் தாய் மொழியில் தான் பேசிக்கொள்கிறார்கள் ! இதில் விதிவிலக்கு தமிழர்கள் மட்டுமே ! ( நான் தமிழர்கள் என குறிப்பிடுவது தமிழ்நாட்டு தமிழர்களைதான் ! புலம்பெயர்ந்து உலகின் பல திசைகளிலும் பரவிவாழும் ஈழத்தமிழர்களின் மொழிப்பற்றும், தங்கள் குழந்தைகள் தமிழை மறந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் தோற்றுவித்திருக்கும் தமிழ் கல்வி மையங்களும் பாராட்டுதலுக்கு உரியவை )

நமக்கு ஆங்கிலம் தெரியும் என காட்டிக்கொள்வதிலும், பேசுவதிலும் அலாதி பிரியம் ! இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தமிழர்களில் ‍ஹிந்தி தொடங்கி மற்ற இந்திய மொழிகளை கற்றவர்கள் கூட தங்களின் ஆங்கில அறிவை வெளிப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இந்திய மொழிப்புலமையை வெளிக்காட்டுவதில்லை !

இந்த ஆங்கில மோகத்துக்கான காரணம் ஆங்கில காலனியாதிக்கத்தின் பாதிப்பு ! இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது தமிழில் புழங்கிய, 

" கால் காசானாலும் கும்பினி காசு ! "

என்ற சொல்வழக்கை புரிந்துகொண்டால் நம் ஆங்கில மோகத்துக்கான காரணம் புரியும் !

ஆங்கிலம் பயின்று, ஆங்கிலேயர்களிடம்  அரசு வேலை செய்வதை மிக கெளரவமாக கருதிய காலம் அது ! சுதந்திரத்துக்கு பிறகு ஆங்கிலம் இணைப்பு மொழியாக தங்கிவிட்டாலும், மற்ற மொழிக்காரர்களைவிட தமிழர்களின் ஆங்கில மோகம் சற்று அதிகம்தான் !  ஆங்கிலத்தில் பேசுபவர்களைதான் மெத்த படித்தவர்கள் என்றே ஏற்றுக்கொள்கிறோம் ! " தமிழ் வாத்தியார்களை " விட " இங்கிலீஸ் சாருக்கு " நாம் கொடுக்கும் மரியாதையே தனி !

ஆங்கில மோகம் பற்றி தொடருவதற்கு முன்னால் ஒன்றை தெளிவுப்படுத்த வேண்டும் ! அது மொழிவெறிக்கும் மொழிப்பற்றுக்குமான வேறுபாடு.

பிரெஞ்சுகாரர்களின் மொழி வெறியை, முக்கியமாய் ஆங்கிலத்தை அவர்கள் எப்படி வெறுத்தார்கள் என்பது பற்றிய நகைச்சுவை கதை ஒன்று உண்டு.

இரு பிரெஞ்சுகாரர்கள் ஒரு நதியின் ஓரமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள்...

அப்போது நதியில் தவறிவிழுந்துவிட்ட ஆங்கிலேயன் ஒருவன் "  help, help  "  என கத்துகிறான் !

அதனை கேட்ட ஒரு பிரெஞ்சுகாரன் மற்றொருவனிடம் கூறுகிறான்...

" இவன் help, help  என கத்தும் நேரத்தில் நீச்சல் கற்றுக்கொள்ளலாம் ! "

இதுதான் மொழிவெறி !


வேறு மொழி தெரிந்திருந்தாலும், எனது மொழி தெரியாதவரிடம்கூட‌ என் தாய் மொழியில் மட்டுமே பேசுவேன்,  தாய் மொழியிலுள்ள அனைத்து அந்நிய மொழி சொற்களையும் நீக்கியே தீர வேண்டும்  என  மல்லுக்கு  நிற்பது மொழி தீவிரவாதம் !

வேறு மொழிகளை கற்பதாலோ அல்லது அவற்றில் புலமை பெறுவதாலோ தாய் மொழி தேய்ந்துவிடாது ! இன்னும் சொல்லப்போனால் ஒரு மொழியின் இலக்கியங்கள் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்போதுதான் மொழிகள் செழிக்கின்றன !

அதே போல ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் அந்நிய மொழி வார்த்தைகள் ! சென்னை தமிழின் பல வார்த்தைகள் உருது மொழியிலிருந்து வந்தவை ! அவை எப்ப‌டி தமிழினுள் நுழைந்தன என ஆராய்ந்தால் நாம் கடந்துவந்த வரலாறே தெரியும் ! அதே போல புதுவை மாநில தமிழில் கலந்துள்ள பிரெஞ்சு வார்த்தைகள். இப்படி ஒவ்வொரு வட்டார வழக்கிலும் நிச்சயமாய் சில அந்நிய மொழி வார்த்தைகள் இருக்கும். இந்த வார்த்தைகளையெல்லாம் நீக்கினால்தான் தமிழ் தூய்மையாகும் என்பது ஒருவரின் ஆடையலங்காரங்களை அவிழ்க்க நினைப்பதற்கு சமமாகும் !

ஆங்கில, பிரெஞ்சு மொழி அகராதிகள் ஆண்டுதோறும் திருத்தப்படும்போது வழக்கில் இல்லாத வார்த்தைகள் நீக்கப்படும் அதே சமயத்தில் புதிதாய் சேர்ந்த அந்நிய மொழி வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொள்வதும் உண்டு. அப்படி ஆங்கிலமும் பிரெஞ்சும் சுவீகரித்துக்கொண்ட தமிழ் வார்த்தை ஒன்று உண்டு. அது கட்டுமரம் ! கட்டுமரம் என்ற வார்த்தைக்கு அவர்கள் மொழியில் எதையும் கண்டுபிடிக்காமல்  " Catamaran " என்றே சேர்த்துக்கொண்டார்கள் !

இப்படி சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சேரும் ஒன்றிரண்டு வேற்றுமொழி வார்த்தைகளால் ,  " யாதும் ஊரே யாவரும் கேளிர் " எனப்பாடிய கணியன் பூங்குன்றனாரின் தமிழ் செத்துவிடாது !

பின்னர் எதுதான் பிரச்சனை ?

காலையில கடைத்தெருவுக்கு போகலாம் என்றிருந்தேன்... வேறு வேலை வந்துவிட்டது "

 என இயல்பாக பேச வேண்டியதை,

" மார்னிங் ஷாப்பிங் போலம்ன்னு திங்க் பண்றப்போ வேற என்கேஜ்மெண்ட் ! "

என தமிங்கிலீசில் உளறுவதுதான் பிரச்சனை !

வழக்கு தமிழ் இப்படி சித்திரவதை செய்யப்படுவதற்கும், இலக்கண தமிழ் அழிவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன.

முதல் காரணம் மொழியின் இலக்கணத்தை வழக்கு தமிழிலிருந்து பிரித்துவிட்டோம் ! பட்டிமன்றங்களிலும், கவிதை அரங்கங்களிலும் கைத்தட்டல் பெறுவதற்கு மட்டுமே இலக்கணம் பயன்படுகிறது ! ( இன்று அந்த பட்டிமன்றங்களிலும் நடிகைகளின் " தமிளே " கைதட்டல் பெறுகிறது ! )

குழந்தைகளுக்கு தாய் மொழியை முறையாய் கற்றுவிக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கும் முன்னால் பெற்றோர்களையே சாரும். பிரான்சில் பிரெஞ்சு வார்த்தைகளை தவறாக உச்சரிக்கும் பால்ய வயது குழந்தைகளைகூட பெற்றோர்கள் கடுமையாக பேசி, திருத்துவதை கண்டிருக்கிறேன் ! நாமோ லகர, ளகர உச்சரிப்புகளை புதைத்தேவிட்டோம். " ழ " வும் வாழைப்பழ தோல் போல வழுக்குகிறது !  ன, ண குழப்பங்கள் ( எனக்கும் உண்டு ! !! ) தீர்ந்தபாடில்லை ! ஆனாலும் இது போன்ற எழுத்து பிழைகள் தொடங்கி வெண்பா வரை அனைத்துக்குமான தீர்வு தெரியாமல் தவிப்பதற்கு காரணம் போதிய இலக்கண அறிவில்லாதது ! நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளின் தமிழ் உச்சரிப்பை கவனிக்கின்றோம் ?  அம்மா, அப்பா என அழைக்கும் குழந்தைகளின் தலையில் குட்டி,  டாடி மம்மி என கூப்பிட வைக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் ?

ப‌த்திரிக்கை தொடங்கி, வெள்ளித்திரை, சின்னத்திரை என அத்தனை ஊடங்கங்களும் தமிழை சகட்டுமேனிக்கு துவம்சம் செய்கின்றன ! தமிழனுடன் சேர்ந்து அவன் மொழியும் ஏமாளியாகிவிட்டது !


வெகுஜன பத்திரிக்கைகள் நினைத்தால் குறுக்கெழுத்து போட்டி, வார்த்தை விளையாட்டு என மொழி அறிவை வளர்க்க எவ்வளவோ செய்யலாம். ஆனால்  நடிகைகளின் நாபிச்சுழி படங்கள் ஆக்ரமித்த பக்கங்களின் மிஞ்சிய இடங்களில் சினிமா கிசுகிசு ! இதில் குறுக்கெழுத்து போட்டிக்கும் சுருக்கெழுத்து போட்டிக்கும் எங்கே இடம் ?

வெள்ளித்திரையின் தமிழ் சேவையை பற்றி... வேண்டாம் !  சின்னத்திரையிலோ நடிகைகள்,

 " கொன்ச்சம் கொன்ச்சம் டாமில் பேசுது ! "

வெளிமாநில நடிகைகளை விடுங்கள், தமிழ் தெரியாத காரணத்தால் அவர்களுக்கு தெரிந்த ஆங்கில அறிவில் ( வயதை கேட்டால்தான் " இன்னும் பத்தாம் கிளாஸே முடிக்கல மச்சான் !" என போடுகிறார்களே ! ) பேசுகிறார்கள், மன்னித்துவிடலாம் !

அதே வெளிமாநில நடிகைகள், அவர்களின் சொந்த மாநில பேட்டிகளில் அவரவர் தாய் மொழியில்தான் பேசுகிறார்கள். நமது செந்தமிழ்நாட்டு நடிகைகளோ...

" எல்லார்க்கும் வண்க்கம், ஆக்ச்சுவ‌லீ... "

 என ஆரம்பித்துவிடுகிறார்கள் ! இது தமிழ் பேசுபவர்கள் பார்க்கும் நிகழ்ச்சி என நிகழ்ச்சி நடத்துபவர் கூறலாம்தான்  ! ஆனால் நடிகை ஆங்கிலத்தில் ஆரம்பித்தால் நிகழ்ச்சி தொகுப்பாளரும் தனது ஆங்கில அறிவை வெளிப்படுத்தும் கோதாவில் இறங்கிவிடுகிறார் !

ஒரு மொழியின் பண்டைய, சமகால இலக்கியங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு அதன் முன்னனி எழுத்தாளர்களுக்கும் உண்டு. ஆனால் தமிழின் பல முன்னனி, முற்போக்கு எழுத்தாளர்களின் பாணியே வேறு ! ஷேக்ஸ்பியர் தொடங்கி நீட்ஷே, விக்டர் ‍ஹூயூகோ பற்றியெல்லாம் பேசுவார்கள், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களையெல்லாம் சிலாகிப்பார்கள். ஆனால் தமிழின் படைப்புகளை பற்றி, முக்கியமாய் அவர்களின் சமகால சக எழுத்தாளர்களைப்பற்றி மறந்தும் மூச்சுவிடமாட்டார்கள் !

இப்படி, இன்னும் நிறைய சொல்லலாம் தமிழ் மெல்ல சாவதற்கான காரணங்களை !

ஒரு சமூகத்தின் உயிரே அதன் மொழிதான். அந்த மொழியை சார்ந்தே அதன் கலையும் கலாச்சாரமும் ! தாய் மொழியை மறைக்க நினைப்பது தன் தகப்பனை மறைப்பதற்கு சமம் ! சங்கம் வைத்தெல்லாம் தமிழ் வளர்க்க வேண்டாம், தமிழை தமிழாக பேசினாலே போதும் ! தமிழ் தானாக வளர்ந்துவிடும் !






இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.


73 comments:

  1. அட்டகாசமான பதிவு@ வித் பல நெத்தியடி விஷயங்கள்

    ReplyDelete
    Replies
    1. எப்படி விஸ்வா எப்படி ? இப்ப இந்தியாவில மணி நடுநிசி தாண்டி ரெண்டுன்னு நினைக்கிறேன்... பதிவை பதிஞ்ச உடனேயே.... நன்றி தோழரே !

      Delete
  2. இதுக்கெல்லாமா நன்றி சொல்வீங்க சார்?

    இதுபோன்ற பதிவுகளுக்காக நாங்க தான் நன்றி சொல்லனும்.

    தொடருங்கள் உங்கள் அருமையான பதிவுகளை!

    ReplyDelete
  3. நல்ல பதிவு.

    எந்த மொழியையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை..... நமது மொழியை மறந்து விடாமல் தொடர்ந்து பயன்படுத்துவது தான் நல்லது. ஆங்கில மோகம் கொண்டு நமது மொழியை மறந்து விடுவது நல்லதல்ல.....

    மொழி வெறி, தீவிரவாதம் என்பதற்கான விளக்கங்கள் நன்று.....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      ஆமாம், வேறுமொழிகளை கற்றுகொள்வதில் தவறில்லை. பன்மொழி புலமை மனிதனுக்கு அவசியமான ஒன்று. தாய் மொழியின் அருமையும், அவசியமும் புரியாதிருப்பதுதான் தவறு.

      நன்றி
      சாமானியன்

      Delete
    2. உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      ஆமாம், வேறுமொழிகளை கற்றுகொள்வதில் தவறில்லை. பன்மொழி புலமை மனிதனுக்கு அவசியமான ஒன்று. தாய் மொழியின் அருமையும், அவசியமும் புரியாதிருப்பதுதான் தவறு.

      நன்றி
      சாமானியன்

      Delete
  4. வணக்கம்
    உண்மைச்சம்பவத்தை நிதர்சனமாக பகிந்துள்ளீர்கள் நாங்கள் எந்த நாட்டில்வாழ்ந்தாலும் எங்களின் தாய்மொழியை மறக்ககூடாது பதிவை எழுதிவந்த பின் இறுதியில் சொல்லிய வசனம் நன்று.எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டான பதிவாக உள்ளது
    மொழியை மறைக்க நினைப்பது தன் தகப்பனை மறைப்பதற்கு சமம் ! இதைப்போலதான் மதம் விட்டு மதம் மாறுபவனும் தாய்யை கொன்றபாவம் என்பார்கள்
    பகிர்வுக்குநன்றி.தங்களின் பக்கம் வருவது முதல் முறை இனி என்வருகை தொடரும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி நண்பரே !

      தொடர்ந்து வருகை தாருங்கள்.

      சாமானியன்

      Delete
  5. அண்ணா,
    உங்கள் ஒவ்வொரு வரியின் ஆதங்கத்தையும் வலியையும் உணர்கிறேன்.
    எப்பொழுதும், இல்லாமல் போகும் போதுதான் இருப்பதன் அருமை தொியும்.
    நம் கண்முன்னே தமிழ் நசிந்து கொண்டிருக்க, எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் வாழப் பழகியிருக்கிறோம்.
    கடந்த மே மாதம் மும்மை சென்றிருந்து எமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எங்கள் விடுதியின் அறைப்பணியாளனிடம்
    மதியத்திற்கான உணவு குறித்துக் கேட்டபோது, இந்தி நை மாலும்? இந்தியன்? என்று கேட்டான். இந்தியா எனும் பெயரில் இருக்கிற “இந்தி“ என்பதை பொதுமொழி என அர்த்தங்கொண்டான் போலும்.( நாங்கள் கேட்பது புரிந்தும் அதை இந்தியில் சொல்ல வைக்காமல் விடவில்லை அவன்! வயிற்றுப் பிரச்சனை என வந்து விட்டால் ஹிப்ரூ கூட கற்றுக்கொண்டாக வேண்டுமே!)
    இதே போன்ற அனுபவம் இதற்கு முன் டார்ஜிலிங்கிலும் ஏற்பட்டு இருக்கிறது.
    ஐ. நா வால் விரைவில் அழியக்கூடிய மொழிகளாக அடையாளப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றிருப்பதை அச்சத்தோடு பார்த்து, காக்கும் வழிகளை முன்னெடுக்க வேண்டிய காலக்கட்டாயத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இச்சூழலில் தங்களின் பதிவு நிச்சயமாய் அத்தியாவசியத் தேவையுள்ளது.
    இறுதியாய், தோழர் மது அவர்களின் “எனக்குத் தமிழ் வேண்டாம்“ என்னும் பதிவிற்கு என் பின்னூட்டமொன்றிலிருந்து பின்வருவனவற்றை இங்கும் குறித்து நிறைகிறேன்.

    “மொழியின் வளர்ச்சியும் அழிவும் பெருமளவில் அரசாங்கத்தின் துணையோடுதான் நடைபெறுகிறது என்பது வரலாறு. நம் நாடு போன்ற பன்மொழி பேசும் சூழலில் பொதுமொழி அல்லது அலுவல்மொழி்யைத் தீர்மானிப்பது என்பது வலுத்தோன் வெட்டும் வாய்க்காலாகவே இருக்கிறது. தாய் மொழிப் பற்றுக்கொண்ட காந்தி கூட குஜராத்தி இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க விரும்பியதாகப் படித்திருக்கிறேன்.பல்லவர் காலத்தில் பாலி, சோழர் காலத்தில் சமஸ்கிருதம், நாயக்கர் காலத்தில் தெலுங்கு, ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் என ஆள்வோர் மொழி தமிழின் மீது செலுத்திய ஆதிக்கத்தினை மறுத்திட முடியாது. இதை எல்லாம் வென்றெடுத்துத்தான் தமிழ் வாழ்ந்து வந்திருக்கிறது. அன்றெல்லாம் படித்தவர்கள் எனக்கருதப்பட்டவருள் பெரும்பாலோர், தம் நலனுக்காக வந்தேறி மொழிகளுக்கு வால் பிடித்துத்தான் வந்திருக்கிறார்கள். வளர்ந்திருக்கிறார்கள். பட்டிக்காடுகள், பாமரமக்கள், இழிசனர் எனக்கருதப்பட்ட பெரும்பான்மை படிப்பறிவில்லா மக்களின் நாவிலிருந்துதான் தமிழ் மீண்டெழுந்தது. ஆளும் வர்க்கம் தான் எப்போதும் அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதில்லையே! ஆனால் இன்று கிராமங்களிலும் ஆங்கிலம் புகுந்து விட்டது. பேச்சு வழக்கில் ஆங்கிலக் கலப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு எல்லாரையும் எளிதில் சென்றடையும் ஊடக வளர்ச்சிதான் பெருங்காரணம். நாம் ஆங்கிலத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் நம் தாய் மொழியை அழித்தெழுவது எதுவானாலும் அதைச் சகித்திருக்க முடியாது என்ற நிலைப்பாடுடையவர்கள். இது போதாதென்று, மைதிலி ( கண்ணன் வாழ்ந்தமிதிலையில் பேசப்பட்டமொழி) சந்தாலி.
    சிந்தி, போன்ற மொழிகளை விடுதலை பெற்ற குறுகிய காலத்திலேயே நெருக்கி அழித்த இந்தி வேறு ஆள்வோர்களின் ஆசியுடன் எந்நேரமும் வரக் காத்திருக்கிறது ! ( அன்று அதன் ஊடுருவலைத் தீவிரமாக எதிர்த்தவர்கள் மொழிவெறியர் என முத்திரை குத்தப்பட்டனர். )
    இந்நிலையில் தங்களின் இப்பகிர்வினை அவசியமானதாகவும், அவசரமானதாகவும் கருதுகிறேன். நன்றி.“
    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆழமான அர்த்தம் பொதிந்த பின்னூட்டத்துக்கு நன்றி சகோதரரே !

      இந்தியாவின் வடபகுதியில் நுழையும் தமிழர்கள் அனைவருமே ஒரு முறையேனும் உங்களின் அனுபவத்தை வாழ்ந்திருப்பார்கள் !

      இது போன்ற நிகழ்ச்சி ஒன்றை, சென்னை விமானநிலையத்திலேயே சந்த்தித்திருக்கிறேன் நான் ! என்னை அவமதித்தது ஒரு சுங்கத்துறை அதிகாரி... அவரும் தமிழர் !!

      அவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு நான் தமிழில் பதிலளித்ததுதான் என் குற்றம் !

      ஒரு கட்டத்தில், " ஆங்கிலம் தெரியாத நீயெல்லாம் பிரான்சில் எப்படி வாழ்கிறாய் ?! " என எகத்தாளமாக ஆங்கிலத்தில் கேட்டார் !

      " பிரான்சில் வாழ பிரெஞ்சு தெரிந்தால் போதும் ஐயா ! "என பவ்யமாக ( சற்றே கிண்டல் கலந்த பொய் பவ்யம்தான் ! ) தமிழில் பதிலளித்தேன்...

      அவ்வளவுதான் ! என்னை பலமணி நேரம் காக்கவைத்து என் உடமைகளை அக்குவேறு ஆணிவேறாக அலசினார் மனிதர் !

      " மொழியின் வளர்ச்சியும் அழிவும் பெருமளவில் அரசாங்கத்தின் துணையோடுதான் நடைபெறுகிறது... "

      இதனை படிக்கும்போது எண்பதுகளில் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட " நவோதயா " பள்ளிகளின் ஞாபகம் வருகிறது. அந்த திட்டம் வெற்றிபெற்றிருந்தால் தமிழ் நிச்சயமாய் அழிந்தேயிருக்கும் என தோன்றுகிறது.


      உங்களின் பின்னூட்டத்தின் மூலம் மொழி அழிப்பை பற்றிய பல தகவல்களையும் அறிந்தேன். உங்களை போன்றவர்களின் வலைப்பூக்களை படிக்கும்போதெல்லாம் மொழி விழிப்புணர்வு பற்றிய மெளன புரட்சி மிக வேகமாய் பரவி வருகிறது என்பதை உணருகிறேன். நிச்சயமாய் தமிழ் நம் காலத்திலேயே செழித்தோங்கும்.

      நன்றி
      சாமானியன்

      Delete
  6. சாம்,

    முதலில் ஒரு அவசியமான கருத்தை இத்தனை அழகாக ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய வகையில் எழுதியதற்கு பாராட்டுக்கள். பதிவின் இடையிடையே உள்ள satire ரை நனறாகவே ரசித்தேன். (நானாவது பரவாயில்லை, எனக்கு பின்னால் நின்ற பிரெஞ்சு இளைஞனுக்கும் அதே நஹீ தான் ! அவன் தலையை சொரிந்துகொண்டு அவருக்கு பின்னால் ஒட்டியிருந்த " Welcome to India " போஸ்ட்டரை பார்த்தான் !).கலக்கல்.

    தமிழ் மொழியின் நலிவைப் பற்றி பலரும் பேசியாகிவிட்டது. பேசாதவர்களுக்கும் உங்களைப் போன்றே எண்ணங்கள் உண்டு. (வேற யார் நான்தான்.) நான் தமிழில் பேசும்போது முடிந்தவரை ஆங்கிலக் கலப்பு இல்லாமலே பேச முயற்சிக்கிறேன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றாயிற்று. நல்ல தமிழை நல்லவிதமாக பேசினாலே அதுவே நாம் நம் மொழிக்கு செய்யும் தொண்டு என்று நினைக்கிறேன்.

    பிரெஞ்சு மக்களின் மொழிதாகம் பிரசித்திப் பெற்றது. பிரெஞ்சும் ஆங்கிலமும் ஒரே மொழிதான்.ஒழுங்காக பேசினால் பிரெஞ்ச் கண்ணா பின்னா வென்று குதறிஎடுத்தால் ஆங்கிலம் என்று அவர்கள் ஆங்கிலத்தை நக்கலடிப்பதாக படித்திருக்கிறேன். (தமிழ் மலையாளம் போலதான்)

    ஆங்கிலம் பல மொழிகளின் கலவை. அதை தந்தை இல்லாத மொழி என்று பகடி செய்வது பலருக்கு வேடிக்கை. இருந்தும் இத்தனை தூரம் அந்த மொழி வீரியம் பெற்றிருப்பது அதன் வளைந்துகொடுக்கும் தன்மையால்தான் என்பது நாம் கண்ட வரலாறு. தமிழின் கட்டுமரம் கட்டமரான் ஆன கதையைப் போலவே பல சொற்கள் இங்கேயிருந்து அங்கே பயணம் செய்திருக்கின்றன. rice என்பதே arisi என்ற தமிழ்தான் என்று கூறுபவர்களும் உண்டு. இன்னும் சில ஆங்கில உடை அணிந்த தமிழ் சொற்கள் உண்டு: மாங்காய்- மேங்கோ, ஒன்று- ஒன், காசு-கேஷ்,சுருட்டு-செரூட். மொழி ஆராய்ச்சி மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இசையைப் பற்றி பேசி ஓய்ந்ததும் (இது நடக்கிற காரியமில்லை) மொழியை ஒரு கை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

    தொலைகாட்சிகளில் நம் தமிழ் நடிகைகள் அடிக்கடி சொல்லும் ஆக்சுவலி கூட கேட்பதற்கு ஒரு வலிதான். அதை ஆக்சலி என்று சொல்லவேண்டும் என்ற உச்சரிப்பு பலருக்கு தெரிவதில்லை. அதுசரி தமிழையே ஒழுங்காக பேசாதவர்கள் ஆங்கிலத்தை எப்படிப் பேசினால் என்ன?

    மிக அருமையான பதிவு. மீண்டும் சந்திப்போம் சாம்.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்,

      வலைப்பூக்களில், பதிவுகளின் நீளம் அதிகமானால் படிக்க மாட்டார்கள் என்ற ஒரு பொது கருத்து நிலவுகிறது ! எனது பதிவுகள் சற்றே நீளம் என கவலைப்பட்டதுண்டு. ஆனால் உங்களின் ஆழமான பின்னூட்டத்தை படித்த பிறகு சுவாரஸ்யமாக எழுதினால் அளவு ஒரு தடங்கலாக இருக்காது என்பது தெளிவாகிறது.

      ஆங்கிலம், பிரெஞ்சு மொழி போட்டி காலனியாதிக்க காலத்தில் தொடங்கியது. இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு நாடுகள் பிடித்த காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் முந்த நினைத்ததின் விளைவு ! இரு நாடுகளின் பழக்க வழக்கங்கள் அனைத்துமே எதிர்மறை ! ஒரு உதாரணம்... ஆங்கிலேயர்களுக்கு தேனீர் என்றால் பிரெஞ்சுகாரர்களின் விருப்பம் காபி ! அங்கே Left side driving இங்கே Right side !

      " மொழி ஆராய்ச்சி மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இசையைப் பற்றி பேசி ஓய்ந்ததும் (இது நடக்கிற காரியமில்லை) மொழியை ஒரு கை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். "

      ஆவலுடன் காத்திருக்கிறேன் காரிகன்... உங்களுக்கென ஒரு அருமையான எழுத்துநடையை அமைத்துகொண்டவர் நீங்கள். இசையை தாண்டி, எந்த கருத்தாக இருந்தாலும் அதனை உங்களால் மிக சிறப்பாக கொடுக்க முடியும் என்பது என் எண்ணம்.

      " அதுசரி தமிழையே ஒழுங்காக பேசாதவர்கள் ஆங்கிலத்தை எப்படிப் பேசினால் என்ன? "

      இது பன்ச் !

      நன்றி
      சாமானியன்

      Delete
  7. ஆங்கிலமோ, ஹிந்தியோ, எந்த மொழியானாலும் முதலில் முழுவதும் கற்றுக் கொள்கிறோமா....? என்றால் கிடையாது... எல்லாவற்றையும் தமிழில் புரிந்து கொண்டு கற்கிறோம்... அப்படியானால் முதலில் தமிழில் முழு தேர்ச்சி பெற்று உள்ளோமா...? சந்தேகம் தான்... சரி, அது இருக்கட்டும்...

    எந்த மொழியானால் என்ன..? ஐந்து மொழி கற்றுக் கொண்டால், அவர் ஐந்து பேருக்கு சமம்... உலகில் எந்த மூலைக்கும் செல்லலாம்-யாருடைய துணையுமின்றி....! அதற்காக தாய் மொழியை கேவலமாக நினைப்பது தன்னை அவ்வாறு நினைப்பது என்று உணர வேண்டும்...

    பதிவின் முடிவில் சொன்னீர்களே... பிரமாதம்...!

    ReplyDelete
    Replies
    1. வலைசித்தர் அவர்களே !

      இந்த பதிவின் கருத்தை குறுகத்தரித்த குறளாக, தெளிவாக சொல்லிவிட்டீர்கள் !

      நமக்கு எல்லாமே அரைகுறை அவசரம் என்பதுதான் பிரச்சனை ! பன்மொழி புலமை சமூகத்துக்கு அவசியமான தேவை. ஆனால் கற்கும் மொழியையும் ஒழுங்காக கற்பது கிடையாது, தாய் மொழிக்கும் உண்மையாக இல்லை என்பதுதான் பிரச்சனை !

      மிகவும் நன்றி
      சாமானியன்

      Delete
  8. யாதும் ஊரே யாவரும் கேளீர்"
    பிரெஞ்சுக்காரர்களிடம் மனித நேயத்தை விட...
    மொழி நேயம் மேலோங்கி இருப்பது
    சிறப்பா அல்லது வெறுப்பா?
    சாமனியன் பட்டிமன்றம் ஏற்பாடு செய்தால்
    கலந்து கொண்டு கலாய்க்க நான் தயார்!
    தமிழின் சிறப்பு ஏழுத்து ழ (ழகரம்)
    தன்னிகரில்லாத தமிழன் நிச்சயம் இதை அறிவான்.
    பழம் உண்டுவிட்டு பின்பு....வாழைப் பழத் தோலாக எண்ணி...
    தூக்கித் தூர வீசினாலும் நிச்சயம் ஒருநாள் (தமிழ் - ழ)வழூக்கி விழுவார்கள்.

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேலு அவர்களே !

      பட்டிமன்றத்தில் கலாய்ப்பதா ?! நடுவரே நீங்கள் தானே !!!

      தமிழை தூக்கி எறிந்தால் தமிழன் நிச்சயமாய் வழுக்கிதான் விழுவான்... மீன்டும் எழ முடியாத வகையில் !!!

      சாமானியன்


      Delete
  9. சங்கம் வைத்தெல்லாம் தமிழ் வளர்க்க வேண்டாம், தமிழை தமிழாக பேசினாலே போதும் ! தமிழ் தானாக வளர்ந்துவிடும் !
    உண்மையிலேயே உண்மையான வார்த்தை நண்பா..
    இதை படித்ததும் எனக்கு ‘’பகீர்’’ என்றது காரணம் ? அடுத்த பதிவாக வெளியிட நானும் ஒன்று தயார் செய்து வைத்திருந்தேன் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கிறது தங்களது பதிவு உண்மையில் தாங்கள் முந்திவிட்டீர்கள் என்ற கோபமும்கூட அது எப்படி ? நண்பா ! இருவருக்குமே ஒரே மாதிரியான சிந்தனை ? ஏதும் பூர்வஜென்மபந்தம் என்பார்களே ! அதுவாக இருக்குமோ ? மொழிகளின் வலிகள் என்மனதில் எப்பொழுதுமே ஆறாத, ரணமாக இருக்கிறது இப்பொழுது அதை திருத்தம் செய்வதில் இறங்கியிருக்கிறேன் என்ன ஒன்று நான் ஹிந்தியை ஆதரித்திருக்கிறேன் அதற்காக தமிழ் பற்று இல்லாதவன் என நினைக்கவேண்டாம் தமிழ் என்வாழ்வில் நிரந்தமானது ‘’தமிழ்’’ என்ற மந்திர வார்த்தையை நான் எழுதாமலோ, படிக்காமலோ, உச்சரிக்காமலோ ஒருநாள் கூடகழிந்ததில்லை (எனது முகநூலின் பெயர்கூட தமிழ் தமிழன் தான்) ஹிந்தியின் அவசியத்தை நான் வழியுருத்தியிருக்கிறேன் அவ்வளவுதான் தங்களின் தலைப்புகூட எனது தலையை பிய்க்கவைத்து விட்டதே காரணம் எமது தலைப்பு.
    சரி போய்ட்டு போங்க ! ஆப் மேரா ஸுந்தர் தமிழ் பாஷாவாலா ஹேனா, ஆப் மேரா பாய், இஸ்லியே க்யா கர ஸக்தே ? ஆப் பௌத் தூர் பீ ஹே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வார்த்தைகளுக்கு நன்றிஜீ !

      ஆனால் ஒன்று... நிச்சயம் நீங்கள் உங்கள் பதிவையும் வெளியிட வேண்டும். கரு வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம் நண்பரே... ஆனால் உங்களின் கண்ணோட்டம் நிச்சயம் வேறுபடும். உங்கள் பாணியில் சிறப்பாக அமையும். இதுதான் வலைப்பூக்களின் பலமும் கூட ! உங்கள் பதிவை படிக்க ஆவலாக உள்ளேன்.

      மற்றொரு இந்திய மொழியாக ‍ஹிந்தியை ஆதரிப்பதிலோ, கற்றுக்கொள்வதிலோ குறையொன்றும் இல்லை நண்பரே ! ஆனால் அந்த ஒரு மொழிக்காக நாட்டின் மற்ற அத்தனை மொழிகளையும் காவு கொடுக்க நினைப்பதில்தான் பிரச்சனை தொடங்குகிறது ! மேலும் நமது ஆங்கில மோகம் !!!

      அதுசரி... பின்னூட்டத்தின் கடைசியில் ஏதோ கண்டபடி திட்டியிருக்கீங்களே... அதை கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்கஜீ !

      நன்றி
      சாமானியன்

      Delete
    2. நண்பா, தங்களை திட்டியிருப்பேன் எனநினைக்கிறீர்களா ? தங்களுக்கு ஹிந்தி தெரியும் 80 எனக்குதெரியும்.
      இருப்பினும் ஹிந்தி தெரியாதவர்களுக்காக....

      தாங்கள் என்இனிய தமிழ்மொழிக்காரர் அல்லவா, என் சகோதரரும்கூட ஆகவே என்ன ? செய்யமுடியும் நீங்க ரொம்ப தூரமாவும் இருக்கீங்க.

      இவ்வளவுதான். தற்போது எனது '' எனக்குள் ஒருவன்'' படிக்கவும்.

      Delete
    3. ஏன் அப்படி நினைச்சீங்கன்னு தெரியல... 80 அல்ல 100 சதவிகிதம் எனக்கு ஹிந்தி தெரியாது !!!!!!!!!!!!!! ஆனால் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் இருப்பது உணமை !

      நிச்சயமாக திட்டியிருக்கமாட்டீர்கள் என தெரியும் ! அதே நேரத்தில் புரியவில்லை என்பதால்தான் கேட்டேன்.

      சாமானியன்

      Delete
  10. முதன் முறையாகத் தங்களின் தளத்திற்கு வருகின்றேன்
    அருமையான பதிவு நண்பரே
    இனி தொடர்வேன்
    தமிழைத் தமிழாகப் பேசுவோம்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி ஐயா.

      நமது நட்பு தொடரும் !

      சாமானியன்

      Delete
  11. தான் தமிழன் என்ற உணர்வுள்ளவன்
    தமிழை என்றுமே மறக்க மாட்டான் சாமனியன்.

    உங்களின் பதிவு மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. " தான் தமிழன் என்ற உணர்வுள்ளவன்
      தமிழை என்றுமே மறக்க மாட்டான் சாமனியன்...

      உண்மை அருணா செல்வம் அவர்களே,

      மறக்காதிருந்தால்தான் மறையாதிருப்போம் !

      நன்றி
      சாமானியன்

      Delete
  12. தாய்மொழியில் பேசுவதை கேவலமாக கருதும் தமிழர்கள் நிறைந்த மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு! பலர் தங்கிலீஷ் என்னும் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசும்போது மிக எரிச்சலாக உணர்ந்திருக்கின்றேன்! தாய்மொழியை முதலில் நன்கு பேசக் கற்றுக்கொண்டால் பிறமொழிகள் தானே வசப்படாதா? பல மொழிகள் கற்பதில் தவறில்லை! இன்றைய சமூகம் போகிற பாதைக்கு அது உதவும். அதே சமயம் தமிழை மறந்துவிடவும் கூடாது. மிக அருமையான பதிவு! உங்களுடைய ல-ள ந-ண-ன குழப்பத்திற்கு என்னுடைய தமிழ் அறிவு எப்படி என்ற தொடரில் விளக்கம் இருக்கிறது. முந்தைய பகுதிகளில் தேடிப்பார்க்கவும். மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் நண்பரே !

      இந்த தமிங்கிலீஸ் தான் பிரச்சனை !

      உங்களின் " தமிழ் அறிவு எப்படி " பதிவை நேற்றுதான் படித்தேன். பாதுகாக்கவும் வேண்டிய முக்கியமான பதிவு.

      உங்களை போன்றவர்கள் வலைப்பூக்களின் மூலம் செய்யும் தமிழ் சேவை பாராட்டுக்குரியது.

      நன்றி
      சாமானியன்

      Delete
  13. விரிவாக பேச நிறைய உள்ளது. ஆனால் ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் மிக மிக அற்புதமான பதிவு. எதார்த்த மொழிகள் இதன் சிறப்பின் அடையாளம். நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே !

      இனி வரும் பதிவுகளை இன்னும் நன்றாக கொடுக்க வேண்டும் என்ற பொறுப்புமிக்க பயத்தை தோற்றுவிக்கிறது உங்களை போன்றவர்களின் வருகைகள்.

      நன்றி
      சாமானியன்

      Delete
  14. மெத்த படித்த தமிழ் மேதைகளே ! அப்படியென்றால் படிக்காத, அல்லது அறைகுறை படித்தவர்களை என்ன சொல்வது, தமிழ் வளர்ந்த வளர்த்த தமிழ்நாட்டிலே தமிழ்மோகம் மறைந்து ஆங்கிலமோகத்தை அரசாங்கமே டாஸ்மாக் மாதிரி நடத்துகிறது இதற்க்காக தமிழ்ஆர்வலர்கள் மற்றும் தமிழ் பற்றாளர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். போகிற போக்கை பார்த்தால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் வீடுகளில் மட்டும் தமிழ் பேசிக் கொள்வது மாதிரி தமிழ்நாட்டிலும் விரைவாக வரலாம். தமிழன் என்று சொல்லாதடா....தமிழில் பேசதடா......என்று

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலிப்போக்கன்,

      " ஆங்கிலமோகத்தை அரசாங்கமே டாஸ்மாக் மாதிரி நடத்துகிறது "

      உங்கள் பாணியில் நச்சென நெற்றியில் அடித்துவிட்டீர்கள் ! உண்மைதான்.

      ஆனால் நாமெல்லாம் நினைத்தால் இந்த "வலியையும் போக்கலாம்" தானே ?

      நன்றி
      சாமானியன்

      Delete
  15. நிதர்சனத்தைச் சொல்லும் உணர்வு பூர்வமான பதிவு....

    எழுத்துத் தமிழில் இலக்கண சுத்தம் இருக்கிறதோ இல்லையோ, ஆங்கிலக் கலப்பு சற்று குறைவாகவே உள்ளது - இது பத்திரிக்கைகள், இணைய தள பதிவுகள் அனைவற்றிற்கும் பொருந்தும்! வழக்கு / பேச்சுத் தமிழில் இலக்கணம் இல்லாதிருப்பது பிரச்சினை இல்லை; ஆனால், அந்நிய மொழியான ஆங்கிலம் கலவாமல் "தமிழில்" பேசுவது, ஏதோ அந்நிய மொழியில் பேசிக் கொள்வது போன்றதான பிரம்மையை நமக்குத் தருவது தான் சோகம் :(

    நான் மேலே சொல்லி இருக்கும் விஷயத்தையே, நேரில் சந்தித்து உங்களிடம் சொல்லி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கிறேன்...

    "Fact ஜி" என்று ஆரம்பித்து..... "இங்கிலீஷ் மிக்ஸ் பண்ணாம பேசறது, ஏதோ ஃபாரின் லாங்க்வேஜ்ல பேசிக்கிற மாதிரி ஒரு பீலிங்..." என்று சொல்லி இருப்பேனோ?! :(

    என் தாய்மொழி சௌராஷ்டிரா... அதே அளவு, எண்ணத்திலும் சரி... உள்ளத்திலும் சரி... தமிழும் என் தாய் மொழியே! சௌராஷ்டிர மொழிக்கு நேர்ந்திருக்கும் அவல நிலை (அதைப் பற்றி பேச பல பதிவுகள் தேவைப் படும்), என் மற்றொரு தாய் மொழியான தமிழுக்கு நேரக் கூடாது... நேராது!

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையான பார்வை கார்த்திக் !

      " அந்நிய மொழியான ஆங்கிலம் கலவாமல் "தமிழில்" பேசுவது, ஏதோ அந்நிய மொழியில் பேசிக் கொள்வது போன்றதான பிரம்மையை நமக்குத் தருவது தான் சோகம் "

      பல சமயம் நான் உணர்ந்து, இந்த பதிவில் சேர்க்க மறந்ததை மிக சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள் !

      உங்கள் பின்னூட்டத்தின் கடைசி வரிகள் மூலம் என்னை நெகிழவைத்துவிட்டீர்கள் நண்பரே. இதனை வார்த்தைகளுக்காக சொல்லவில்லை. இந்த பதிவு இவ்வளவு விரிவான பின்னூட்டங்களை கொண்ட சலனத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்கவில்லை. முத்தாய்ப்பாக உங்கள் கருத்து !

      நன்றி
      சாமானியன்

      Delete
  16. மிக மிக அருமையான ஒரு பதிவு! ஆழ்ந்து வாசித்தோம்! (வாசித்தல் என்பதற்கும் படித்தல் என்பதற்கும் இடையில் ஒரு சிறு கோடு உண்டு! சரிதானே?)
    //நமக்கு ஆங்கிலம் தெரியும் என காட்டிக்கொள்வதிலும், பேசுவதிலும் அலாதி பிரியம் ! இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தமிழர்களில் ‍ஹிந்தி தொடங்கி மற்ற இந்திய மொழிகளை கற்றவர்கள் கூட தங்களின் ஆங்கில அறிவை வெளிப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இந்திய மொழிப்புலமையை வெளிக்காட்டுவதில்லை ! // 100% உண்மைதான் அதுவும் பிற மானிலத்தவர்களை விட தமிழ்நாட்டவர்கள் கொஞ்சம் அதிகம்தான்! இதில் ஒன்று நாம் கவனிக்க வேண்டும். நாம் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் வலைத்தளங்கள் எல்லாமே நல்ல தமிழில்தான் இருக்கின்றன. பார்க்கப்போனால் நாம் நிறைய தமிழ் வார்த்தைகளையும் கூடக் கற்றுக் கொள்கின்றோம் மட்டுமல்ல அவற்றை நம் பதிவுகளில் உபயோகிக்கவும் செய்கின்றோம்! பேசும் போதுதான் நாம் தமிழில் ஆங்கில வார்த்தைகள் கலக்கின்றோம்! என்பதே எமது பார்வை! சரியா? தூய தமிழில் நீங்கள் ஒருவரிடம் பேசிப் பாருங்கள்...உங்களைக் கண்டிப்பாக தமிழரே ஒரு மாதிரியாகத்தான் "இவருக்கு ஒருவேளை இவர் தமிழில் ஆய்வு செய்திருப்பாரோ? தமிழ் படித்து படித்து மறை கழண்டுவிட்டதோ" என்றுதான் நினைப்பாரே அல்லாமல்...உங்களைப் பாராட்டுபவர்கள் இருப்பார்களா என்றுச் தெரியவில்லை! இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு பேர் தமிழைக் காதலிப்பவர்கள்! நேசிப்பவர்கள்! வெறி அல்ல இங்கு சொல்லுவது! அதே சமயம் ஒரு இலங்கைத் தமிழருடன் பேசுங்கள்! அவர்கள் தமிழை அவ்வளவு அழகாகப் பேசுவார்கள்! ரூபன் தம்பியுடன் நாங்கள் முதலில் தொலபேசியில் பேசிய போது அவருக்கு எங்கல் தமிழ் கொஞ்சம் புரிவது கடினமாகத்தான் இருந்தது! அவரது தமிழ் கேட்க காதுக்கு இனிமையாகவும்...எங்களால் ஈடுகொடுத்துப் பேசவும் முடியவில்லை!

    எங்கள் இருவரில் (துளசிதரன், கீதா இருவரும் சேர்ந்துதான் எங்கள் வலைத்தளத்தில் எழுதுகின்றோம்....துளசி மலையாளம் தாய்மொழி. ஆனால் பிறந்து வளர்ந்து ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ்நாடுதான்! அதன் பின் தான் கேரள வாசம். ஆங்கில ஆசிரியர். கீதா - தமிழ் தாய் மொழி. மலையாளம் பேசத் தெரியும்.புரிந்து கொள்ளவும் தெரியும். தமிழ்நாட்டுவாசி! கல்லூரி நண்பர்கள்) ஒருவர் மலையாளம் தாய்மொழியானாலும் தமிழ் மேல் உள்ள பிரியத்தால் எழுதும் ஆர்வத்தால் எழுதத் தொடங்கினோம்.....
    எத்தனை மொழிகள் வேண்dஉமானாலும் கற்றுக் கொள்ளலாம்....பல மொழிக்ள் கற்றுத் தேர்ந்தால், அந்த மொழியில் இருக்கும் இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்தால் தமிழ் இன்னும் விரிவடையத்தான் செய்யும். எத்தனை மொழிகள் கற்றாலும், நாம் நமது தாய் மொழியை நேசித்தால் தமிழ் என்றுமே சாகாது! நாம் தமிழ் பேசுகின்றோமே தவிர நம்மில் எத்தனை பேர் தமிழ் இலக்கணத்தையோ இலக்கியங்களையோ நன்றாகக் கற்றிருக்கின்றோம்? இன்று நம் முத்துனிலவன் ஐயா அவர்கள் கேட்டிருந்த 25 கேள்விகளில் பல நம்மால் பதில் அளிக்க முடியவில்லைதான்! இன்னும் பேசிக் கொண்டே போகலாம்! தமிழைத் தரக் குறைவாக நினைக்காமல், தமிழைத் தூற்றாமல், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று இருந்தால் நல்லதுதான்!

    மிக அற்புதமான ஒரு பதிவு! உங்கள் பழைய பதிவுகளையும் ஒவ்வொன்றாக வாசிக்கிறோம். கணினியின் மெமரி குறைவாக உள்ளதால் மிகவும் தாமதமாகின்றது. தங்களைத் தொடர்கின்றோம்! தங்கள் வலைத்தளத்தை எங்கள் வலைத்தளத்தில் இணைத்துவிட்டோம்!



    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு. துளசிதரன் அவர்களே,

      இந்த பதிவை "வாசித்து",மிகச் சரியாக உள்வாங்கி நீண்ட பின்னூட்டமிட்டதற்கு என் நன்றிகள் பல.

      " தூய தமிழில் நீங்கள் ஒருவரிடம் பேசிப் பாருங்கள்...உங்களைக் கண்டிப்பாக தமிழரே ஒரு மாதிரியாகத்தான் "இவருக்கு ஒருவேளை இவர் தமிழில் ஆய்வு செய்திருப்பாரோ? தமிழ் படித்து படித்து மறை கழண்டுவிட்டதோ" என்றுதான் நினைப்பாரே அல்லாமல்... "

      யதார்த்தமான, கசப்பான‌ உண்மையிது !

      ஈழத்தமிழர்களின் மொழிப்பற்றும், அவர்களின் தமிழ் சேவையும் அசாதாரணாமானது. இன்று ஐரோப்பிய நாடுகள் தொடங்கி கனடா, ஆஸ்த்ரேலியா என உலகின் பல திக்கிலும் தமிழ் மொழி பற்றி தெரிந்திருப்பதற்கு அவர்களே முக்கிய காரணம். ( இந்த நாட்டினருக்கெல்லாம் இந்தியா என்றாலே வடபகுதி மட்டும்தான் ! தமிழ் நாடு எங்கிருக்கிறது என இன்றளவிலும் என்னிடம் கேட்கும் பிரெஞ்சுகாரர்கள் உண்டு ! )

      உங்களை பற்றிய அறிமுகத்தால் நெகிழ்ந்தேன். புதுவை மாநிலத்தை சேர்ந்த நான், எனது பதினேழாவது வயதில் பிரான்ஸ் வந்துவிட்டேன். ஓரிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாத காலம் விடுமுறைக்கு இந்தியா வருவதை தவிர இருபது ஆண்களுக்கும் மேலாக பிரான்ஸ்வாசம்தான் ! பால்ய வயதில் தமிழ் காமிக்ஸுடன் தொடங்கி இன்றும் தொடரும் வாசிப்பு பழக்கமே தமிழுடன் எனக்கிருக்கும் தொடர்பு ! சமூகம் பற்றிய எனது பார்வையை பதிவதற்காக இந்த வலைப்பூவினை ஆரம்பித்தேன்... உங்களை போன்றவர்களின் ஆதரவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை !

      நமது நட்பு தொடரும் !

      நன்றி
      சாமானியன்


      Delete
  17. சகோ welcome to India வில் தொடங்கி படபட பட்டாசாய் கலக்கியிருக்கிறீர்கள். ஆனா ஒரு ஐயம் ஒரு வேளை எனக்கு courtesy தருகிற பதிவு இதுவோ என்று!! நான் கொஞ்சம் இங்கிலீஷ் எழுறதுக்கு காரணம் என் வகுப்பில் தான் நடத்துவதை, நான் தெரிந்து கொண்ட சுவாரஸ்யமான விசயங்களை பகிர்வதர்காகத்தான். வரலாறை கூட அப்படிதான் எழுதுறேன், மேலும் விளக்கத்திற்கு http://makizhnirai.blogspot.com/2014/04/english-vi-english-through-popular-adds.html பாருங்கள்:(( மற்றபடி நானும் ஹிந்தியை பற்றிய அதே கண்ணோட்டத்தோடு தான் இருக்கிறேன். நன்றி சகோ!! நட்பால் தொடர்ந்திருப்போம்:))

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி !

      ‍ஹா... ‍ஹா..... இல்லை சகோதரி ! நான் குறிப்பிட்டது உண்மையான courtesy ! அது அடுத்த பதிவாக அமையும். ஆங்கிலத்தில் பேசுவதோ, மொழி விளக்க கட்டுரைகள் எழுதுவதோ தவறில்லை ! நான் சாடியது, தமிழில் மட்டுமே பேசினால் தரக்கூறைவு என்ற எண்ணத்துடன் அரைகுறை ஆங்கிலம் கலந்து பேசும் தமிங்கிலீஸ்காரர்களைதான் !

      சாமானியன்

      Delete
  18. google plus follower gadgetடும் இல்லை blog follower அமைப்பும் இல்லையே சகோ. நான் எப்படி உங்களை follow பண்ணுறது?

    ReplyDelete
    Replies
    1. அந்த குறை களையப்பட்டுவிட்டது சகோ !

      Delete
  19. சாமானியன் அவர்களுக்கு வணக்கம்

    இந்த பதிவை படிக்கும்போது என் மனவலியை உணர்ந்தேன். இது ஆதங்கமான உண்மை. உங்களை போல் மொழிபற்று உள்ளவர்களால் மட்டுமே வெளிச்சம் போட்டு உறக்கசொல்லி பதியமுடியும்.

    நானும் ஒரு முறை உங்களை போல் இந்திய தூதரகத்தில் மொழி பிரச்சனையை சந்தித்தேன், அப்போது ஊமை மொழியாம் உலக மொழி என்னை காப்பாற்றியது. இதற்கு வட இந்திய மக்களின் சிபார்சு தான் காரணம். இதில் கொடுமை என்னேவென்றால் அங்கும் தமிழர்கள் வேலை செய்கிறார்கள் - ஆனால் நம்மை கண்டுகொள்ள மாட்டார்கள் என்ன செய்வது ? இந்த பதிவை கண்டிப்பாக இங்குள்ள தமிழ் மன்றங்கள் காண்பார்கள் என்று நம்புவோம்.

    நான் சில தமிழ் மன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். இதுபோன்ற அமைப்புக்கள் தாங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு தமிழ்மொழியை கட்டாயமாக தான் வாரிசுகளுக்கு வீட்டில் நன்றாக பேச கற்றுதரவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும். (ஒரு சில மன்றங்கள் நீங்கலாக).
    இதை கேட்டோம் என்றால் பதில் 1. கொஞ்சம் கொஞ்சம் தெரியும். 2. கொஞ்சம் தமிப்ரேன்சு தெரியும். 3. தமிழே தெரியாது. 4. (மோசமான பழக்கம்) நன்றாக தெரிந்தாலும் பெருமையாக நினைத்து மொழியை கொதரி பேசி வெட்கத்தை மறைத்து நடிப்பர் - மறுபடியும் அதே கேள்வியை கேட்டால் மறுபடியும் வேறு மாதிரி கொதரல்தான்.
    இதைவிட கொடுமை நம்ம ஊருக்கு போனால் தமிழே தெரியாது. இதை நான் சில வீட்டில் பார்த்துவிட்டு மனவலியுடன் பகிர்கிறேன்.

    ஆனால் மனசாட்சிபடி பார்த்தால், மன்றங்கள் தமிழ் மொழி கலாசாரத்தை வளர்ப்பது போல் காட்டிக்கொண்டு, ---ஞர், ---வர் என சில பட்டங்களை சுகமாக சுமந்துகொண்டு, தான் என்ற கர்வத்துடன், -----கொண்டு ----கொண்டு மேலும் ---நலதுடன் ---வளதுடன் -------------- என்ன கொடுமை !!!!
    உங்கள் பதிவின் மூலம் வழி பிறகும் என நம்பூவோம்.

    sattia

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சத்யா அவர்களே !

      முதலில் உங்களுக்கு ஒரு சபாஷ் ! தமிழ் வார்த்தைகளை முதலில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்த நீங்கள் இப்போது தமிழில், அதுவும் கருத்துமிக்க, நீண்ட பின்னூட்டம் அளித்துள்ளீர்கள் ! மேலும் வளர்ந்து உங்களுக்கென ஒரு வலைப்பக்கம் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்.

      " இதில் கொடுமை என்னேவென்றால் அங்கும் தமிழர்கள் வேலை செய்கிறார்கள் ... "

      ஆங்கிலம், ஹிந்திக்கெல்லாம் முன்னால் தமிழுக்கு எதிரியாக நிற்பவர்கள் இவர்கள்தான் ! தமிழ் தெரிந்தாலும் சக தமிழனிடமும் தங்களின் அரைகுறை ஆங்கில புலமை காட்டும் மேதாவிகள் !!!

      மற்றவர்களை விடுங்கள், நாம நினைத்தால் சாதிக்கலாம். ( நேரமிருப்பின் எனது " நம்மால் முடியும் " பதிவை படித்து பாருங்கள். முயன்றால் முடியும் என்பதை சற்று விஞ்ஞானபூர்வமாகவே விளக்கியிருக்கிறேன். )

      நன்றி
      சாமானியன்

      Delete
  20. வணக்கம் சாமானியன் அவர்களே,
    வரவேற்புக்கு நன்றி, உங்கள் நம்மால் முடியும் பதிவை வாசித்தேன்.
    நல்ல கருத்தை நடைமுறை உதாரணத்துடன் விளக்கம் மற்றும் வீஞ்சான ஆய்வின் கருத்தை பதிவு செய்துளிர்கள்.
    அருமை.
    பல கைகள் சேர்ந்தால் மலையையும் மண்ணாகலாம். இது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.
    எப்பொழுது ஓட்டை விலைக்கு வாங்குபவனும், விற்பவனும், இருக்கும் வரையில்,
    நாம் எவ்வளவு முயற்சிதாலும், நம் மொத்த கூடாரத்தை எப்படியும் ஒரு அதிவருடி,
    ஒரு அடியாளுக்கு தேர்தல் கால குத்தகைக்கோ அல்லது சொந்த சுயநலத்துகோ விற்றுவிடுவான்.
    மறுபடியும் நாம் ஏமாந்தவர்களே,
    இருந்தாலும் முயற்சியில் வெற்றி கான உங்களை போல் நானும் வேண்டுகிறேன்.
    என் விமர்சனத்திற்கு பதில் பதிவு செய்ததேற்கு மிகவும் நன்றி.
    உங்கள் வலைதளத்தை அறிமுக படுத்திய புதுவை வேலு அவர்களுக்கும் நன்றி.

    sattia

    ReplyDelete
    Replies
    1. பல கைகள் சேர்ந்தால் மலையையும் மண்ணாகலாம். இது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.
      " எப்பொழுது ஓட்டை விலைக்கு வாங்குபவனும், விற்பவனும், இருக்கும் வரையில்,
      நாம் எவ்வளவு முயற்சிதாலும், நம் மொத்த கூடாரத்தை எப்படியும் ஒரு அதிவருடி,
      ஒரு அடியாளுக்கு தேர்தல் கால குத்தகைக்கோ அல்லது சொந்த சுயநலத்துகோ விற்றுவிடுவான்.
      மறுபடியும் நாம் ஏமாந்தவர்களே, "

      உங்களுக்கென ஒரு வலைப்பூ நிச்சயம் தேவை நண்பரே !

      சாமானியன்

      Delete
  21. மிக அரிய தேவையான கட்டுரை நண்பரே! எங்கள் பேராசிரியர் இரா.இளவரசு ஒரு முறை சொன்னார் -“ நான் ஒரு முறை நண்பர் ஒருவர் வீட்டில் சாப்பிடும்போது, “சோறு போதும்“ என்று சொன்னேன், தமிழர்கள் வழக்கமாகச் சொல்லும் “ரைஸ்போதும்” என்றோ, “சாதம்போதும்“ என்றோ சொலலாமல் நான் “சோறு“ என்று தமிழில் சொன்னதால் என்னைத் தாழ்த்தப்பட்டவரோ என்று வேறொரு நண்பரிடம் விசாரித்ததாகச் சொன்னார்... தமிழன் எப்படி ஆகிவிடடான் பாருங்கள்” இதுதான் உண்மை நிலை. இதுபோலும் கட்டுரைகள் தமிழர்களின் முரட்டுத் தோலை உணர்ச்சிவசப்படுத்த உதவும் என்று நம்புகிறேன். தொடரட்டும் உங்கள் பணி. தொடர்கிறேன் நானும்.
    'தாய் மொழியை மறைக்க நினைப்பது தன் தகப்பனை மறைப்பதற்கு சமம் ! சங்கம் வைத்தெல்லாம் தமிழ் வளர்க்க வேண்டாம், தமிழை தமிழாக பேசினாலே போதும் ! தமிழ் தானாக வளர்ந்துவிடும் !' - என்றது முத்தாய்ப்பு நண்ப, தொடர்க

    ReplyDelete
    Replies
    1. இது வெளியிடுவதற்காக அல்ல நண்பரே - தங்கள் கவனத்திற்கு-

      ஊமைக்கனவுகள் ஜோசப் ராஜூ அல்ல, விஜூ அன்பு கூர்ந்து திருத்திவிடுக.
      (நெடுநாள் கழித்து வந்தேன் கண்ணில் பட்டது, சொல்லத்தோன்றியது தவறாக நினைக்க மாட்டீர்கள் எனும் நம்பிக்கையில்..)

      Delete
    2. ஐயா த‌ங்களின் வருகை பெருமகிழ்ச்சி !

      ஆமாம் ! சுத்த தமிழில் பேசினால் ஒன்று தாழ்த்தபட்டவராக இருக்க வேண்டும் அல்லது படிப்பறிவில்லாதவர் என்ற முத்திரை ! இந்த நிலை உலகிலேயே தமிழுக்கு மட்டும் தான் என தோன்றுகிறது.

      உங்களின் பின்னூட்டத்தை படிக்கும்போது சகோதரர் ஜோசப் விஜூ அவர்களின் பின்னூட்டத்திலுள்ள சில வரிகளை இதனுடன் இணைத்துபார்க்க தோன்றுகிறது...


      " பல்லவர் காலத்தில் பாலி, சோழர் காலத்தில் சமஸ்கிருதம், நாயக்கர் காலத்தில் தெலுங்கு, ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் என ஆள்வோர் மொழி தமிழின் மீது செலுத்திய ஆதிக்கத்தினை மறுத்திட முடியாது. இதை எல்லாம் வென்றெடுத்துத்தான் தமிழ் வாழ்ந்து வந்திருக்கிறது. அன்றெல்லாம் படித்தவர்கள் எனக்கருதப்பட்டவருள் பெரும்பாலோர், தம் நலனுக்காக வந்தேறி மொழிகளுக்கு வால் பிடித்துத்தான் வந்திருக்கிறார்கள். வளர்ந்திருக்கிறார்கள். பட்டிக்காடுகள், பாமரமக்கள், இழிசனர் எனக்கருதப்பட்ட பெரும்பான்மை படிப்பறிவில்லா மக்களின் நாவிலிருந்துதான் தமிழ் மீண்டெழுந்தது. ஆளும் வர்க்கம் தான் எப்போதும் அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதில்லையே! " - ஊமைக்கனவுகள், ஜோசப் ராஜு.

      நன்றி
      சாமானியன்

      Delete
    3. " தவறாக நினைக்க மாட்டீர்கள் எனும் நம்பிக்கையில்.."

      அய்யா,

      உங்களிடம் பயிலும் வாய்ப்பு கிட்டவில்லையே தவிர, எனக்கும் நீங்கள் ஆசான் தான். உங்களை தவறாக நினைப்பதா ?!

      தவறை திருத்திவிட்டேன். இனி இது போன்ற தவறுகள் தொடராதிருக்க இன்னும் கவனமாக செயல்படுவேன்.

      நன்றியுடன்
      சாமானியன்

      Delete
  22. "தமிழனா? தமிங்கிலனா?" என்ற காசிஆனந்தன் அவர்களின் நூலைப் படித்தவர்கள் சாமானியன் அவர்களின் இவ்வாய்வுக் கட்டுரையை சிறந்த அலசல் எனப் பாராட்டுவர்.

    சாமானியன் அவர்கள் தமிங்கிலீசில் உளறுவதுதான் பிரச்சனை, கைத்தட்டல் பெறுவதற்கு மட்டுமே இலக்கணம் பயன்படுகிறது, டாடி மம்மி எனக் கூப்பிட வைக்கும் பெற்றோர்கள் எனப் பல நிலைகளில் தமிழின் நிலையை ஆய்வு செய்திருக்கிறார்.

    http://ypvn.0hna.com/

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      வலைப்பதிவை ஆரம்பித்ததிலிருந்து பல நல்ல நூல்கள் பரிச்சயமாகின்றன. உங்கள் மூலம் காசிஆனந்தன் அவர்களின் " தமிழனா ? தமிங்கிலனா ? ) நிச்சயம் படிப்பேன்.

      சாமானியன்

      Delete
  23. தமிழர்கள், ஆங்கிலத்தை அதிகம் பயன்படுத்துவதற்கான காரணங்கள் சில: (1) தமிழைத்தவிர, பிற இந்திய மொழிகளில், 'க' என்ற எழுத்திற்கு நான்கு ஒலிவடிவங்கள் உண்டு. ka, kha, ga, gha என்று. தமிழிலோ ஒன்றேதான்: 'க'. இதே போல், 'த', 'ப', இவற்றிற்கும் அப்படியே. இதனால் பெயர்ச்சொற்களை உரிய முறையில் உச்சரிக்க முடியாமல் மாணவர்கள் திண்டாடுகிறார்கள். 'கடம்' என்ற வாத்தியத்தின் பெயரை எவ்வளவு பேரால் சரியாகச் சொல்ல முடிகிறது? போபால் என்று எழுதினால் அதை Pobaal, Popaal, Bobaal, என்றுதானே படிக்கிறார்கள்! இதற்கான எழுத்துச் சீர்திருத்தம் செய்யப்படவேண்டாமா? (2) தமிழிலேகூட, ஒரே சொல்லை ஒவ்வொரு மாவட்டத்திலும், ஏன், ஒவ்வொரு சாதியிலும் வெவ்வேறு உச்சரிப்புகளோடு பேசுகிறார்களே! Fear என்பதை 'பயம்' என்று எழுதிவிடலாம். ஆனால், தென்தமிழ்நாட்டில் இதை 'payam' என்று கூறுகிறார்கள். மீதியுள்ள தமிழர்கள் ' bayam' என்கிறார்கள். எனவே, தமிழைப்படிக்க வருகிற மாணவன், இந்தத் தொந்தரவே வேண்டாமென்று ஆங்கில மீடியம் படிக்கப் போய்விடுகிறான். இது பற்றி யாராவது சிந்தித்தார்களா? ஆங்கில அகராதியை எடுத்தால், ஒவ்வொரு சொல்லுக்கும் 'உச்சரிப்புக் குறிப்பு' கொடுத்திருப்பார்கள். தமிழில் அம்மாதிரி அகராதி உண்டா? இதை ஏன் தமிழறிஞர்கள் செய்யவில்லை? (3) தமிழுக்கு இலக்கணம் உண்டு. ஆனால், அது, கவிதைக்கு மட்டுமே. தமிழ் உரைநடைக்கு இதுவரை இலக்கணம் இல்லை. எனவே தான், கவிதைக்கு எழுதப்பட்ட இலக்கணத்தையே உரைநடைக்கும் பொருந்துவதாக ஒரு மாயையை உண்டாக்கியிருக்கிறார்கள். இந்த மாயையின் முக்கிய விளைவாக 'ஒற்றுப்பிழை' என்ற இல்லாத ஒன்றை இவர்களே உருவாக்கி, தங்களையும் மாணவர்களையும் பாடுபடுத்திவருகிறார்கள். 'வல்லெழுத்து மிகுதல்' என்பது உரைநடைக்கு ஏற்பட்ட இலக்கணம் அல்ல - என்பதைத் துணிந்து சொல்ல எந்தத் தமிழறிஞரும் முன்வராதது ஏன்? உரைநடையில், இரண்டு சொற்கள் சேரும்போது, வல்லெழுத்து மிகாமல் எழுதினால் கருத்து வேறுபாடு விளையக்கூடும் என்று கருதும் இடங்களைத்தவிர, மற்ற இடங்களில், வல்லெழுத்து மிகவேண்டியதில்லை - என்று உறுதியாகச் சொல்ல ஏன் எவரும் முன்வரவில்லை? (4) இந்த மூன்று காரணிகளையும் ஆய்ந்து செயல்படுத்தினாலொழிய, எதிர்காலத்தில் யாரும் தமிழ் படிக்க முன்வரமாட்டார்கள் என்பது உறுதி. தமிழ் படிக்கத் தமிழர்களே முன்வாராமல் இருப்பதன் காரணம், தமிழ் மொழியின் இல்லாமையே என்பதை முதலில் அங்கீகரிக்கவேண்டும். அதுவே நாம் தமிழுக்குச் செய்யவேண்டிய முதல் தொண்டு. -கவிஞர் இராய செல்லப்பா.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      தங்களின் வருகைக்கும் ஆய்வுப்பூர்வமான கருத்துக்கும் நன்றி.

      ஒரு மொழியின் ஒரே சொல்லை பல்வேறு உச்சரிப்புகளில் பேசுவது அனைத்து மொழிகளிலுமே உள்ளதுதானே.

      "...எனவே, தமிழைப்படிக்க வருகிற மாணவன், இந்தத் தொந்தரவே வேண்டாமென்று ஆங்கில மீடியம் படிக்கப் போய்விடுகிறான்... "

      உச்சரிப்பு பிரச்சனையைவிட தமிழ் படித்தால் தமிழ் வாத்தியாராக போவதை தவிர வேறு வேலையில்லை என்ற நிலையிருப்பதே மாணவர்கள் தமிழை தொடர்ந்து படிக்காத காரணமாக எனக்கு படுகிறது.

      நீங்கள் குறிப்பிட்ட எழுத்து சீர்த்திருத்தம், உச்சரிப்புக் குறிப்பு, மொழிக்கான உறுதியான உச்சரிப்பு கொள்கைகளை வகுப்பது போன்ற சங்கடங்கள் எல்லாம் உண்மைதான். இவைகளெல்லாம் மொழியின் குறைகளே அன்றி ஊனம் கிடையாது. மொழியின் எதிர்கால வளர்ச்சியை பற்றி பேசும் போது நிச்சயம் இந்த குறைகளை களையும் வழிமுறைகளையும் ஆராயத்தான் வேண்டும்.

      உங்களை போன்ற தமிழறிந்த பெரியவர்கள் ஒன்று கூடினால் இது நிச்சயம் சாத்தியமாகும் அய்யா.

      நன்றி
      சாமானியன்

      Delete
    2. கவிஞர். இராய செல்லப்பா அவர்களின் மனம்திறந்த, மொழி சீர்திருத்தம் வேண்டி நிற்கும் கருத்துக்ககளை வரவேற்கிறேன். திரு. சாமானியன் அவர்களின் வலைத்தளம் இக்கருத்துக்களுக்கு இடமளித்து நிற்பது கண்டு மகிழ்ச்சிதான்.
      ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு இயல்பு உண்டு. எல்லா மொழிகளும் பிற மொழிகளின் அனைத்து வார்த்தைகளையும் உச்சரிக்கும் எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டியதில்லை.அப்படிக் கொள்ளவும் முடியாது. தாங்கள் பிற இந்திய மொழிகள் எனக் குறிப்பிடுவது இந்தோ ஆரிய மொழிகளாக இருப்பின்,
      தமிழிலுள்ள ஐந்தெழுத்துக்கள் அம்மொழிக்குடும்பத்தில் இல்லை. அதற்காக நம் மொழியின் அந்த ஐந்து எழுத்துக்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இது முதலாவது.
      தமிழில், கப்பல் , கடம் , பகல், இம் மூன்றிடத்தும் வரும் “ க “ எனும் எழுத்து முறையே, /ka/. /ga/, /ha/ என மூன்று வெவ்வேறு ஒலியன்களால் ஆனது. தமிழ் - வடமொழித் தொன்மைக்கு ( சமஸ்கிருதம்) இதுவே ஆதாரமாகக் காட்டப் படுகிறது. ஏனெனில் இந்த அடிப்படை ஒலிகள் முதன் மொழியில் அல்லது மூலமொழியிலேயே அமைந்திருக்க முடியும். பின் வந்தது தானே தன்னை மேம்படுத்தி , அதிகமானதாகவும், நுட்பமானதாகவும் உள்ள ஒலிக்குறியீடுகளுக்கான எழுத்துருக்களை வகுத்தமைத்துக் கொள்ள முடியும் என்பதால்! இது ஒரு பார்வைதான். எல்லா மொழிகளிலும் Dialect எனக் கூடிய வட்டார மொழிகள் ஒரே மொழி எனப்பட்டாலும் மாறுபட்ட சொற்களஞ்சியங்களுடனும் ஒலி வேறுபாட்டுடன் தான் உச்சரிக்கப் படுகின்றன. ( இலங்கைத் தமிழையும் இந்தியத் தமிழையும் சான்று கொள்ளலாம்) ஆங்கிலமும் எந்த இந்திய மொழிகளும் இதற்கு விதிவிலக்கல்ல!
      இவ்வேறுபாடு அதிகமாகும் போது அவை தனிமொழியாக இனம் காணப்பட்டு மூல மொழியிலிருந்து பிரிந்து விடுகின்றன. கன்னடமும், களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்து ஒன்று பல ஆனதென சுந்தரம் பிள்ளை பின்னாளில் குறிப்பிடுவது இது கருதித்தான்!
      எல்லா மொழியிலும் தேவையில்லாத சில மரபுகள் தொடரத்தான் செய்கின்றன. உலகச் செல்வாக்குற்ற ஆங்கிலத்தில் கூட silent எனப்படும் எழுத்து எழுதப் படும் போது வரும். ஆனால் உச்சரிப்பில் வராது.ஏனென்று கேட்கும் மாணவரிடம் அது அப்படித்தான் அவர்கள் மரபு என்று கூறி அமர வைக்கப் பழக்கப்பட்டிருக்கிறேன்.
      அதற்காக, KNIFE என்பதை NIFE என எழுதினால் ஒத்துக்கொள்ள முடியாது தானே? இந்த எழுத்தைத் தவிர்த்துவிடுங்கள் என யாரும் குரல் கொடுக்காதது ஏன் ? தமிழில் வல்லினச் சிக்கலை நான் ஏற்கிறேன். கருத்து வேறுபாடு வரும் இடங்கள் எனக் கருதும் இடங்களை அறிய வேண்டுமாயின் வல்லினம் எங்கு வரவேண்டுமென அறிய வேண்டும் தானே! பொதுவாக ஒரு மொழியை வேற்றுமொழியினர் படிப்பதற்காகத்தான் உச்சரிப்பு அகராதிகள் எழுந்ததாகப் நினைக்கிறேன். Daniel jones இன் English pronunciation dictionary கூட ஆங்கிலம் கற்கும் அயலவர்களுக்கானதுதான். தமிழ் நாட்டில் தமிழுக்கு உச்சரிப்புடன் கூடிய அகராதி வரும் நிலை வந்து விடக் கூடாது என்பது என் நிலைப்பாடு. ஆனால் அதற்கான தேவையை மறுப்பதற்கில்லை.
      தமிழுக்கு நடைமுறை இலக்கணம் கூறும் தமிழண்ணல், நன்னன் போன்றோரின் சில நூல்கள் உள்ளன.
      ஆனால் அவற்றிற்கான போதாமையும், மேலதிகத் தேவையும் இன்னும் உள்ளது என்பதை நிச்சயமாய் ஏற்கவேண்டும்.
      தங்களைப் போன்று அறிவும் ஆர்வமும் தேடலும் தீர்வும் கொண்ட தமிழறிஞர்களால் மட்டுமே அது கூடுமென நம்புகிறேன். நன்றி!

      Delete
  24. மாறிக்கொண்டிருப்பதே மொழி ..
    அது உயிர்ப்போடு இருப்பதன் அடயாளம் அது..
    புள்ளிவைத்த எழுத்துக்கள் இல்லாத தமிழை இப்போது யோசிக்க முடியமா ?

    சாசரின், ஸ்பென்சரின் ஆங்கிலம் இப்போது நமக்குப் புரியுமா?

    எல்லா மொழிகளும் மாறிக்கொண்டே இருகின்றது.

    ஆங்கிலத்தை பேசுவதை உலகெங்குமே பெருமையாக கருதுகிறார்கள்.
    கொரியர்கள் தங்களது நாக்கை ஒன்னரை லெட்சம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள். அழகாக தெளிவாக ஆங்கிலம் பேசலாம் என்கிற நம்பிக்கையில். (மொழியியல் வல்லுனர்கள் தேவை இல்லை என்று சொன்னபொழுதும்)

    இப்படி உலகில் அனைவரையும் வசப்படுத்தும் மொழியாக ஆங்கிலம் வளர்திருக்கிறது. நாம் யோசிக்க நிறைய இருக்கிறது.

    ஆனால் தாய்மொழியில் படிக்கும் ரஷ்யர்கள் விண்வெளித்துறையில் சாதித்தை அமெரிக்கர்கள் சாதிக்க நாட்கள் ஆனதையும் (அவர்களது தொழில் நுட்பத்தை ரஷ்யா சிதைந்துடன் வாங்கினார்கள்)

    தாய்மொழி வலி பயிலும் ஜெர்மன்காரார்கள் தொழில்நுட்பம் ஒவ்டி, மெர்சிடீஸ் பென்ஸ், போக்ஸ் வாகன் என மிளிர்வது எப்படி என்றும் சிந்திக்கவேண்டும்.

    பிறமொழிகளும் அவசியம் ஆனால் தாய்மொழி சுவாசம் ...
    நாம் சுவாசிக்க மறந்துவிட்டோம் ..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் மது,

      மிகவும் யதார்த்தமான பார்வை மற்றும் யோசிக்க வைக்கும் முறையில் தொடங்கி அருமையாக முடித்துள்ளீர்கள்.

      " கல் தோன்றி மண் தோன்றா காலத்தே... " என சிலாகிக்கும் அதே நேரத்தில் இன்றைய தேவைக்கேற்ற வகையில் மொழியில் சீர்த்திருத்தமும் அவசியம்.

      " புள்ளிவைத்த எழுத்துக்கள் இல்லாத தமிழை இப்போது யோசிக்க முடியமா ?... "

      அருமையான உதாரணம்.

      சகோதரர் " ஊமைக்கனவுகள் " ஜோசப் ராஜு அவர்களின் " இருட்டில் மறைந்த விளக்கு " பதிவில் குறிப்பிட்ட வரிகளை இங்கு பதிக்க விரும்புகிறேன்...

      " படைப்பாளன் தன் கருத்தைக் கூறுவதற்கேற்ற வடிவத்தைத் தன் மனதிலிருந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். அவ்வடிவங்களை ஆராயும் இலக்கண நூல்கள் அதிலிருந்து புதிய வடிவத்திற்கான பொதுமையான இலக்கண விதிகளை வகுத்துக் கொள்கின்றன. சில வடிவங்கள் நிலைபெறுகின்றன. சில வடிவங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில வடிவங்கள் கால ஓட்டத்தில் அழிந்து விடுகின்றன... "

      இலக்கணமும் காலத்திற்கேற்ப மற்றத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியதுதான்.

      ஆமாம் ! நாம் நிறைய சிந்திக்க வேண்டும்... உணர்ச்சிவசப்படாமல் !!!

      நன்றி
      சாமானியன்

      Delete

  25. வணக்கம்!

    தாய்மொழியைப் பேணாத தமிழன் தன்னைத்
    தறுதலையன் என்றுரைப்பேன்! ஆசை பொங்கிக்
    காய்மொழியைக் கழிமொழியைக் கற்றுத் தோ்ந்து
    கனிமொழியைக் கற்காமல் இனத்தைச் சாய்ப்பான்!
    வாய்மொழியை வளமாக்க வேண்டும்! நம்மின்
    வாிமொழியை மணமாக்க வேண்டும்! மீறி
    நாய்மொழியை நாிமொழியைக் கலப்பான் தன்னை
    நடுத்தெருவில் என்கவிதை சுட்டுத் தள்ளும்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் கவிதைக்கும் நன்றிகள் பல.

      சாமானியன்

      Delete
  26. வணக்கம்.தங்கள் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகி உள்ளது!
    //http://blogintamil.blogspot.in/2014/07/welcome-and-farewel.html//
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உடனடியாக சென்று பார்த்துவிட்டேன் சகோதரி !

      நன்றிகள் பல !

      சாமனியன்

      Delete
  27. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூவலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

    அறிமுகப்படுத்தியவர்-மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை


    பார்வையிட முகவரி-வலைச்சரம்

    -நன்றி-


    -அன்புடன்-


    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன் !

      வலைச்சரத்தில் என் வலைப்பூவினை கண்டு, எனக்கும் அறிவிக்கும் அன்பு பெரியது !

      நன்றி
      சாமானியன்

      Delete
  28. பட்டிமன்ற தமிழ் .... சாட்டையடி.. அருமையா சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே !

      சாமானியன்

      Delete
  29. அய்யா,

    உங்களின் வாழ்த்துக்கு நன்றி.

    சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கனுக்கு நான் அளித்த பின்னூட்டத்தில் குறிப்பிட்டதை இங்கேயும் பதிகிறேன்...

    உங்களை போன்றவர்களின் ஆதரவு மிக பெரிது !

    சாமானியன்

    ReplyDelete
  30. வலைச்சரம் வாயிலாக வந்தேன் வாழ்த்துக்கள் ....! நிச்சயம் மீண்டும் வந்து வாசிக்கிறேன்.
    அமோகமகமாக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் ...!

    ReplyDelete
  31. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    சாமானியன்

    ReplyDelete
  32. அருமையான பதிவு பல இடங்களின் பஞ்ச் டு நெஞ்ச். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிங் ராஜ் அவர்களே.

      சாமானியன்

      Delete
  33. வேற்று நாடுகளில் வாழ்பவர்களுக்குப் புரியும் ஒவ்வொரு நாட்டவரும் தமது மொழி மேல் கொண்டிருக்கும் பற்று. அவர்கள் தேவை என்றால் மட்டுமே ஆங்கிலத்தைப் பிரயோகிப்பார்கள். ஒவ்வொரு மொழிகளையும் ரசிப்பார்கள். ஆனால் தமது தாய்மொழிக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். வளருகின்ற சமுதாயம் கூட தாய்மொழி தெரியாவிட்டால் கேவலம் என்றே நினைப்பார்கள். தாய்மொழியை வீட்டில் பேசுங்கள், சொல்லிக் கொடுங்கள் என்றே பெற்றோர் பணிக்கப்படுகின்றனர். ஆயினும் பெற்றோரே பிள்ளைகளை ஆங்கிலத்தில் பேசுவதற்கு திணிக்கின்றனர். இதன்மூலம் தாமும் பேசப்பழகிப் பெருமை காட்டலாம் என்று எண்ணுகின்றனர். மொழி ஒருபுறம் இருக்க கலாச்சாரம் சொல்லத் தேவை இல்லை. உங்கள் பதிவு மிக ஆழமாக மக்கள் மத்தியில் பதியட்டும். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம். இது போன்ற ஒரு பதிவு நானும் இட்டுள்ளேன். வாசித்துப் பாருங்கள். இதுபோல் கலாச்சாரம் பற்றி எனது மகள் ஜெர்மனியில் இருந்தபடி கேட்ட கேள்விகளை கலைஞருக்குக் கடிதமாகத் தந்துள்ளேன். படித்து உங்கள் மனப்படிவைத் தாருங்கள்..

    http://www.gowsy.com/2012/12/blog-post_3965.html

    http://www.gowsy.com/2010/10/blog-post_9959.html

    ReplyDelete
  34. நல்ல பதிவு.நல்ல பதிவு. இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் எத்தனையோ தாக்குதல்களை சந்தித்து விட்டது. இடைக்காலத்தில் கிரந்த எழுத்து என்ற பெயரில் முழுமையாக வட மொழி கலந்தும் பிறகு மீண்டெழுந்துள்ளது. தற்போது ஆங்கிலத்தின் தாக்கத்தையும் எதிர் கொள்ளும் என நம்பலாம்

    ReplyDelete
  35. அன்புடையீர் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கிறது
    வாழ்த்துக்கள்

    இங்கே கிளிக்குக

    ReplyDelete
  36. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் ஐந்தாம் நாள் - "வேருக்கு நீர் ஊற்றுவோம்"
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  37. இப்படியொரு பதிவுக்காக முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா! மிக அருமை! சராசரித் தமிழ் மக்கள் முதல் நடிகைகள், எழுத்தாளர்கள் வரை எல்லாரையுமே ஒரு காய்ச்சுக் காய்ச்சி விட்டீர்கள். ஆனால், தமிழில் பிறமொழிச் சொற்களை ஏற்கலாம் என்கிற தங்கள் கருத்துத்தான் வியக்கவும் வருந்தவும் வைக்கிறது. நீங்களே கூறுகிறீர்கள், இயல்பாகப் பேச வேண்டிய இடத்தில் கூட எதற்கு ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று. அப்படிப் பார்த்தால், இன்றைய தலைமுறையினருக்கு அஃது இயல்பானது இல்லையா? வேற்று மொழிச் சொற்களை ஏற்பது எனத் தொடங்கிவிட்டால், எவ்வளவுதான் ஆங்கிலம் கலந்து பேசினாலும் அதை நாம் தவறெனச் சொல்லவே முடியாதே!

    ReplyDelete