பாலகுமாரன் என்றதுமே எனக்குச் சித்திக் அண்ணன் மற்றும் ஆனந்தின் ஞாபகங்கள் மனதில் பொங்கும்.கல்லூரியில் யதார்த்தமாய்க் கிடைத்த பாலகுமாரனின் நாவல் ஒன்றினை படித்ததிலிருந்து அவரது நாவல்களுக்கு அடிமையாகிப்போன சித்திக் அண்ணன் அதற்கு முன்னர்த் தினசரிகள் வாசிக்கும் பழக்கம் கூட இல்லாதவர் ! பிரான்ஸில் நட்பான ஆனந்துக்குப் பாலகுமாரனின் எழுத்துகள் மட்டுமே வேதம் ! உலக இலக்கியம் பேசினால்கூட அதுவும் பாலகுமாரனின் எழுத்தில் உண்டு என உதாரணம் காட்டக்கூடியவர் !
பாலகுமாரனின் படைப்புகள் இலக்கியத்தில் சேரும் சேராது என அவரது மெர்க்குரிப்பூக்கள் வெளிவந்ததிலிருந்து இன்றுவரை சர்ச்சைகள் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் சினிமா நட்சத்திரங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் மட்டுமே சேரக்கூடிய அதிதீவிர ரசிகர்களுக்கு ஈடாக, சித்திக், ஆனந்த் போன்ற வாசகர்களைக் கொண்டிருந்த ஒரே எழுத்தாளர் பாலகுமாரனாக மட்டும்தானிருக்க முடியும் ! தினசரிகள், வார மாத இதழ்களுடன் ஜோதிட சமையல்கலை புத்தகங்கள் நிரம்பி வழியும் தமிழ்நாட்டு பேருந்து நிலைய புத்தகக் கடைகளில் க்ரைம் எழுத்தாளர்கள் தவிர்த்து ஏகபோக இடம் பிடித்த முதல் எழுத்தாளர் பாலகுமாரன் தான் ! அவரது வாசகர்கள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பரவியிருந்தனர்.
சமூகத்தின் சகலவிதமான மனிதர்களின் குணநலன்களையும் விருப்பு வெறுப்பின்றிக் குறுக்குவெட்டு பார்வையாய் நோக்கிய பாலகுமாரனின் எழுத்து, மனித உறவுகளை, அதன் சிக்கல்களை, அச்சிக்கல்களைத் தாண்டி அனைத்து மனங்களிலும் நிரம்பி வழியும் அன்பை வெளிக்காட்டியது. சக மனிதனை தான் படித்ததைப் போலவே தன் வாசகனையும் படிக்க, நேசிக்கப் பழக்கினார் பாலகுமாரன். தன் கதை மாந்தர்களின் வழியே சமூகத்தின் இருட்டுப் பக்கங்களைக் கூட எந்தவிதமான ஒழுக்கப் போதனைகளுமின்றி வாசகனுக்குக் காட்சிபடுத்த அவரால் முடிந்தது. லாரியிலிருந்து இறக்கும் முதல் அரிசிமூட்டையைக் கிடங்கு பெருக்கும் பெண்களுக்காகக் கிழித்துவிடும் கூலித்தொழிலாளியின் இரக்கத்தை வாசகனுக்கு உணர்த்த முடிந்த பாலகுமாரனால் மெர்க்குரிப்பூக்கள் நாவலின் தொழிற்சாலை முதலாளியின் மனதில் ஒளிந்திருந்த ஈரத்தையும் வெளிக்காட்ட முடிந்தது !
காதலை கர்வமாய், காமத்தை பாவமாய்ப் பாவிக்கும் சமூகத்துக்கு " காதல் என்பது விட்டுக்கொடுத்தல், காதலுக்காகக் காதலையே விட்டுக்கொடுத்தல் " என இடையறாது உணர்த்த முயன்றன அவரது படைப்புகள். அதீத காமம் வேறு காரியங்களில் ஈடுபடாதபடி மனதின் சமன்பாட்டைக் குலைத்துவிடும் எனக் காமத்தை உளவியல்ரீதியில் விளக்கியது அவரது எழுத்து.
பல்வேறு ஒழுக்கக் கோட்பாடுகளையும் போதனைகளையும் கொண்ட ஒரு சமூகத்தில் தன் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாய்க் காட்ட, சமூகம் குற்றமாய்க் கருதும் செயல்களைக் கூட இதை இதைச் செய்தேன் என்று ஒரு செய்தியாய் பகிர எத்தனை பிரபலங்களால் முடியும் ? மனிதத்தின் மீது பற்றுக்கொண்டு, தன் சமூகத்தின்பால் பேரன்பு கொண்ட ஒருவனால் மட்டுமே அசைவ உணவகத்தில் கறியை ஒதுக்கிவிட்டு பிரியாணியைச் சாப்பிட்டுப் பின்னர்ப் பசிஅடங்காமல் கறியையும் சாப்பிட்டதையும், விலைமாதுவை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கவிதை வாசித்துக் காட்டியதையும் இதுதான் நான் கடந்து வந்த பாதை என எழுத்தோவியமாய்த் தீட்ட முடியும். சமூகம், வரலாறு, ஆன்மீகம் என அவரது படைப்புகளின் களங்கள் மாறினாலும் அவைகள் அனைத்திலும் பிரதிபலன் இல்லாத பேரன்பு பரவியிருக்கும்.
உடம்பிலிருந்து வெளியேறிய எழுத்துச்சித்தரின் ஆன்மா அவரது படைப்புகளின் வழியே பேரன்பின் பெருஞ்சுடராய் என்றென்றும் ஒளிர்ந்திருக்கும்.
பட உதவி : GOOGLE
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.
கடைசி வரை எழுதிக் கொண்டே இருந்தார். இரண்டாம் உலகப்போர் பற்றிய வெள்ளைத்துறைமுகம் என்றொரு படைப்பை பல பாகங்களாய் எழுதத் திட்டமிட்டிருந்தார் என்று படித்திருக்கிறேன். அவர் இழப்பு வருத்தமான நிகழ்வு.
ReplyDeleteஎழுத்துக்களின் மூலமாக அவர் நம்முடன் உள்ளார்.
ReplyDeleteஅருமையான பதிவு சாமானியன் அவர்களே, நீங்கள் சொன்ன அதே ஆனந்தின் மூலம் அறிமுகம் ஆன பாலகுமாரன் தான் எனக்கும். பள்ளி பருவத்திலேயே படித்ததினால்,அவர் கதைகளில் வரும் விவாதம் எனக்கும் மற்றவர் நிலையிலிருந்து ஒரு விசயத்தை யோசிக்க வைத்தது. பிரமிக்க வைக்கும் எதார்த்த எழுத்து! பெரிய இழப்பு.
ReplyDeleteகுரு
சாம்: உங்க எழுத்துச் சித்தர் இண்டெர்வியூ!
ReplyDelete///அப்படியானால் யோகி ராம்சூரத் குமாரிடம் போனது எப்படி?
ஒரு முறை திருவண்ணாமலைக்குப் போனபோது, அவரைப் பார்க்கப் போனேன். ""நாட் நவ். லேட்டர்''- இப்போது அல்ல. பின்னர் - என்று என்னை அனுப்பிவிட்டார். இரண்டாவது முறை போனபோது நமஸ்காரம் பண்ணினதும் போகச் சொல்லிவிட்டார். மூன்றாவது தடவை போனபோது, ""எதுக்காக வந்தே இங்கே காசு, பலம் எதுவும் இல்லே'' என்றார். கடவுள் தெரியாது. இருக்காரா, இல்லையா? கடவுளைக் காண்பித்தால் போதும் என்றேன்.
பதறிவிட்டார். முதுகில் கையால் தடவிக்கொண்டே, குண்டலினியைத் தொட்டார் என்பது தெரிந்தது. உடம்புக்கு அப்புறம் மனம் போயிற்று. எல்லாவற்றிலும், நாய், பூனை, மாடு என்று பிராணிகள் உட்பட, எல்லாவற்றிலும் உடலைத் தாண்டிப் பார்க்க முடிந்தது. பல முறைகள் இப்படி நேர்ந்திருக்கிறது. அது மரண அனுபவம். உச்சிக்கு ஏற்றி வைத்த பரவச நிலை உண்டாயிற்று. மயக்கக் கலக்கம் மாதிரி அந்த நிலை இருக்கும். நிறையத் தெளிவு வந்தது. குமரகுருபரர், தாயுமானவர் எல்லாம் இப்போது புரிந்தது. ஏசு சொன்னது புரிந்தது. உயிரின் வழியாக இருண்ட பகுதியை மனிதன் பார்த்துவிடுவான். அதுதான் சாத்தான். மனதின் இருண்ட பகுதியை ஆன்மிகவாதி கண்டுவிடுவான். மனதின் வெளிச்சமான பகுதி - அதுதானே இயல்பான பகுதி இந்த இடத்தை, இந்த வெளிச்சத்தை, அடைந்தவர், இயல்பு நிலையை எட்டியவர். நம்மவரில் பலர், முழு இருட்டிலும் முக்கால் இருட்டிலும், வந்து போகிற இருட்டிலும் வாழ்கிறோம். வெளிச்சமாக வாழ, தலையெழுத்து உள்ளவருக்கே தெரியும். ஏன் எனில், இது முயற்சியால் அடையப்படுவது அன்று. இது விதிக்கப்படுவது.///
கடவுள் இருக்க்காரா? இல்லையா? என்கிற கேள்விக்கு உங்க சித்தருக்கு ஏற்கனவே பதில் தெரியும் (அவரே ஒரு பதில் வைத்து இருந்து இருக்கிறார்).
அதாவது இருக்கார் என்கிற எண்ணத்தோடதான் அவர் அங்கே போனது. அதுதான் உண்மை.
நான் போயி உக்காந்து இருந்தால் ஒரு மண்ணாங்கட்டியும் தெரிந்து இருக்காது. கண்டவரையும் என்னைத் தொட விடுவேனா என்னனு தெரியலை.
உங்க சித்தருக்கு சாவு பயம் வந்து ரொம்ப காலமாயிடுச்சு. அதான் இந்த ஆன்மீகத் தேடல், கடவுள் தேடல் எல்லாம்.
மனிதனுக்கு ஆறுதலுக்கு ஒரு துணை தேவை. அதான் மனைவி. இவருக்கு ரெண்டு பேரு இருந்தும் ஆறுதல் கிடைக்கவில்லை போல பாவம். குருனு ஒரு பேசுற "கடவுள்" தேவைப்பட்டு இருக்கிறார். ஏன்னா பயம். மன்ப் பிராந்தி, மனத் தெளிவின்மை.
எனக்கு என்ன அதிசயம் என்றால், மற்ற ஜீவராசிகள் எல்லாம் வாழ்ந்து சாகிதுகள். பூச்சிகள் சில வாரங்கள், ஆமை 100 ஆண்டுகள். கடவுளை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்ந்து சாகிதுகள்.
இந்த மனிதன் ஜென்மம் மட்டும் மனதறிய ஏகப்பட்ட அனியாயம் பண்ணி வாழ்கிறான் இந்த அற்ப வாழ்க்கை. கடவுள் என்கிற கற்பனையை வைத்து அவன் அசிங்க வாழ்க்கையை நியாயப் படுத்துகிறான். அவ்வளவே.
நீங்கள் மிகவும் புகழ்ந்து தள்ளும் பாலகுமாரன் ஒரு மிகச்சாதாரண மனிதனாகத்தான் தெரிகிறார். சிந்திக்கத் தெரியாத மனநோயாளியாகவே வாழ்ந்தாகத் தெரிகிறார்.
-------------------------------
****பல்வேறு ஒழுக்கக் கோட்பாடுகளையும் போதனைகளையும் கொண்ட ஒரு சமூகத்தில் தன் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாய்க் காட்ட, சமூகம் குற்றமாய்க் கருதும் செயல்களைக் கூட இதை இதைச் செய்தேன் என்று ஒரு செய்தியாய் பகிர எத்தனை பிரபலங்களால் முடியும் ? மனிதத்தின் மீது பற்றுக்கொண்டு, தன் சமூகத்தின்பால் பேரன்பு கொண்ட ஒருவனால் மட்டுமே அசைவ உணவகத்தில் கறியை ஒதுக்கிவிட்டு பிரியாணியைச் சாப்பிட்டுப் பின்னர்ப் பசிஅடங்காமல் கறியையும் சாப்பிட்டதையும், விலைமாதுவை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கவிதை வாசித்துக் காட்டியதையும் இதுதான் நான் கடந்து வந்த பாதை என எழுத்தோவியமாய்த் தீட்ட முடியும். சமூகம், வரலாறு, ஆன்மீகம் என அவரது படைப்புகளின் களங்கள் மாறினாலும் அவைகள் அனைத்திலும் பிரதிபலன் இல்லாத பேரன்பு பரவியிருக்கும்.***
So, I could do anything. It is OK as long as I plead guilty?!
உண்மை என்னவென்றால், இப்படி உண்மையை தன் குறைபாடுகளை வெளியே சொல்வது அவர் மனநிம்மதிக்காக. இதில் ஊர்க்காவோ, யாருக்காகவும் அவர் எதுவும் செய்யவில்லை. தனக்கு உதவிக்கொள்கிறார் என்பதே உண்மை.
மேலும் இதைவைத்து அவர் ஒரு திறந்த புத்தகம் என்பதெல்லாம் உங்கள் கற்பனை. புத்தகம் 1000 பக்கங்கள் அவர் திறந்து போட்டது 2-3 பக்கம்தான். இதெல்லாம் உங்களுக்கு புரியவில்லை பாவம் நீங்கள்.
இந்த யு ட்யூப் பார்க்கவும்!
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=nMRpd6dhKpk
இங்கே சித்தர், பாதாம் அல்வாவும், ஒரு தோசையும், "போன்விட்டா"வும் ஒரு நண்பருடன் போயி சாப்பிட்டதாகவும். கடைசியில் ஏதோ போதுமான காசு இல்லாததால் ஏமாற்று செய்து, மாட்டி, நண்பன் அடிபட்டு அவமானப் பட்டதாக சொல்லுகிறார்.
இதுபோல் நிகழ்வைப் பார்க்கும்போது இவர் ஏன் கடவுளைத் தேடித் தேடி அலைந்தார்னு ஓரளவுக்கு தெளிவு படுது. தெரிந்தே ஒரு சில தவறுகளை இதுபோல் "ஆசை"யால் செய்வது. செய்துவிட்டு கடைசியில் பகவான் காலில் போயி விழுந்து ஆன்மீகக் கடலில் கலந்து விடுறது..இருக்கவே இருக்கார் பகவான்..
பகவானும் இவனுகளோட சேர்ந்த கபோதிதான் போல..அவனுக்கு வைக்க வேண்டியதை வச்சு, அவனை நீதான் எல்லாம்னு வணங்கினால், என்ன பாவம் செய்தாலும் மன்னிச்சு அருளிருவான் போல!
---------------
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நடுத்தர குடும்பம்தான் (ஏழைனுகூட சொல்லாம்). ஹோட்டலில் சாப்பிடும் அளவுக்கெல்லாம் பெருசா பாக்கட் மணி கொடுக்க மாட்டாங்க. அதெல்லாம் ஆடம்பரம்- எங்க வசதிக்கு. வீட்டில் சிரமம் என்பதால் ஊட்டி, கொடிக்கானல் வெக்கேசன் போறது, சினிமா பார்க்கிறதுனு எதுக்குமே செலவழிக்க காசெல்லாம் கொடுக்க மாட்டாங்க. வீட்டு நிலைமை தெரியுமென்பதால் வீடே சொர்க்கம், தெருவில் ஏழை நண்பர்களுடன் விளையாடுவதே சொர்க்கம் என்று சந்தோசமாகத்தான் வளர்ந்தேன். ஒரு நாளும் பாதாம் அல்வாக்காவோ, போன்விட்டாவுக்கோ ஏங்கியதோ, யாரையும் ஏமாற்றியதோ இல்லை! க்ரிக்கட் விளையாட வசதி இல்லை என்றால் "கிட்டி" விளையாடி, கபடி விளையாடியும் வாழ்க்கையை சந்தோசமாக ஓட்டலாம் என்பதுதான் அப்பா அம்மா சொல்லிக் கொடுத்த வேதம், இதிகாசம் எல்லாமே.
இந்த நிலைமையில் கிடைக்காத சாப்பாடு எதுக்குமே ஆசைப் பட்டது இல்லை. ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதுபோல் நினைத்துக் கொள்வதுண்டு. அதுவும் இவர்போல் காசு இல்லைனு தெரிந்தே போயி ஹோட்டலில் போயி சாப்பிட்டிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சமாளிக்க முயல்வதென்பதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத ஒண்ணு. If you lost your money or wallet by accident, thats a different story. Even then I would try talk to the owner and reach out my family members rather than try cheat them. I cant imagine I could ever do that.
எனக்கு என்ன புரிலயலைனா.. பார்ப்பனர்கள் ஏன் உயர்ந்த சாதினு சொல்றாங்கனு விளங்குவதே இல்லை.. இவர்களை கவனித்துப் பார்த்தால் மிகவும் லோக் க்ளாஸ் சிந்தனைகளும் செயல்களுமே இவர்களிடம் அதிகமாக இருப்பதாகத் தோணுது. இவரைப் போல பல பார்ப்பனர்களை பார்த்து இருக்கேன். நிற்க! எல்லாப் பார்ப்பனர்களும் மோசம்னு நான் சொல்லவில்லை!
இவா ஆத்துல பொய் சொல்லக்கூடாதுனுகூட தெளிவாக சொல்லி இவர்களை வளர்த்து விடுவதில்லை என்பது பரிதாபம். வேதம் படி, பாரதம் படி, புறநாணூறு படி என்றெஎல்லாம் சொல்லிக் கொடுப்பவர்கள் இதுபோல் ஒரு சின்ன விசயம் , பொய் சொல்லக் கூடாது, பேராசைப் படாதே னுகூட சொல்லி வளர்க்க மாட்டேன்கிறா!
நல்ல வேளை நான் பார்பனராகப் பிறக்கவில்லை! அப்படி பிறந்து இருந்தால், இவரை போலதான் தெரிந்தே பல அயோக்கியத்தனம் பண்ணீட்டு பகவானை தேடி அலைஞ்சிண்டு இருப்பேன்!
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteCorporate English classes in Chennai
Communicative English training center
English training for corporates
Spoken English training
Workplace Business English training institute
Workplace English training for corporates
Workplace soft skills training institutes
Corporate language classes
Business English training for Workplace
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteShree Padma Nrityam Academy
SPNAPA
Padma Subrahmanyam
Bala Devi
Bala Devi Chandrashekar
Bharata Natyam
BharataNatyam Classes
Bharatanatyam Teachers
Indian Classical Dance
BharataNatyam Schools in Princeton
BharataNatyam Schools in New Jersey
BharataNatyam Schools in Livingston
BharataNatyam Schools in Edison
BharataNatyam
Guru for Bala Devi
Indian Dance Guru
Indian Classical Dance Guru
BharataNatyam Guru
Bharatanatyam Teacher
எழுத்து சித்தர் நம்மை விட்டு சென்றாலும் அவர் எழுத்து மட்டும் நம் சித்தத்தில் இன்னும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது. >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
ReplyDelete