எந்த முன்னறிவிப்புமின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வலையுலகில் சஞ்சரிக்காத இந்த சாமானியனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் நட்புகளுக்கு...
மன்னிக்க வேண்டுகிறேன் ! அனைவரும் நலம். என் நலமறிய துடித்த நெஞ்சங்களின் நலனுக்காக நாளும் பிரார்த்திப்பேன் !
Life Is a Mystery to Be Lived
என்றார் ஓஷோ !
" கண்டவர் விண்டிலார் விண்டவர் கண்டிலார் " என்ற சித்தர் வாக்கும் ஆன்மீகத்துக்கு மட்டுமல்லாது வாழ்க்கை முழுவதுக்குமே பொருந்தும் என தோன்றுகிறது !
சில ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய சூபி வாழ்க்கை முறையில் ஈடுபாடு கொண்ட ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்த போது பேச்சு உலக அழிவு பற்றி திரும்பியது !
" உலகின் இறுதி நாளை பற்றி குறிப்பிடாத மதங்கள் இல்லை...விஞ்ஞான உலகமும் உலகின் முடிவை பற்றி ஏதேதோ கூறுகிறது.... எல்லாமே அதிர்ச்சியான செய்திகள்தான் ! மனித சுவடே மறைந்துவிடும் அதிர்ச்சி ! ஆனால் அந்த நாளை பற்றிய இயற்கையின் ரகசியத்தை முன்னால் கண்டறிய முடியாது... இந்த பூமி அழிய நேரும் நாளில், அந்த இடத்தில் அச்சு அசலாய் வேறொரு பூமியை நிலை நிறுத்தும் சாத்தியத்தைகூட இறைவனால் நிகழ்த்த முடியும் " என கூறினார் அவர்.
( " இறைவன் இல்லை என்று கூறவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறுகிறேன் " கட்சியை சார்ந்தவர்கள் இறைவனுக்கு பதில் இயற்கை என மாற்றிக்கொள்ளுங்கள் ! )
அற்புதங்களை நம்பாத ஆத்திகர்கள் கிடையாது ! நாத்திகம் பேசும் நண்பர்கள் கூட விஞ்ஞான விதிகளுக்குள் அடங்கும் " பெரு வெடிப்பு " ( big bang ) நிகழ்வையும், உயிர் உண்டான முதல் தருணத்தையும் அறியும் போது அற்புதம் என்றே கூவுவார்கள் !! உயிரின் தோற்றத்தையும் உலகின் அழிவையும் விடுங்கள் , நமது அன்றாட வாழ்வில் கூட வாழ்க்கை நமக்காக மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் தான் எத்தனை எத்தனை ?! அற்புதங்கள் தான் எவ்வளவு ?!
ஜென் தத்துவத்தில் காத்திருப்புக்கு அளவற்ற முக்கியத்துவம் உண்டு. நாம் எதற்காக காத்திருக்கிறோமோ அதை அடையும் தகுதியை ஏற்படுத்திக்கொள்ள இயற்கை நமக்குகொடுத்த அவகாசமே காத்திருப்பு ! நமக்கு அந்த தகுதி ஏற்படும் நேரத்தில் அந்த அற்புதம் நிகழும்... நாம் நினைத்தது கைக்கூடும் !
நாள் தோறும் தண்ணீர்விட்டு வளர்த்த ஒரு ரோஜா செடி மொட்டுவிட்டு, சட்டென ஒரு காலையில் மலரும் அந்த தருணத்தை கண்டு கொண்டால்... விழுந்து எழுந்து, கால் முட்டிகள் தேய பழகிய மிதிவண்டி நமக்கு வசமான அந்த நொடியை நினைவில் கண்டால்... அந்த அற்புதம் புரியும் !
அப்படி ஒரு அற்புதம்தான் எனக்கும் நிகழ்ந்து... என்னையே மறக்க வைத்தது ! என்னை மறந்ததால், எழுத்தையும் மறக்க நேர்ந்துவிட்டது !
இதனை சொல்ல நான் வெட்கப்படவில்லை...
வாழ்வியல் அனுபவங்களின் மூலம், முக்கியமாய் எனக்கு நேர்ந்த அனுபவங்களின் ஊடே உலகை பார்க்க முயல்பவன் நான் ! எனது அனுபவங்கள் உங்களுக்கு ஏதேனும் நற்செய்திகளை தருமானால் அதற்காக என் வாழ்வை திறந்த புத்தகமாக விரிக்க முயல்பவன் நான் !
அற்புதம் நிகழ்ந்ததை எழுதாதவரையில் என்னால் வேறு எதையும் எழுத முடியாத நிலை... அனைத்தையும் அப்படியே எழுத வேண்டிய நேரமும் கைக்கூடவில்லை என தோன்றுகிறது....
இழக்கக்கூடாதை இழந்து, இனி ஒரு வசந்தத்துக்கு இடமில்லை என இரும்புத்திரையிட்டுக்கொண்டு இரு வேறு பாதையில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு இதயங்கள்...
ஏதோ ஒரு புள்ளியில் இருவரின் பாதைகளும் ஒன்றாகிய தருணத்தில், ஒருவர் வாழ்க்கை மற்றொருவருடையதை பிரதிபலிக்கும் ஆச்சரிய அதிர்ச்சியில் திளைத்த நொடியில் அந்த அற்புதம் நிகழ்ந்தது ! அந்த இதயங்களின் இரும்புத்திரை மறைந்து மீன்டும் ஒரு வசந்தம் ! அவர்களுக்கான வசந்தத்தில் அவர்களுக்கென்றே ஒரு ரோஜா பூத்த தருணம் !
ஆனாலும் அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.... ஆனாலும் காத்திருப்பார்கள்... ஏனென்றால் காத்திருப்பின் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரியும்.
இறைவனிடமோ அல்லது இயற்கையிடமோ.... அவர்களின் காத்திருப்பின் பலன்கிட்ட உங்கள் பிரார்த்தனைகளின் கொஞ்சத்தை ஒதுக்குங்களேன் !
( தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்த சிறு பதிவுக்கான உங்களின் பின்னூட்டங்களுக்கு நான் பதிலிடமாட்டேன். மன்னித்தருளுங்கள் தோழர், தோழியரே ! எனது அடுத்த பதிவு மிக விரைவில். முகம் அறியாத இந்த சாமானியனிடத்தில் நீங்கள் கொண்டுள்ள நட்புக்கும் அன்புக்கும் நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது. )

காத்திருத்தல் என்பது ஒரு வரமான சாபம். அல்லது சாபமான வரம்.
ReplyDelete" கண்டவர் விண்டிலார் விண்டவர் கண்டிலார் "
ReplyDeleteஅன்புக்கு நன்றி
புதுவை வேலு
அற்புதங்கள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடர்க...
சாம்,
ReplyDeleteநீண்ட நாள் காணமல் போய் திரும்பி வந்தது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்றால் ரோஜா பதிவு மற்றொரு மகிழ்ச்சிக்கு முன்னுரையாக இருக்கிறது. என்னதான் ரோஜா, வசந்தம்,இரும்புத்திரை என்று கருப்பு வெள்ளை காலத்துத் திரைப்படங்கள் போல எழுதினாலும் இது கூடவா புரியாது? நண்பரே வாழ்த்துக்கள்.
அற்புதங்கள் தொடரட்டும்
ReplyDeleteவருக நண்பரே.. நீண்...............ட இடைவெளிக்குக்குப் பிறகு தங்களது வரவு சந்தோஷத்தை கொடுத்தது தொடந்து நிகழ்த்துங்கள் அற்புதத்தை..
ReplyDeleteவாருங்கள் அண்ணா!
ReplyDeleteமிக எதிர்பார்த்திருந்தேன்!
முள்ளில் மலர்ந்தாலும் ரோஜா அழகுதானே அண்ணா!
எப்போதுமே....................!
நன்றி
ஆஹா!!
ReplyDeleteஅண்ணாவை காணோமேனு பார்த்தேன்....ரொம்ப ரொம்ப சந்தோசம்!!!!
வாழ்த்துக்கள் அண்ணா! அந்த ரோஜாவை என்னாலும் கடக்கமுடியவில்லை. ஈர்க்கிறது!!
ரசனை மேலும் மெருகேறி இருக்கிறது!! இனி உங்கள் ஒவ்வொரு நொடியும் இப்படி ரசனையாகவே அமைய இந்த தங்கையின் இதயம் கனிந்த வாழ்த்துகள்:))
உங்கள் விருப்பம் நிறைவேற என் பிரார்த்தனைகள் மட்டுமல்ல ஆசிகளும் கூட.
ReplyDeleteஇயற்கை - இறைவன், ரோஜா பூக்கும் நேரம் - கால் முட்டி மிதிவண்டி நம் வசம், அருமையான பதிவு. மனிதனை இயற்கை சில தருணத்தில் உண்மையான உணர்வுடன் மாற்ற சாத்தியமே.
ReplyDeletesattia vingadassamy
வாழ்த்துக்கள்!
ReplyDelete//இறைவன் இல்லை என்று கூறவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறுகிறேன் " கட்சியை சார்ந்தவர்கள் இறைவனுக்கு பதில் இயற்கை என மாற்றிக்கொள்ளுங்கள் !//
வாவ்... சாமானியரின் முத்திரை...! :)
அருமையான பதிவு நண்பரே! அற்புதங்கள் நிகழட்டும்! தொடரட்டும்.
ReplyDeleteஅற்புதத் தருணங்களை மேலும் மேலும் கண்டடைய வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பா.... வலைச்சரத்தில்...
ReplyDeletehttp://blogintamil.blogspot.ae/2014/12/blog-post_12.html
அன்புள்ள அய்யா,
ReplyDeleteஇறைவன் என்கிறான் ஆத்திகன்...
இயற்கை என்கிறான் நாத்திகன்....
வாழ்க்கையே தேடல்தானே...!
சிலர் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்...!
சிலர் கண்டுபிடித்துத் தேடுகிறார்கள்...!
முள்ளில் மலர்
மலரில் முள்
முள்ளும் மலரும்...
இதுதானே வாழ்க்கை!
நன்றி.
அற்புதங்கள் தொடரவும் வெள்ளம்போல் மகிழ்வு கரை புரண்டோடவும்
ReplyDeleteஎன் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் ....!
மிக்க மகிழ்ச்சி !