Saturday, January 14, 2017

ஜல்லிக்கட்டு



 " னி உலகின் ஒவ்வொரு பிரபலத்துக்கும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும் ! " என்ற வரி தனி மனிதர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கு முற்றும் பொருந்தும் !

கச்சத்தீவு, ஈழத்தமிழர் பிரச்சனை, நதிநீர் பங்கீடு போன்றவைகளோடு இப்போது ஜல்லிக்கட்டும் சேர்ந்துவிட்டது ! சேது சமுத்திர திட்டத்தின் இன்றைய நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது ! ரூபாய் நோட்டுப் பிரச்சனை தீர்ந்ததா எனத் தெரியாது... ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஐயப்பாடுகள் மறக்கப்படத் தொடங்கிவிட்டன... சென்னையைத் தாக்கிய இரண்டாவது புயலைப்பற்றிப் பேசவே இல்லை ! வரலாறு காணாத தலைமை செயலக வருமானவரி சோதனைக்கான காரணங்கள் மற்றும் அதன் விபரங்கள் அடுத்த ஒரு " அரசியல் மிரட்டலுக்கான " தேவை வரும் வரை வெளியிடப்படமாட்டாது !...

அதற்குள் அடுத்த ஐந்து நிமிடத்தை ஜல்லிக்கட்டுக்காகத் தமிழக அரசியல்வாதிகள் ஒதுக்கிவிட்டார்கள் !

தமிழ்நாட்டின் அனைத்து பிரபலங்களும், முக்கியமாய்த் தமிழனின் கலாச்சாரம் தள்ளாடுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றான சினிமாவின் பிரபலங்களும் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள் ! பீப் பாடலின் மூலம் " தமிழர் கலாச்சாரம் " பரப்பிய நடிகர் கூட ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்துக் கூவுகிறார் ! இவர்களுக்கெல்லாம் மேடை அளிக்கும் தமிழக ஊடகங்களும் அதன் மக்களைப் போலவே மறக்க பழகிவிட்டன ! மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, எதிர்கட்சிதான் காரணம், ஆளும் கட்சிதான் காரணம் என வழக்கம் போலவே ஒருவருக்கொருவர் உதைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் !

உணர்ச்சிவசப்பட்டுப் பேசி பேசியே பாழாய் போன சமூகம் நாம் என்பதை மீன்டும் ஒருமுறை
நிருபிக்கப் போகிறோம் !

நான் இந்தக் கட்டுரையைப் பதிவேற்றிய வேலையில் தமிழ்நாட்டில் " தன் எதிர்காலம் " கருதி மத்திய அரசு ஏதாவது அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை அனுமதித்திருக்கலாம் அல்லது ஜல்லிக்கட்டு நடத்தப்படாமலேயே தமிழர் திருநாள் முடிந்திருக்கலாம்... அத்துடன் ஜல்லிக்கட்டுக்கான ஐந்து நிமிடம் முடிந்துவிடும்...
அடுத்தப் பொங்கல் வரை !

ளவட்டக்கல், சிலம்பம் போன்ற எத்தனையோ பழந்தமிழ் வீரவிளையாட்டுகள் மறக்கப்பட்டும் மறைந்துக்கொண்டும் இருக்கும் வேலையில் ஜல்லிக்கட்டை மட்டும் தமிழனின் தன்மானம், வீரத்தின் அடையாளம் என்றெல்லாம் அதிகம் பேசி, ஆராவாரப்படுத்துவதற்குச் சுயநல அரசியலே காரணம். மேலும் வீரம் என்பதின் அடையாளம் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறக்கூடியது. பழந்தமிழர் போற்றிய அறம், அன்பு, ஈகையுடன்
 " பிறன்மனை நோக்கா பேராண்மையுடன் " வாழ்ந்து கட்டுவதே இன்றைய சூழலில் வீரம் என நான் நினைக்கிறேன்... இவையிரண்டும் என் தனிப்பட்ட கருத்துகள் !

சரி, இனி போராட்டத்துக்கு வருவோம்...

ல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை ! அதனை நடத்துவது நடத்தாதது பற்றித் தமிழ் சமூகம்தான் தீர்மானிக்கவேண்டும் என்பதிலும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது ! ஆனால் ஜல்லிக்கட்டை காக்கிறோம் எனத் தங்களின் மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ளச் சினிமா நடிகர்களும், தங்களின் சுயநல அரசியலுக்காக அரசியல்வாதிகளும் அடித்துபிடித்து ஓடி வருவதுதான் கொடுமை ! தமிழ்நாடு சரியான தலைமை இன்றி எடுப்பார்கைப்பிள்ளையாகக் கிடப்பதுதான் வேதனை !

சரி, அப்படியானால் இந்தப் போராட்டத்தை யார் முன்னெடுக்க வேண்டும் ?

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கெனத் தமிழ்நாடு தழுவிய ஒரு தனி அமைப்பு அல்லது சம்மேளனம் உண்டா எனத் தெரியவில்லை... அப்படி இருக்கும் பட்சத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு அவர்களுக்கே உண்டு ! அரசியல்வாதிகளும் இன்ன பிறரும் அவர்களுக்கு ஆதரவாக இயங்கலாம்... அப்படி ஒரு சம்மேளனம் இல்லாவிட்டால் அதை ஏற்படுத்தவேண்டிய அவசியத்தைச் சற்று விரிவாகவே பார்ப்போம்...

மிருகங்களை மனிதன் அடக்கும் வீரவிளையாட்டுகள் உலகின் அனைத்து ஆதி நாகரீகங்களிலும் உண்டு. இவ்விளையாட்டுகளை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்... தனி மனிதனோ அல்லது ஒரு சிறு குழுவோ மிருகத்தை ஆயுதங்களுடன் எதிர்கொண்டு அடக்கி கொன்றுவிடுவது முதல் வகை. எதிர்கொள்ளும் மிருகம் வலுவிழக்கும்வரை அதனை அலைகழித்து, தன் பலத்தின் மூலம் அதனைக் களைப்புறச்செய்வதுடன் நிறுத்திகொள்வது இரண்டாம் வகை. ஜல்லிக்கட்டு இரண்டாம் வகையைச் சார்ந்தது.


ஜல்லிக்கட்டுக்கு ஈடாக ஸ்பெயின் நாட்டின் கொரிதா எனப்படும் எருது அடக்கும் விளையாட்டைக் குறிப்பிடலாம். ஆனால் கொரிதாவில் விடப்படும் எருது " தொரெரோ " என்றைழக்கப்படும் வீரனால் அலைக்கழிக்கப்பட்டுச் சிறு குத்தீட்டிகளால் குத்தப்பட்டு இறுதியில் பரிதாபமாக உயிரிழக்கும்.

இந்தக் கொரிதா விளையாட்டுக்கு எதிராக மேலை நாடுகளில் ஒரு பெரும் இயக்கமே போராடிக்கொண்டிருக்கிறது. இதில் கலைஞர்களும் அடக்கம். இந்த விளையாட்டுக்கு எதிராக, கொல்லப்படும் எருதுவே பாடுவதாக அமைந்த பிரெஞ்சு பாடகன் பிரான்சில் கப்ரேலின் பாடலை கேட்பவர்களின் கண்களில் நீர் கோர்த்துவிடும் !

ஜல்லிக்கட்டின் விதிமுறைகளைக் கொஞ்சமும் அறிந்திராத பீட்டா போன்ற அமைப்புகள் அதனைக் கொரிதா விளையாட்டாகப் பாவிப்பது ஜல்லிக்கட்டு தடைக்கான முதல் காரணம்.

அடுத்ததாக, மிருகவதை காரணத்துக்கு முன்னதாகவே அதில் பங்குபெறுவோரும், பார்வையாளர்களும் காயமடைவதையும், உயிரிழப்பதையும் காரணமாகக் கொண்டு சில அமைப்புகள் ஜல்லிக்கட்டை எதிர்த்ததை இந்தத் தருணத்தில் குறிப்பிட வேண்டும். அதில் உண்மை இல்லாமல் இல்லை ! மேலும் மாடுகளை விளையாட்டு விதிகளுக்குப் புறம்பான வழிகளில் வெறியூட்டும் செயல்களும் உண்டு என்பதை ஜல்லிக்கட்டின் விபரம் அறிந்தவர்கள் மறுக்கமாட்டார்கள் !

காலத்துக்கு ஏற்ப மாறுவதும் மாற்றப்படுவதுமே நிலைக்கும் என்ற இயற்கை விதியையும் கருத்தில் கொள்ள வேண்டும் ! ஒரு காலத்தில் கத்தி சண்டை என்றால் தோற்பவன் காயப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. அந்தச் சண்டை கலையின் விதிகள் காலத்துக்கு ஏற்ப மற்றப்பட்டதினால்தான் இன்றும் அக்கலை " Fencing " என்ற பெயரில் ஒலிம்பிக்கிலும் விளையாடப்படுகிறது.

நான் குறிப்பிடும் ஜல்லிக்கட்டுக்கான அமைப்பு முதலில் விளையாட்டு நடத்தப்படும் முறையை இக்காலத்துக்கு ஏற்ப, பார்வையாளர்களுக்கும் மைதானத்துக்கும் இடையே பாதுகாப்பு அரண், வாடிவாசலின் அமைப்பு, விளையாட்டில் பங்குபெறும் எருதுகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை என விதிகளை வரையறுக்கவேண்டும். அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுமைக்குமான அந்த அமைப்பின் அனுமதி மற்றும் கண்காணிப்பின்கீழ்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்ற விதி முக்கியம்.

மேலும் தமிழ் கலாச்சாரம் இந்திய தலைநகரத்துக்கே சரியாகப் புரியாத நிலையில் பீட்டா போன்ற சர்வதேச அமைப்புகள் புரிந்துகொள்ளும் என நினைப்பது நம் தவறு ! தமிழ் கலாச்சாரச் சூழலை தமிழ்நாட்டின் எந்த அரசியல் பிரதிநிதியும் டெல்லியில் முறையாக, தொடர்ந்து பதிவு செய்யவில்லை என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். சுப்ரமணியம் சுவாமி போன்றவர்களை நம்பாமல் (!) இந்தப் பொறுப்பையும் ஜல்லிக்கட்டு அமைப்பே ஏற்க வேண்டும்.

இப்படியான ஒரு கட்டுக்கோப்பான அமைப்புடன் நீதிமன்றத்தில் வாதாடி மட்டுமே ஜல்லிக்கட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும் !

சில நாட்களாய் ஒரு கேள்வியை என் மனதிலிருந்து நீக்கமுடியவில்லை..

தமிழ்நாட்டில் நூறு விவசாயிகளுக்கு மேல் தற்கொலையாலும், அதிர்ச்சியினால் உண்டான மாரடைப்பாலும் இறந்துவிட்டதாகவும், பதிணெட்டு லட்சம் ஏக்கர் அளவுக்கான டெல்டா நிலங்கள் தூர்ந்துவிட்டதாகவும் செய்தி...

ஜல்லிக்கட்டு விவசாயியின் வீர விளையாட்டு... தான் பாடுபட்டு வளர்த்த பயிர் அறுவடையாகி வீடு வந்து சேர்ந்த மகிழ்ச்சியில், உழவில் தனக்குத் துணை நின்ற காளைகளைச் சீண்டி விளையாடி வீரத்துடன் தழுவும் நிகழ்வு...

அந்த விவசாயச் சமூகமே அழியும்போது ஜல்லிக்கட்டை மட்டும் போராடி பாதுகாப்பதினால் யாருக்கு என்ன பயன் ?



இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

 பட உதவி : GOOGLE


58 comments:

  1. இறைச்சிக்கு மாடு வெட்டுதல் தான்
    மிருகவதை...
    காளைகளைச் சீண்டி விளையாடும்
    ஜல்லிக்கட்டு மிருகவதையா?
    தமிழர் பண்பாட்டின் அடையாளமாக
    ஜல்லிக்கட்டு இருக்கட்டுமே!

    நண்பர் ஒருவர்
    கூகிள் பிளஸ் இல் குறிப்பிட்டது போல
    புகைத்தலும் மது அருந்துதலும்
    உடல் நலத்திற்குக் கேடாகலாம்
    என்பது போல
    ஜல்லிக்கட்டு நடாத்துவதால்
    காளைக்கும் காளையை அடக்க முனைவோருக்கும்
    பாதிப்பு ஏற்படலாம் என
    எச்சரிக்கை செய்தவாறு
    ஜல்லிக்கட்டு நடாத்த அனுமதிக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா,

      பிராணிகள் பராமரிப்பு சட்டங்களின்படி மிருக கொலைக்கும், வதைக்கும் நிறைய விதயாசம் உண்டு. எந்த ஒரு மிருகத்தையும் அதன் இயற்கை வாழ்வியல் சூழலிருந்து மாற்றி வளர்த்தலை கூட மிருகவதை சட்டத்துக்குள் உட்படுத்த முடியும் ! அப்படி பார்த்தால் ஒரு காளையை ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு என திட்டமிட்டு வளர்த்தல் கூட சட்டப்படி பார்த்தால் ஒருவகையில் மிருகவதைதான் !

      மேலை நாட்டு பிராணிகள் அமைப்பினரின் அனுகுமுறை வேடிக்கையானது !... கசாப்பு நிலையங்களில் பிராணிகளைகொல்லாதீர்கள் என அவர்கள் போராடுவதில்லை, கொல்லுவதற்கு முன்னர் துன்புறுத்தாதீர்கள் என்பதே அவர்களின் போராட்டம்! அதாவது சாப்பிட கறியும் வேண்டும்... மிருகம் வதைக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் !

      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. நல்லதொரு பகிர்வு. அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இப்படி அவ்வப்போது நிகழ்வுகளை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வது வேதனை தரும் விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி அவர்களுக்கு சாதகமான நிகழ்வுகள் இல்லையென்றால் அதையும் அவர்களே ஆரம்பித்து வைப்பதும் அதனை ஊடகங்கள் முன்னெடுப்பதும் இன்னும் கொடுமை !

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  3. வேதனை
    வேதனை
    நம்மை வைத்து விளையாட்டு காட்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா,

      சமூகத்தின் அனைத்து தரப்பினர்களையும் தலையாட்டி பொம்மைகளாக மாற்றிவிட்டார்கள்... ஆனால் அப்படி மாற்றியவர்களோ கோமாளிகள் !

      வருகைக்கு நன்றி

      Delete
  4. இன்றைய சூழலில் வீரம் என்று குறிப்பிட்டதும் சிறப்பு...

    தற்போது வந்த whatsapp-ல் ஓர் தகவல் :-

    இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்..!!!

    1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33%பேர் இந்தியர்கள்.

    2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.

    3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள்.

    4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள்.

    5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.

    6. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள்
    ஜல்லிக்கட்டு எதிர்ப்பு ஏன் ?

    சர்க்கரை நோய் இந்தியாவில் ஜெர்சி பால் மூலமே பரப்பப்பட்டது

    Diabetic cause cow milk என்று கூகுளில் அடியுங்கள் உண்மை விளங்கும்

    வருடத்திற்கு சர்க்கரை நோய் மருந்து விற்பனை மட்டும் அமெரிக்க நிருவனங்களுக்கு
    375 லட்சம் கோடி

    அமெரிக்க அடிமைகள் ஏன் துடிக்கிறார்கள்

    நாட்டு பசும்பால் சர்க்கரை உட்பட பல நோயை தடுக்கிறது

    ஜல்லிக்கட்டு காளையை அழித்தால்

    அயல் விந்து ஊசி மூலம் நாட்டு பசுவை அழிக்கலாம்

    இப்போது புரிகிறதா?

    நமது பண்பாடு க்கும் கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பது யார் என்று????

    அரசியல் கட்சிகள் முதல் அமெரிக்க NGO வரை

    மேலைநாடுகள் எல்லாம் சேர்ந்து எதிர்க்கும் ரகசியம்

    பத்து ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு எதிர்த்து நூறு நாடுகள் போராடும் ரகசியம்

    (இந்த கேசில் பீட்டா சார்பாக வாதாடிய வக்கீல்களுக்கு 2.5கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலைச்சித்தர் அவர்களே,

      நீங்கள்குறிப்பிட்டகெல்லம் உண்மைதான்...

      ஆனால் அந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தந்திரங்கள் இந்திய அடுக்களைவரை நுழைய யார் காரணம் ? நம் அரசியல்வாதிகளும் நாமும் தானே ? போபாலின் விபத்துக்கு காரணமான யூனியன் கார்பாய்டு தொடங்கி போபர்ஸ் வரை அயல்நாட்டு " பணஎலும்புதுண்டுகளுக்கு " விலைபோன நம்மவர்கள் அல்லவா காரணம் ?!

      இந்தியர்களால் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட பீட்டா போன்ற ஒரு அமைப்பினால் அமெரிக்காவிலோ ஐரோப்பிய யூனியனிலோ அங்கத்திய சமூக பிரச்சனை ஒன்றுக்காக அந்தந்த நாடுகளில் வழக்கு தொடர முடியுமா ?

      வருகைக்கும் விளக்கமான பின்னூட்டத்துக்கும் நன்றி... தொடருவோம்

      Delete
  5. பாரம்பர்யம் அனைத்துமே காக்கப்பட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நலமா ஜீ ?... நீண்ட நாட்களாகிவிட்டன...

      ஆமாம் நண்பரே... ஆனால் பாரம்பரியங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு ஒரே ஒரு அடையாளத்தை பாதுகாக்க நினைக்கிறார்கள்... வருங்கலாத்தில் ரூபாய் நோட்டிலோ அல்லது தபால் தலையிலோ அச்சிட நினைவில் இருக்க வேண்டும் அல்லவா ?!!!

      தொடருவோம்... நன்றி

      Delete
  6. விதிமுறைகள் வேண்டும்.
    கட்டுக்கோப்பான அமைப்பு ஏற்படுத்தி அதிலும் அரசியல் வராமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ,

      விதிமுறைகள் மற்றும் கட்டுக்கோப்பான அமைப்பு வேண்டும்... அதைவிட முக்கியமாய் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படவேண்டும் !

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ !

      Delete
  7. வெகு சிறப்பான கட்டுரை! நம் ஊரில் இல்லாததைப் பெரிது படுத்துவதும், சரியாகத் தெரியாமல் விவரங்களை ஊதிப் பெருக்குவதுமே நம் அரசியலும், ஊடகங்களும் என்றாகிப் போனது வேதனையான ஒன்று.

    //நான் குறிப்பிடும் ஜல்லிக்கட்டுக்கான அமைப்பு முதலில் விளையாட்டு நடத்தப்படும் முறையை இக்காலத்துக்கு ஏற்ப, பார்வையாளர்களுக்கும் மைதானத்துக்கும் இடையே பாதுகாப்பு அரண், வாடிவாசலின் அமைப்பு, விளையாட்டில் பங்குபெறும் எருதுகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை என விதிகளை வரையறுக்கவேண்டும். அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுமைக்குமான அந்த அமைப்பின் அனுமதி மற்றும் கண்காணிப்பின்கீழ்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்ற விதி முக்கியம்.// நான் மனதில் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள் சாம்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், நலமா ?

      சரியாக தெரியாவிட்டால் கூட பரவாயில்லை... ஜல்லிக்கட்டை தொலைக்காட்சியில் கூட பார்த்தறியாதவர்கள் கூட எல்லாம் தெரிந்தவர்களாய் " கலாச்சாரம் " காக்க வரிந்துகட்டுவதுதான் வேடிக்கை !

      ஆழ்ந்து வாசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி. தொடருவோம்...

      Delete
  8. Replies
    1. Just observing politics in front of our tv is not enough... we must have to fight against these paper tigers !

      Thank you for your visit... please continue

      Delete
  9. ஆரம்ப வரிகள் அட்டகாசம். நடுப்பகுதியில் வரும் தகவல்கள் சுவாரஸ்யம். இறுதிக் கேள்வி 'நச்'.

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பம்முதல் இறுதிவரை ஆர்வமாய் படித்து ஆணித்தரமாய் பின்னூட்டமிட்டதற்கு நன்றி நண்பரே... தொடருவோம் !

      Delete
  10. சிறப்பான பார்வை . செய்திகள் பரப்பப்படும் வேகத்தினும் அதிகமாக மறக்கடிக்கப்படுகின்றன . முறைப்படுத்தப்பட்ட விளையாட்டாக சல்லிக்கட்டை மாற்றுவது சரிதான் என்ன ஒன்று அங்கேயும் நம் ஆட்கள் ஊழல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பரே,

      ஊழல் ஒழிப்பு அமைப்புகளையும் ஊழல் கொடுத்து கெடுக்க முயற்ப்பவர்களாயிற்றே நம்மவர்கள்...

      வருகைக்கு நன்றி தோழரே... தொடருவோம்

      Delete
  11. மாட்டுக்கு என்னங்க தெரியும் பாவம்? அதுட்டப் போயி நம்ம வீரர்னு நிரூஉபிக்கணுமா? ஒரு புலி சிங்கதோட சண்டை போட்டாலாவது அர்த்தமா இருக்கும். வீரர்னு ஒத்துக்கலாம். "சிவா"னு ஒரு ரஜினி படத்தில் ஷோபனா ரஜினியை புலிட்ட சண்டை போடுனு சொல்வார். ரஜினியும் சண்டை போட்டு ஜெயிச்சுடுவார். :)

    மனிதன் மாட்டை வளர்த்து ஏமாத்தி பாலை வாங்கிக்கிறான். பிறகு காளை மாடென்றால், உழ அல்லது சுமைகளைத் தூக்க பயன்படுத்திக்கிறான். தேவை என்றால் கொன்னு மாமிசம் ஆக உண்ணுகிறான். இதெல்லாம் சரியா? அப்படினா.. தப்புத்தான் என்பதே என் பதில். மனிதன் மிருகங்களை மனிதனுக்காகத்தான் படைத்தான். தாவரங்களையும் மனிதனுக்காக்த்தான் படைத்தான்.. காளை மாட்டையும், வளர்க்கும் நாயையும் "காயடிப்பது" தவறில்லை என்கிற வியாக்யாணத்தில்லெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

    பெங்காலி ப்ராமின்ஸ் ஏன் மீன், கறிய்யெல்லாம் சாப்பிடுகிறார்கள்? னு கேட்டதற்கு ஒரு பெங்காலி தோழி சொன்ன பதில், பயங்கர பஞ்சம் வந்தபோது சர்வைவல்க்காக சாப்பிட ஆரம்பித்தார்கள் என்றார். அபப்டியே ட்ரடிஷன் ஆகிடுச்சு. அவர்களுக்கு மாமிசம் சாப்பிடுவது தவறாத் தோணவில்லை இப்போ அவர்களுக்கு ப்ராமின்ஸ் ஆடு, கோழி, மீனைக் கொன்னு சாப்பிடுவது தப்பாத் தோணவில்லை. ஆனால் மாடு மட்டும் சாப்பிடுவது தப்புனு பெங்காலிகள் சொல்வார்கள் (இந்துக்கள்).

    பொதுவாக சர்வைவல்க்காக கொன்னு தின்னாதப்பில்லை னு மனிதன் சமாளிக்கிறான். ஆனால் அதுவும் தப்புத்தான்.

    எந்த உயிரையும் கொல்லாமல், ஏமாத்தாமல் வாழ்வது நல்வாழ்க்கைதான். அப்படியே எல்லாரும் புத்தனாகிவிட்டால் மனித இனம் அழிந்துவிடும் என்பது இன்னொரு நல்ல விசயம். அப்படி அழிந்தால்த் தான் என்ன? உலகில் பொல்லுஷன் குறையும். தண்ணீர் பஞ்சம் வராது. எல்லா உயிரும் நிம்மதியாக வாழும். மனிதனோட சேர்ந்து கடவுளும் போய் சேர்ந்து விடுவார்.

    சரி, ஏன் கொல்லுறோம்?

    Essential Amino Acids னு சொல்லுவாங்க.

    The nine amino acids humans cannot synthesize are phenylalanine, valine, threonine, tryptophan, methionine, leucine, isoleucine, lysine, and histidine (i.e., F V T W M L I K H).

    இந்த அமைனோ ஆசிட்கள் நாம் உயிர் வாழத் தேவையானவைகள். இவைகளை நாமாக நம் உடலில் தயாரிக்க முடியாது. இவைகளை தாவரத்தையோ, விலங்குகளையோ கொன்று தின்றுதான் பெற முடியும்.

    எங்க வீட்டுக்கு பின்னால பல பறவைகள் வரும். ஒரூ நாளைக்கு இவைகளுக்கு நான் 1-2 டாலர் செலவில் இரை போடுவேன்னு வச்சுக்கோங்க, ஆனால் திடீர்னு பருந்து வந்து "அட்டாக்" பண்ணும். இந்தப் பறவைகள் எல்லாம் அரண்டு ஓடும். பருந்தை கொல்லணும்னு தோணும். ஏன் பருந்து இப்படி பண்ணுது? சர்வைவல் என்பதே பதில். வைரசும், பாக்டீரியாவும் நம்மை ஏன் கொல்ல முயல்கிறது. சர்வைவல்! சர்வைவல்க்காக ஒரு உயிரை கொல்லுவது தவறில்லைனு சொல்லவில்லை. தவிர்க்க முடியாது என்கிறேன்.

    என்னோட படித்த ஒரு ப்ராமின் பொண்ணு,உடல் நலத்திற்காக டாக்டர் பச்சை முட்டை சாப்பிட (கோழி முட்டைதான்) வேண்டும் என்று சொன்னதால், சாப்பிடுவார், காரணம்? சர்வைவல். இந்த ஊரில் "ரெட் மீட்" சாப்பிட்டால் ரத்த சோகை போகும்னு டாக்டர்கள் சொல்வாங்க. அந்தப் பொண்ணு இப்போ ரெட் மீட் சாப்பிட்டாலும் சாப்பிடுவார். சர்வைவல். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கொன்னாப் பாவமில்லை?னு சொல்லிக்கிறாங்க

    பீஃப் சாப்பிடுவதுக்கும் "வீல்" சாப்பிடுவதுக்கும் வித்தியாசம் இருக்குனு சொல்லுவாங்க. வீல் நல்லா வரணும்னு மனிதன் மிருகத்தை வதைக்கிறான் என்பார்கள். அது பெரிய பாவம் என்பார்கள்.

    இப்படியெல்ல்லாம் யோசிக்க யோசிக்க சரி, தவெறென்பதெல்லாம் எனக்கு ஒரே குழப்பமாயிருக்கு, சாம். ஆனால், மஞ்சு விரட்டு மனிதன் சர்வைவல்க்காக செய்வதில்லை. இதனால் மாட்டூக்கும் அவதி, மனிதனுக்கும் உயிரிழப்பு, பெரிய சிறிய காயம் ஏற்படலாம். சத்தியமா மாட்டுகு எந்த வீரர் அதை வென்றார்னு தெரியாது. அத்னால் இதை விட்டுடலாமே? எதுக்குப் போட்டுக்கிட்டு இது இல்லாமல் "எங்களால் வாழமுடியாது" என்பதுபோல் ஒரு வெட்டிப் பேச்சு.

    இப்போ நெறையப் பேரு வெஜிட்டேரியன் ஆகிறார்கள். மாமிசம் சாப்பிடுவது தப்பு என்பதால்னு நெனச்சுடாதீங்க. ஒரு சில கேன்சர்கள் மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம் என்பதால் அப்ப்படி ஒரு நல்ல காரியம் பண்ணுறாங்க.

    கமல், ரஜினி, சிம்பு எல்லாம் ஜல்லிக்கட்டு நடத்தியே ஆகணும்னு நிற்பது வேடிக்கை. இதை ஆரம்பித்தது நம்ம கமலஹாசன். மற்றவர்கள் இவருக்கு வக்காலத்து வாங்கலைனா தமிழ் துரோகியாகிடுவார்கள்னு பயம். அதனால் இவரோட சேர்ந்து ஒத்து ஊதூறாங்க. சரி ஜல்லிக்கட்டை என்னைப் ப்போல் எதிர்த்தால் என்ன நடக்கும்? நம்ம த்ரிஷா கிருஷ்ணனுக்கு நடப்பதுதான் நடக்கும். ஒரு சில நேரம் எனக்கு என்ன தோணும்னா, எனக்குள்ள பேச்சுச் சுதந்திரம் யாருக்குமே இல்லைனு தோனும். அனானிமஸாக இருப்பதினால்தான் இச்சுதந்திரம். :)




    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வருண்...

      ஒரு பதிவு அளவுக்கான, விரிவான பின்னூட்டத்துக்கு முதலில் நன்றி...

      மனிதனுக்காகத்தான் அனைத்தும் என்ற போதனை தவறானதுதான் ! மனித அழிவு பற்றிய உங்களின் கருத்து ஆச்சரியமான ஒன்று ! உண்மையும் அதுதான் !

      மனிதன் தன் கண்டுபிடிப்புகளால் அழிவதற்கு முன்னால் இயற்கையால் அழிக்கப்படுவான் என்பதே என் கருத்து... டினோஸர் போன்ற மிருக இனங்களின் அழிவை கணக்கில் கொண்டு பார்த்தால் ஒரு இனம் உலகின் ஏனைய இனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாய் உருபெறும் பொழுதில் இயற்கையால் ஏதோ ஒரு வகையில் அழிவை சந்திக்கிறது... இயற்கையின் அந்த " Process " மனிதனுக்கு எதிராய் தொடங்கப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிற்து !

      வங்க பிராமனர்கள் மீன் சாப்பிட ஆரம்பித்த வரலாறு உண்மை... இன்று ஐரோப்பாவில் தினம் ஒரு வேலையாவது உணவில் உருளைக்கிழங்கை சேர்க்காதவர்கள் குறைவு; ஆனால் அதே உருளைக்கிழங்கு இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் சபிக்கப்பட்ட கிழங்காக வகைப்படுத்தப்பட்டிருந்த ஒன்று ! ஏழை எளியவர்களுக்கும் கைதிகளுக்குமே உணவாக இருந்திருக்கிறது !

      ஐம்பதுகளின் தமிழ்நாட்டு பஞ்சம் என ஞாபகம்...அப்போது மக்கள் கத்தாழையின் உள்பகுதியை வழித்தெடுத்து வெல்லத்துடன் சேர்த்து அவித்து உண்டதை நடிகர் சிவக்குமார் தனது " இது ராஜபாட்டை அல்லை " நூலில் குறிப்பிட்டிருப்பார் ... பஞ்சங்களும் போர்களும் மனிதனின் உணவு பழக்கங்களை தலைகீழாக புரட்டிபோட வல்லவை !

      மதுவையும் மாமீசத்தையும் விலக்கிய சிலமதங்களில் கூட உயிர்வாழ அவை அவசியமென்றால் தடைசெய்யப்படவைகளை உட்கொள்ளலாம் என்ற விதிவிலக்கும் உண்டு... ஆக நீங்கள் குறிப்பிட்டதை போல எல்லாமே " சர்வைவல் " தான் ! இதில் சரி தவறு என்பது அவரவரின் அறிதல் மற்றும் தேவை பொறுத்தது.

      இன்றைய அரசியல் மற்றும் சமூக சூழலில் அனானிமஸாக இருப்பதே மேல் என எனக்கும் தோன்றுகிறது !!!

      தொடருவோம்...




      Delete
  12. சாமானியனின் சாலச் சிறந்த பதிவுகளில்
    சங்கமிக்கின்றது இந்த பதிவு!
    எழுத்துக்கள் எருதுகளாக பாய்ந்து வந்தாலும்,
    அதை அடக்கி ஆளும் தங்களின் படைப்பாளுமைக் கண்டு வியந்து நிற்கிறேன்.
    ஏறு தழுவுதலை தமிழர் இலக்கியம் பறை சாற்றினாலும்
    எழுத்தினை தழுவி ஆளும் தங்களது தனித் திறனுக்கு எனது வாழ்த்துகள்
    வணக்கங்கள்.

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே...

      உள்ளார்ந்த நட்புடனான பாராட்டு வார்த்தைகளுக்கும் வருகைக்கும் நன்றி... தொய்வின்றி தொடர முயற்சிப்போம் !

      Delete
  13. சாம் சார்

    தற்சமயத்திற்கு தேவையான பதிவு. நடிகர்கள் வெளியிலும் வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் தங்கள் ரேட்டிங்கை உயர்த்திக் கொண்டிருக்கின்றன. தமிழக அமைச்சர்களும் எம்.எல் ஏக்களும் வாய் மூடி மௌனமாய் தம் ஆட்சியை தக்க வைக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு எதுவும் நடவாதது போல வெவ்வேறு அறிக்கைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. peta என்ற அமைப்பு எக்காளமிட்டுச் சிரித்துக் கொண்டிருக்கிறது. விவசாயி ஒரு பக்கம் செத்து மடிந்து கொண்டிருக்கிறான்.

    போலீஸ்காரன் பொங்கலைக் கூட தின்ன முடியாமல் பிரம்படி கொடுக்க தயாராயிருக்கிறான் .

    தமிழன் மட்டும் தன் பாரம்பரியம் காக்க தெருவில் புழுதியில் புரண்டு கொண்டிருக்கிறான்.

    எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருக்கிறது நீதி மன்றம். எதையெதையோ தானாகமுன் வந்து வழக்கு எடுக்கும் நீதி மன்றம் வெறுமனே வேடிக்கை பார்க்கிறது. இதுதான் இன்றைய தமிழகம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம். யார் செய்வது சரி ? நீங்களே சொல்லுங்கள்.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்லஸ்...

      நம் சமூகம் ( இங்கு நான் நம் சமூகம் என குறிப்பிடுவது ஜாதி மதம் தாண்டி தமிழை தாய்மொழியாக கொண்ட அனைவரையும் ! ) சுயபொறுப்பற்ற, போலி கெளரவ சமூகமாக மாறிவிட்டதன் விளைவே உங்களின் ஆதங்கம்...

      கற்பது ஒன்று, வாழ்வது வேறு என, படிப்பது ஒன்று, பார்ப்பது வேறு என குழம்பி கிடக்கிறது தேசம் ! இக்குழப்பங்கள் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வியாப்பித்துவிட்டன. தன் வருமானத்துக்காக எதையும் செய்யலாம் என்ற அளவுக்கு அறம் சுருங்கிவிட்ட மண்ணின் நிலை இப்படித்தான் அமையும் !

      தொடருவோம்... நன்றி

      Delete
  14. நீங்கள் இப்படி ஒரு பதிவு எழுதுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை! வருந்துகிறேன்!

    ஜல்லிக்கட்டுக்காக அமைப்புகள் இருக்கின்றன என்பது கூடத் தெரியாமல், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு நீங்கள் என்னென்ன பரிந்துரைகளையெல்லாம் முன்வைத்துள்ளீர்களோ அவற்றில் மிகப் பெரும்பாலானவை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டன என்பதை அறியாமல், நடிகர்களுள் யார் யாரெல்லாம் தொடக்கத்திலிருந்தே ஜல்லிக்கட்டு முதலான தமிழர் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள் - யார் யாரெல்லாம் இப்பொழுது புதிதாக விளம்பரத்துக்காய்க் கூவுகிறார்கள் என்கிற வேறுபாடு புரியாமல், ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் எனச் சில நிறுவனங்கள் ஏன் குதிக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ளாமல், ஜல்லிக்கட்டுப் பற்றிய அடிப்படைத் தெளிவும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் பதிவு இது!

    "எதிர்கொள்ளும் மிருகம் வலுவிழக்கும்வரை அதனை அலைகழித்து, தன் பலத்தின் மூலம் அதனைக் களைப்புறச்செய்வதுடன் நிறுத்திக் கொள்வது ஜல்லிக்கட்டு" என்று எழுதியுள்ளீர்களே; தெரியாமல்தான் கேட்கிறேன், நீங்கள் இதுவரை ஜல்லிக்கட்டைத் தொலைக்காட்சியில் கூடப் பார்த்ததில்லையா?

    ReplyDelete
    Replies
    1. ***யார் யாரெல்லாம் இப்பொழுது புதிதாக விளம்பரத்துக்காய்க் கூவுகிறார்கள் என்கிற வேறுபாடு புரியாமல், ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் எனச் சில நிறுவனங்கள் ஏன் குதிக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ளாமல், ஜல்லிக்கட்டுப் பற்றிய அடிப்படைத் தெளிவும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் பதிவு இது!***

      மெரீனாவில் போராட்டம் நடத்தும் தமிழ்ர்களுக்கெல்லாம் ஜல்லிக்க்கட்டு புரிந்த அளவுக்கு சாம்க்கு புரியலைனு சொல்றீங்க? ஹா ஹா. ஆமா, மஞ்சுவிரட்டுக்கும் மெரீனாவுக்கும் என்ன சம்மந்தம். உடனே சென்னையீல் உள்ள சேரியில் வாழ்பவர்கள் எல்லாம் அலங்காநல்லூர்ல இருந்து சென்னைக்கு குடிபோனவங்க. வருடா வருடம் அலங்காநல்லூர்ல போயி ஏறுதழுவுவர்கள். இதில் எந்தவிதமான அரசியலும் இல்லைனு அடிச்சு நொல்லுங்க??!

      ஜல்லிக்கட்டுக்கும் மெரீனாவுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்க மாட்டீங்க? ஏனென்றால், உங்க கருத்துக்கு ஆதரவாக நின்னால் அது மெரினாவில் போராடும் யாராக இருந்தாலும், ஒரு ஆடு கன்றாக இருந்ந்தாலும் சேர்த்துக்குவீங்க?

      சிலர் ஆதரிக்கிறாங்க, சிலர் எதிர்க்கிறாங்க (அரசியலுக்காக) என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டூம், தனக்கென்ற தன்னிப்பட்ட கருத்து இருக்கக்கூடாதா? ஆக எதிர்த்தால் அரசியலுக்காக எதிர்ப்பவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்களுக்கு எதிர்ப்பவன் கையாள்??

      சரி, பர்சனலாக நீங்க இறங்கியதால் நானும் என் பங்குக்கு கேட்க்கிறேன்..

      நீங்க இதுவரை எத்தனை முறை ஏறு தழுவி இருக்கீங்க? னு சொல்லுங்க அன்பரே?

      ஏறு தழுவிய இடம், நீங்க வென்றது தோற்றது பற்றிய விபரம் பகிர்ந்தால் நன்று. அப்படி தழுவும்போது ஏற்பட்ட உயிர்சேதம் ஏதாவது பார்த்து இருக்கீங்களா? மாடு முட்டி ரத்தக் காயம், ஆண்மை இழப்பு, அப்படி ஏதாவது?? இல்லை இதுவரை அப்படி எதுவுமே நடந்தது இல்லையா?

      சொல்லுங்க தோழரே!




      Delete
    2. வருண் அவர்களே!

      முதலில், நான் தனிப்பட்ட முறையில் இங்கு யாரையும் தாக்கவேயில்லை. "நடிகர்களுள் யார் யாரெல்லாம் தொடக்கத்திலிருந்தே ஜல்லிக்கட்டு முதலான தமிழர் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள் - யார் யாரெல்லாம் இப்பொழுது புதிதாக விளம்பரத்துக்காய்க் கூவுகிறார்கள் என்கிற வேறுபாடு புரியாமல்..." என்றுதான் எழுதியிருக்கிறேன். அதாவது, நான் இந்த வரியில் ‘புதிதாக விளம்பரத்துக்காய்க் கூவுபவர்கள்’ என்று குறிப்பிட்டது நடிகர்களில் சிலரை. ‘நடிகர்களுள்’ என்று வரியின் தொடக்கத்திலேயே இருக்கும்பொழுது இது சாம் அவர்களைக் குறிப்பிடுவதாக நீங்கள் ஏன் திரித்துச் சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. குற்றம் சாட்டுங்கள், வேண்டா என்று சொல்லவில்லை. ஆனால், உங்கள் குற்றச்சாட்டைக் குற்றம்சாட்டப்படுபவர் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதைப் பார்க்கும் மூன்றாம் மனிதராவது ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு கொஞ்சமாவது பொருத்தமாக இருக்கிறதா என நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!

      Delete
    3. ***நீங்கள் இதுவரை ஜல்லிக்கட்டைத் தொலைக்காட்சியில் கூடப் பார்த்ததில்லையா?***

      இது சாமை நோக்கி நீங்கள் கேட்ட கேள்வி! இதை அடிப்படையாக வைத்து நான் உங்களிடம் உங்கள் பங்களிப்பு பற்றி கேட்டேன். நான் எதையும் திரிக்க முயலவில்லை. புரிதலுக்கு நன்றி நண்பரே!

      Delete
    4. மஞ்சு விரட்டுக்கும் மெரினாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டிருக்கிறீர்கள். ஏன், சமூகத்தின் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து அதே சமூகத்தின் இன்னொரு பகுதி மக்கள் போராடக்கூடாதா? என்ன பேசுகிறீர்கள்? ஜல்லிக்கட்டை ஒழிக்கச் சிலர் முயல்வதே தமிழ்நாட்டின் நாட்டுக் காளை இனங்களை ஒழித்து, கலப்பினப் பசுக்களை மட்டுமே முழுக்க முழுக்க நாம் சார்ந்திருக்கச் செய்ய வேண்டும் என்கிற வஞ்சக எண்ணத்தால்தான். இப்படிச் செய்தால் அதன் பின் பசுக்களை இனப்பெருக்கம் செய்விக்க நாம் வெளிநாட்டு நிறுவனங்களிடம்தான் கையேந்தி நிற்க வேண்டும் என விவரம் அறிந்த சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ‘பால் அரசியல்’ என்றே இதை வர்ணிக்கிறார்கள். ஆக, மெரினாவில் தமிழர்கள் போராடக் காரணம், பாதிக்கப்படும் உழவர்களுக்காக மட்டுமில்லை தங்களுக்காகவும் சேர்த்துத்தான்.

      இத்தனை விவரங்கள் இருக்க, ஒன்றுமே தெரியாமல் எடுத்த எடுப்பிலேயே இதை அரசியல் போராட்டம் என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? சென்னை, திருச்சி, கோவை, மதுரை என இத்தனை இடங்களில் இத்தனை ஆயிரம் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாகப் போராடுகிறார்களே, இவ்வளவு பேரும் அரசியல் கட்சிகளிலிருந்து வந்தவர்களா? அது எந்தக் கட்சி ஐயா இத்தனை ஆயிரம் இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருப்பது?

      Delete
    5. //ஜல்லிக்கட்டுக்கும் மெரீனாவுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்க மாட்டீங்க? ஏனென்றால், உங்க கருத்துக்கு ஆதரவாக நின்னால் அது மெரினாவில் போராடும் யாராக இருந்தாலும், ஒரு ஆடு கன்றாக இருந்ந்தாலும் சேர்த்துக்குவீங்க? சிலர் ஆதரிக்கிறாங்க, சிலர் எதிர்க்கிறாங்க (அரசியலுக்காக) என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டூம், தனக்கென்ற தன்னிப்பட்ட கருத்து இருக்கக்கூடாதா? ஆக எதிர்த்தால் அரசியலுக்காக எதிர்ப்பவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்களுக்கு எதிர்ப்பவன் கையாள்??// - அப்படிப்பட்ட கீழ்த்தரப் போக்கு எனக்குக் கிடையாது. இதை நீங்கள் நம்பாவிட்டால் எனக்கு அதனால் எந்த இழப்பும் கிடையாது. மற்றபடி, தனிப்பட்ட கருத்து எல்லோருக்கும் இருக்கலாம். அது அவரவர் உரிமை. ஆனால், உண்மைத் தகவல்கள் என்ன, நடக்கும் பிரச்சினையின் பின்னணி என்ன போன்ற அடிப்படைத் தகவல்கள் தெரியாமல் எழுதக்கூடாது என்பதே சொல்ல வந்தது.

      Delete
    6. //நீங்க இதுவரை எத்தனை முறை ஏறு தழுவி இருக்கீங்க? னு சொல்லுங்க அன்பரே? ஏறு தழுவிய இடம், நீங்க வென்றது தோற்றது பற்றிய விபரம் பகிர்ந்தால் நன்று. அப்படி தழுவும்போது ஏற்பட்ட உயிர்சேதம் ஏதாவது பார்த்து இருக்கீங்களா? மாடு முட்டி ரத்தக் காயம், ஆண்மை இழப்பு, அப்படி ஏதாவது?? இல்லை இதுவரை அப்படி எதுவுமே நடந்தது இல்லையா?// - அதாவது, நான் ஆண்மகனா என்று கேட்கிறீர்கள், அப்படித்தானே? நான் ஆண்மகன்தான். ஆனால், "நான் ஆம்பள, ஆம்பள" என்று அதையே ஒரு பெரிய பெருமை போல் பேசித் திரிபவன் இல்லை. ஆண் என்பது இயற்கை எனக்களித்த பாலின அடையாளம். பெண், திருநங்கை, திருநம்பி என்பவை போல அதுவும் ஒரு பாலின அடையாளம், அவ்வளவுதான். அதில் தனிப்பட மீசை முறுக்கிப் பெருமை கொள்ள ஏதும் கிடையாது என்பது என் கொள்கை. காரணம், அது நான் முயன்று பெற்றது இல்லை. என் தமிழ் - சமூக - தொழில்நுட்ப அறிவுகள் மட்டுமே நானாக முயன்று பெற்றவை. இத்துறைகளில் நான் பெற்ற வெற்றிகள் மட்டுமே நானாக முயன்று பெற்றவை. அவற்றை மட்டுமே நான் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். மேலும், எனக்கு ஆண்மை இருக்கிறதா இல்லையா என்பதை, ஒருவேளை நான் பிற்காலத்தில் திருமணம் புரிந்து கொள்ள முடிவெடுத்தால் அப்பொழுது என் மனைவியிடம் நிறுவிக் கொள்கிறேன். உங்களிடம் அதை நான் உறுதி செய்து காட்ட வேண்டிய தேவை இல்லை என நினைக்கிறேன், சரிதானே?

      Delete
    7. //***நீங்கள் இதுவரை ஜல்லிக்கட்டைத் தொலைக்காட்சியில் கூடப் பார்த்ததில்லையா?*** இது சாமை நோக்கி நீங்கள் கேட்ட கேள்வி! இதை அடிப்படையாக வைத்து நான் உங்களிடம் உங்கள் பங்களிப்பு பற்றி கேட்டேன். நான் எதையும் திரிக்க முயலவில்லை// - சாம் அவர்களிடம் அப்படியொரு கேள்வியை நான் கேட்கக் காரணம், "எதிர்கொள்ளும் மிருகம் வலுவிழக்கும்வரை அதனை அலைகழித்து, தன் பலத்தின் மூலம் அதனைக் களைப்புறச்செய்வதுடன் நிறுத்திக் கொள்வது ஜல்லிக்கட்டு" என்று அவர் எழுதியிருந்ததால்தான். ஜல்லிக்கட்டைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்குக் கூடத் தெரியும் ஜல்லிக்கட்டில், காளையைத் திறந்து விடும்பொழுதே இளைஞர்கள் அதை எதிர்கொள்வார்கள் என்பது. அப்படியிருக்க, ஏதோ காளை வெளியே வந்து, பலரையும் நோக்கிப் பாய்ந்து ஓடிப் பின் களைக்கும் வரை போக்குக் காட்டி விட்டு அதன் பிறகு அதை மக்கள் அடக்குகிறார்கள் என்பது போல் இப்படியொரு வரியை அவர் எழுதியிருப்பது மிகவும் தவறான தகவல். சொல்லப் போனால், ஜல்லிக்கட்டில் காளையை யாரும் அடக்குவதே கிடையாது. யார் அதன் கொம்பில் இருக்கும் பொருளை அவிழ்த்துக் கொண்டு வருகிறார்கள் அல்லது யார் அதைக் கட்டிப் பிடித்துக் குறிப்பிட்ட நேரத்துக்குத் தாக்குப் பிடிக்கிறார்கள் என்பவை மட்டும்தான் கணக்கு. அதனால்தான் காளையின் திமிலைப் பிடித்துக் கொண்டு கூடவே ஓடுகிறார்கள். ஏன் இவையெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?

      நான் இதுவரை ஜல்லிக்கட்டைத் தொலைக்காட்சிச் செய்திகளில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அந்தப் பார்வையாளன் என்ற தகுதியின் அடிப்படையில்தான் அதே பார்வையாளன் எனும் தகுதி அவருக்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினேன். அதாவது, எனக்கு என்ன தகுதி இருக்கிறதோ பொதுவாகத் தமிழர்கள் அனைவருக்கும் இது குறித்து என்ன தகுதி இருக்கிறதோ அந்தத் தகுதி அவருக்கு இருக்கிறதா என்றுதான் நான் கேள்வி எழுப்பியிருக்கிறேனே அன்றி நான் ஆயிரம் காளைகளை அடக்கிய மாவீரன் நீங்கள் குறைந்தது தொலைக்காட்சியிலாவது பார்த்திருக்கிறீர்களா என்று ஒன்றும் நான் கேட்கவில்லை.

      Delete
    8. ***இ.பு.ஞானப்பிரகாசன்January 18, 2017 at 7:33 AM

      மஞ்சு விரட்டுக்கும் மெரினாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டிருக்கிறீர்கள். ஏன், சமூகத்தின் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து அதே சமூகத்தின் இன்னொரு பகுதி மக்கள் போராடக்கூடாதா? என்ன பேசுகிறீர்கள்? ***

      நான் தமிழ்லதானே சொல்றேன்? மஞ்சுவிரட்டுக்கும் மெரீனாவுக்கும் சம்மந்தமே இல்லை. அப்படி போரடினால் அதற்கு அரசியல் தூண்டுதல்கள் நிச்சயம் உண்டு. இதெல்லாம் உங்களுக்கு புரியாதது என் தப்பா? இல்லை உங்கள் தப்பா??

      Delete
    9. வணக்கம் அய்யா,

      தனிப்பட்ட காரணங்களால் என்வலைப்பக்கத்தை கவனிக்கமுடியாத வேலையில், உங்களின் பின்னூட்டம் வரப்பெற்றதால் பதிலுக்கு தாமதம்... ஐந்து மாதங்கள் தாமதம் ! இந்த ஐந்து மாதங்களில் ஜல்லிக்கட்டுக்கு பிறகு எத்தனையோ சமூக பிரச்சனைகளுக்கான ஐந்து நிமிடங்களை அந்த பிரச்சனைகளுக்கு எந்த ஒரு நிரந்தர தீர்வையும் கண்டறியாமல் மறந்துவிட்டு தமிழ் கூறும் நல்லுலகம் அதன் கலாச்சாரத்துக்கு மிகவும் முக்கியமானதும், சமூகத்துக்கு மிக மிக அவசியமானதுமான " பிக் பாஸ் " நிகழ்ச்சிக்கு ஐந்து நிமிடத்தை ஒதுக்கியிருக்கும் இன்று தங்களின் பின்னூட்டத்துக்கு பதில் கூற விழைகிறேன்...

      முதலாவதாக,ஜல்லிக்கட்டு பற்றிய எனது அறிவு குறைந்த அளவே என்பதை எந்த வருத்தமுமின்றி தெரியப்படுத்த விரும்புகிறேன்... எனது பூர்வீக ஊரிலும் சரி, அதனை சுற்றிய பகுதிகளிலும் சரி ஜல்லிக்கட்டு பெரிதாக கொண்டாடப்பட்டதில்லை. மேலும் ஜல்லிக்கட்டுக்கான தடை வராதிருந்தால் " பொங்கல் திருநாளை ஒட்டி தமிழகத்தின் சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது " என்ற பொதுவான பத்திரிக்கை செய்திகளோடு "விரைவாக மறைந்து வரும்" பாரம்பரியவிளையாட்டு என்ற அளவில்தான் இருந்திருக்கும்.

      பல மாணவ போராட்டங்கள் தந்திரமாய் " தீர்த்துவைக்கப்பட்டதை " போல இதுவும் ஆகிவிடும் என்ற எண்ணத்தில், உணர்ச்சிமயமாய் பிரச்சனைகளை அணுகி மூலத்தை மறந்துவிடுகிறோமே என்ற ஆதங்கத்தின் விளைவே என் பதிவு.

      அனிச்சையாய் தெரித்து கிளம்பிய மாணவர் போராட்டத்துக்கு கடைசி சொட்டு காரணம்தான் ஜல்லிக்கட்டு. ஒரு கோப்பை காரணங்களுக்கான மூலம் மீட்டெடுக்க வேண்டிய ஒன்று... மத்தியில் ஆள்வது எந்த கட்சியானாலும் சரி, அது தமிழகத்தை நடத்தும் மாற்றாந்தாய் முறைக்கு முக்கியமான மூல காரணம் ஒன்று உண்டு... நானறிந்த வரை எநத அரசியல் நிபுணரும், எந்த ஒரு ஊடகமும் அந்த காரணத்தை ஆராய முயலவில்லை ! சமூக பொறுப்பும், தீர்க்கமான அரசியல் அறிவும் கொண்ட நீங்களும் சற்று யோசித்து பாருங்கள் அய்யா ...

      தமிழர்களான நமது " உணர்ச்சி " அரசியலுக்கு சமகால சான்று வேண்டுமானால் தமிழீழ விடுதலைப்போரை எடுத்துக்கொள்ளுங்கள்... அவர்களின் அவலங்களை அரசியலாக்கி ஓட்டு பிச்சை கேட்ட அரசியல்வாதிகள் தொடங்கி பிரபாகரனின் வீரதீர சாகசம் போற்றிய ஊடகங்கள் வரை அனைவருக்கும் தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் முகாம்கள் எந்த நிலையில் இருந்தன ? அங்கு அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது தெரியுமா ? இவர்களில் எத்தனை பேர் அந்த மக்களை சென்று பார்த்திருப்பார்கள் ? அவர்களுக்கு என்ன செய்தார்கள் ? இலங்கைக்கு சென்று போரிடுவோம் என கூச்சலிட்டவர்கள் கால்நடை தூரத்தில் இருந்தவர்களுக்கு எந்த துரும்பை தூக்கி கொடுத்து உதவினார்கள் ?

      சிரியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏழாம் பொருத்தம். ஆனால் இத்தனை தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகும் ஐரோப்பிய நாடுகளின் கதவுகள் அந்நாட்டு அகதிகளுக்கு திறந்தே இருக்கின்றன ! இனவெறி இருப்பது உண்மையென்றாலும் ஐரோப்பாவில் ஈழத்தமிழர்கள் நடத்தப்படும் விதத்தையும் தமிழ்நாட்டில் அவர்கள் பார்க்கப்படும் விதத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியதை உங்களின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

      ஜல்லிக்கட்டுக்கு முறையான அமைப்புகளிருக்கின்றனவா எனத்தெரியவில்லை என்ற வினாவோடுதான் நான் அந்த பத்தியை ஆரம்பித்திருக்கிறேனே தவிர இல்லை என கூறவில்லை. அப்படி காலங்ககாலமாய் ஜல்லிக்கட்டை நேசித்து நடத்துபவர்களையோ விளையாட்டை ஒருங்கிணைக்கும் சம்மேளனத்தை சார்ந்தவர்களையோ போராட்டத்தின் போது நானறிந்தவரை எந்த ஒரு ஊடகமும் பெரிதாக கண்டுக்கொள்ளவுமில்லை, மதிக்கவுமில்லை !

      Delete
    10. இயக்குநரும் நடிகருமான மறைந்த நடிகர் மனிவண்ணனையும் அவர் அளித்ததொலைக்காட்சி பேட்டி ஒன்றையும் இத்தருணத்தில் எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை...

      மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆண்ட காலம் அது...

      " பாஜக அரசு மத,இனவாத கட்சி என்று கூறினீர்கள் ஆனால் அவர்களின் ஆட்சி ஒன்றும் அப்படி மோசமானாதாக இல்லையே என்ற கேள்விக்கு " அவர்களுக்கு இன்னும் தனிப்பட்ட முழு பலம் கிடைக்கவில்லை.. அப்படிப்பட்ட ஒரு ஆட்சி அமைந்தால் அவர்களின் சுயமுகம் தெரியும் " என குறிப்பிட்டிருந்தார்.

      அப்படிப்பட்ட தீர்க்கமான அரசியல் மற்றும் சமூக பார்வை கொண்ட நடிகர்களை நான் குறிப்பிடவில்லை. ஏதாவது ஒருசமூக பிரச்சனை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் சட்டென " வீர அறிக்கை " விட்டு, தொடர்ந்து களத்தில் நிற்பவர்களையும் தங்களின் மீடியா வெளிச்சத்தினால் பின்னுக்கு தள்ளிவிடுபவர்களை பற்றியே எனது சாடல்.

      ஆதரிப்பவர்களை பற்றிய மூலம் பார்க்க தேவையில்லை ஆனால் எதிர்ப்பவர்களை அக்னி பரிட்சைக்கு உட்படுத்தியே தீர வேண்டும் என்ற நியாயம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை அய்யா... இத்தனைக்கும் போராட்டம் தவறு என்றே நான் கூறவில்லை !

      சமூக போராட்டம் ஒரு தலைவனை உருவாக்கும்போதே நிறைவடையும். அத்தலைவன் அப்போரட்டத்தை ஆரம்பித்தவனாகவும் இருக்கலாம் அல்லது அப்போரட்டத்தினால் உந்தப்பட்டு பிறந்தவனாகவும் இருக்கலாம்... அப்படிப்பட்ட சூழல் கைக்கூடும் தருணங்களிலெல்லாம் அதிகார வர்க்கம் சாம பேத தான தண்டங்களை பயன்படுத்தி கருவை சிதைத்ததற்கான உதாரணங்கள் உலகம் முழுவதும் உண்டு ! மக்களின் கோபம் உச்சத்தில் இருக்கும் போது புஜபலம் காட்டாமல் அவர்கள் மதிப்பவர்களையே தந்திரமாய் களத்தில் இறக்குவதும் உண்டு !!

      வேகன் மட்டுமல்ல அய்யா, இன்று அழிந்துவிட்டது என நீங்கள் வருந்தும் பல்வேறு அரிசி வகைகளை வீரிய விதைகளின் மூலம் அழித்தொழித்த, போபால் விஷ வாயு கசிவுக்கு காரணமான மாசாட்டோவின் மூலம் வரை எனக்கும் தெரியும். ஜல்லிக்கட்டுக்கு ஈடான போபால் மக்களின் கோபத்தினால் தலைமறைவானவர்கள்தான் இன்றும் (?) உங்களுக்கு மரபணு மாற்று கத்தரிக்காய்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா அய்யா ?

      எங்கோ இந்தியாவில் நடந்த போபால் விபத்தை காரணம் காட்டி பிரான்ஸ் நாடு இன்றும் மாசாட்டோவை சந்தேக வளையத்தில் வைத்திருக்கும்போது, அவ்விபத்து நடந்த சில நாட்களில், விபத்துக்கான முதல் காரணமாய் சந்தேகிக்கப்படவர்களில் முக்கியமான அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான அமெரிக்கரை மத்திய அரசு இந்தியாவிலிருந்து பாதுகாப்பாய் அமெரிக்கா அனுப்பிய வரலாறு தெரியுமா அய்யா ?

      அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து வெளியேற காங்கிரஸ் அரசாங்கம் திறந்துவிட்ட அதே வாசலைதான் வேகன் உள்ளே நுழைய பிஜேபி அரசு திறந்துவிட்டிருக்கிறது !

      ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என நான் குறிப்பிட்டதும் நீங்கள் கவணிக்காமல்விட்ட பல வரிகளில் ஒன்றாகிவிட்டது வேதனை ! இந்திய ஜீவகாருண்ய அமைப்பினால் அமெரிக்கா சென்று அந்நாட்டு மிருக பாதுகாப்பு சட்டத்தில் வழக்க தொடுக்க முடியுமா ? ஆனால் வேகனால் அது இந்தியாவில் சாத்தியப்படுகிறது என்றால் யார் காரணம் ? ஆக, மேல்நாட்டவர்களுக்கு கால் பிடித்து சிகப்பு கம்பளம் விரிக்கும் நம் நிர்வாகத்தை விட்டுவிட்டு வேகனை முறைத்து என்ன பயன் ? அவன் வியாபாரி... யார் யாரெல்லாம் கதவை திறந்து விடுகிறார்களோ அங்கெல்லாம் நுழையத்தான் செய்வான்...

      Delete
    11. அய்யா,

      விளையாட்டின் இரண்டு வகைகளாய் நான் குறிப்பிட்டது ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பாகவோ ஆதரவாகவோ அல்ல, ஒரு விளக்கமாக மட்டுமே குறிப்பிட்டேன். எருதை விடுங்கள், நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்களின் ஆராவாரத்துக்கு இடையே வெளிப்படும் எந்த பிராணியும் மருண்டு திமிறத்தான் செய்யும். நூற்றுக்கணக்கான எருதுகளுக்கு மத்தியில் விடப்படும் மனிதனின் உணர்வே மனிதர்களுக்கு மத்தியில் நிற்கும் அந்த பிராணிக்கும் ஏற்படும். அந்த திமிறலின் விளைவாய் ஒரு கட்டத்தில் களைப்புறவும் செய்யும். அப்படிப்பட்ட பிராணியை தழுவும் மனிதர்கள் தங்களையும் அறியாமல் தங்களின் பலத்தை அப்பிராணியின் மீது கடத்துவதும் அவ்விளைவால் அது சோர்வதும் இயற்கை.

      இந்த இயற்கை நியதியை நீங்களும்,உங்களுக்காக நானும் மறுத்தாலும் அது மாறப்போவதிலை !

      போராட்டத்துக்கு பிறகு நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை பற்றிய தொலைக்காட்சி செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தேன்...

      வெவ்வேறு ஊர்களில் நடந்த நிகழ்ச்சிகளை காட்டினார்கள்... ஒன்றில் மாட்டின் கழுத்தில் கயிறுகளை கட்டி அதன் இருபுறமும் பலர் பிடித்து கொண்டிருந்தார்கள்... மற்றொரு நிகழ்வில் ஓடும் மாட்டினை பலர் சூழ்ந்து பாய்ந்து பிடிக்கும் முறை...

      " மேடையில் அரசியல்வாதிகள், அதிகாரிகள்... ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் கீழே ! " என ஜூனியர் விகடன் செய்தி ஒன்று...

      விருதுநகர் கான்சாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளித்த காவலர் மாடு முட்டி மரணம் என ஒரு செய்தி...

      இதையெல்லாம் நீங்கள் பார்த்தீர்களா படித்தீர்களா என்றெல்லாம் நான் கேட்க விரும்பவில்லை... ஆனால் இவற்றை அறிய நேர்ந்த போதெல்லாம் " நீங்கள் குறிப்பிட்ட பலவும் ஏற்கனவே முறைப்படுத்தப்பட்டுவிட்டது என்பது கூட தெரியாமல்... " என்பதான உங்களின் பின்னூட்ட வரிகளை நினைத்துக்கொண்டேன்...

      ஆழ்ந்து வாசித்து, நியாயமான கோபத்துடன் ஆக்கப்பூர்வமான பின்னூட்டமிட்ட நீங்கள் பதிவின் இறுதியில் நான் கேட்ட கேள்வியை பற்றிமட்டும் ஒன்றும் குறிப்பிடவில்லையே என்பது மட்டும் தான் உங்கள் மீதான என் உரிமையான கோபம் !

      நேரம் கிடைத்தால், விருப்பம் இருந்தால் " என் கருத்தை ஆதரிக்க எனக்கிருக்கும் அதே உரிமை அக்கருத்தை எதிர்ப்பவனுக்கும் உண்டு " என்ற விக்டர் ஹூயூகோவின் வரிகளை நினைவில் கொண்டு இப்பதிவை மீன்டும் வாசித்து பாருங்கள்...

      செய் அல்லது செத்து மடி, வெற்றி அல்லது வீரமரணம், மொழியை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்பதான உணர்ச்சி அலைகளின் மேல் பலர்... வீரவணக்கங்களும் போற்றும் கவிதைகளும் கொண்டுவந்து குவித்த கூட்டம் கண்ணீர் காய்வதற்குள் மின்னலாய் மறைந்துவிட்ட பிறகான கான்சாபுரம் காவலரின் குடும்பம் என்ன செய்யும் என யதார்த்தம் என்னும் சுட்டெரிக்கும் பால்வெளியில் நின்று யோசிக்கும் சிலர்...

      நான் இரண்டாம் வகை... இது என் பலமா பலவீனமா என தெரியாது... தெரிந்துக்கொள்ள விரும்பவுமில்லை...

      ஏதோ ஒரு கருப்பு வெள்ளை பிரெஞ்சு படம்... கண்ணுக்கெட்டிய தூரம் வரை வீரர்கள் மாண்டு கிடக்கும் போர்க்களத்தில் ஒரே ஒருவன் மட்டும் " எதற்காக ? இதெல்லாம் எதற்காக ? " என கதறிக்கொண்டிருப்பான்...

      அப்படிக் கதறிய அசோகன் புத்தம் தழுவி ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஏன் என்ற கேள்விக்கான பதில் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை !!!

      நன்றியுடன்
      சாமானியன்

      Delete
    12. மதிப்பிற்குரிய ஐயா சாமானியன் அவர்களுக்கு நேச வணக்கம்!

      இவ்வளவு நாட்களுக்குப் பிறகு, இது பற்றி இவ்வளவு விரிவான ஒரு மறுமொழியை நீங்கள் அளிப்பீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. "நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு" என்பதை நம்புபவன் நான். அதன் அடிப்படையில்தான் மேற்படி கருத்தை அளிக்கத் துணிந்தேன். ஆனால், அதை நீங்கள் இந்தளவுக்குத் தனிப்பட்ட தாக்குதல் போல எடுத்துக் கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

      கட்டுரையில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நீங்கள் எழுதியிருந்தவற்றை நான் கவனிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். கவனிக்காமல் இல்லை ஐயா! ஆனால், ஒரு படைப்பைப் படிக்கும்பொழுது அதில் நம் மீது தாக்கம் ஏற்படுத்திய வரிகளைக் குறிப்பிட்டுத்தான் நாம் மறுமொழி அளிப்பது இயல்பு என்பதைத் தாங்கள் அறியாதவர் இல்லை. இன்னும் சொல்லப் போனால், ஆங்காங்கே இருக்கும் ஓரிரு வரிகளையும் கருத்துக்களையும் விட மொத்தத்தில் அந்தப் படைப்பு எந்த அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அது குறித்த நம் கருத்து அமைகிறது. நீங்கள் சல்லிக்கட்டுப் போராட்டம் தவறு என்று கூறவில்லைதான். ஆனால், சல்லிக்கட்டுக்காக அதைச் சார்ந்தவர்கள்தாம் போராட வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். இது மிக மிக மிகத் தவறான கண்ணோட்டம்! (இது பற்றி நான் என் கருத்துரையில் குறிப்பிடவில்லையென்றாலும் அன்றைய சூழலில் நான் எந்த மனநிலையில் அவ்வாறு கருத்திட்டிருப்பேன் என்பதை இன்று நினைத்துப் பார்த்தால், இதுதான் காரணமாக இருக்கும் எனத் தோன்றுகிறது).

      நம் மக்கள் மீது சமூக ஆர்வலர்கள் காலங்காலமாக முன்வைக்கும் குற்றச்சாட்டு, எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போகிறார்கள்; சமூக அவலங்களை எதிர்த்துப் போராடுவதில்லை என்பதுதான். எனவே, நாட்டில் ஒரு புரட்சி, போராட்டம் எனத் துணிந்து யாராவது முன்வந்தால் அதை நாம் பாராட்டுவதே மாற்றத்துக்கு வழிவகுக்கும்; வருங்காலத் தலைமுறையைச் சரியான குடிமக்களாக மாற்றும். மாறாக, ஒவ்வொரு போராட்டத்தின்பொழுதும் போராடுபவர்கள் யார், போராட்டம் தொடர்பான பிரச்சினைக்கு நேரிடையாகத் தொடர்புள்ளவர்களா இல்லையா எனவெல்லாம் ஆராய்வது சரியான போக்கு ஆகாது. தங்களுக்கு எதிராக எந்த வகையிலும் மக்கள் ஒற்றுமைப்பட்டு விடக்கூடாது என நினைக்கிற அரசியலாளர்களும் அவர்தம் கைத்தடிகளும்தாம் இப்படியெல்லாம் சொல்வார்கள் பொதுவாக. அதற்காக, நீங்கள் அப்படிப்பட்டவர் என நான் சொல்லவில்லை. அறிந்தோ அறியாமலோ அப்படிப்பட்டவர்களைப் போல் நீங்களும் பேசுகிறீர்களே என்பதுதான் என் வருத்தம்!

      அந்தந்தப் பிரச்சினைகளுக்காக அவரவர்தாம் போராட வேண்டும் எனும் வாதம் எப்பொழுதும் தமிழர்கள் தமிழர்களுக்காகப் போராடும்பொழுதுதான் முன்வைக்கப்படுகிறது. ஈழப் பிரச்சினைக்காக இங்கிருக்கும் தமிழர்கள் போராடினால் அவர்கள் பிரிவினையாளர்கள் என்பவர்கள் வியத்நாம் மக்களுக்காக இதே தமிழ்நாட்டுத் தமிழர்கள் அள்ளி அள்ளிக் கொடுத்தபொழுது ஏனென்று கேட்கவில்லை; குசராத்து நிலநடுக்கத்துக்காக நிதி திரட்டிக் கொடுத்தபொழுது வேண்டாவென மறுக்கவில்லை. ஆனால் தமிழர் பிரச்சினை என வந்தால் மட்டும் அந்தந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள், அவர்களுக்கான அமைப்புகள் மட்டும் போராடினால் போதும் என்பது எந்த வகையிலான நியாயம் ஐயா?

      Delete
    13. எல்லா நடிகர்களையும் நான் குறை கூறவில்லை என்றீர்கள். சிம்புவை நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தீர்கள். அதைத்தான் நான் கருத்தில் "யார் யாரெல்லாம் தொடக்கத்திலிருந்தே ஜல்லிக்கட்டு முதலான தமிழர் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள் - யார் யாரெல்லாம் இப்பொழுது புதிதாக விளம்பரத்துக்காய்க் கூவுகிறார்கள் என்கிற வேறுபாடு புரியாமல்" நீங்கள் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டேன். சிம்பு எழுதிய பீப் பாடல் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. நானும் பெண் வயிற்றில் பிறந்தவன்தான். ஆனால் அதே சிம்புவுக்கு, தமிழர் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் முகமும் உண்டு. ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கான மாணவர் போராட்டத்தை இன்றைய இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்தாடும் முன்னணி நடிகர்கள் பலர் கண்டு கொள்ளாமல் இருந்தபொழுது முதல் ஆளாகப் போய்த் தன் ஆதரவைத் தெரிவித்தவர் சிம்பு. அதற்கு முன்பு ஈழத் தமிழினப் படுகொலையை ஒட்டி அவர் அளித்த தமிழுணர்வுள்ள நேர்காணலையும் நான் படித்திருக்கிறேன். மனிதர்களுக்கு எத்தனையோ முகங்கள்! ஒரு முகம் தவறாக இருக்கிறது என்பதற்காக அவர்கள் செய்யும் எல்லாமே தவறானவை என உள்நோக்கம் கற்பிப்பது சரியில்லை என்பது என் கருத்து.

      அதற்காக, போராட்டத்தை ஆதரிப்பவர்கள் எல்லாருமே சரியானவர்கள்; எதிர்ப்பவர்கள் எல்லாருமே நெருப்புச் சோதனைக்கு ஆளாக்கப்பட வேண்டியவர்கள் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால், எது ஒன்றுக்கும் இடம் - பொருள் - ஏவல் உண்டு. நாட்டில் எதிர்பாராத ஒரு நன்மை நிகழும்பொழுது அதை யார் யாரெல்லாம் என்னென்ன காரணங்களுக்காக ஆதரிக்கிறார்கள் என ஆராய்வதை விட அனைவரின் ஆதரவையும் ஒருங்கு திரட்டிக் கோரிக்கை நிறைவேறச் செய்வதே முதன்மையானது. எல்லாம் முடிந்த பிறகு வேண்டுமானால், யார் யாருக்கு என்னென்ன உள்நோக்கம் எனப் பொறுமையாக ஆராய்ந்து கொள்ளலாம். பிரச்சினை பற்றியெரியும்பொழுது அதைச் செய்வது போராட்டத்தைத் திசை திருப்புவதன்றி வேறெந்த நன்மைக்கும் உதவாது ஐயா!

      எல்லாவற்றுக்கும் மேலாக, கொரிதா விளையாட்டு, போராடுபவர்களின் பின்புலம், அதை ஆதரிப்பவர்களின் உள்நோக்கம் பற்றியெல்லாம் எழுதிய நீங்கள் இந்த முழுப் பிரச்சினைக்கும் பின்புலமாக இருந்த பால் அரசியல் பற்றி ஒன்றுமே எழுதாததுதான் என் சீற்றத்துக்கு முதன்மையான காரணம். "அவர்கள் வணிகர்கள்; அப்படித்தான் இருப்பார்கள். அவர்களை உள்ளே விட்டது நம் ஆட்சியாளர்கள் தவறு" எனறு எனக்கு மறுமொழியளிக்க நீங்கள் குறிப்பிட்டவற்றைக் கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தால் அப்படி ஒரு கருத்துரையை நான் கண்டிப்பாக அளித்திருக்கவே மாட்டேன்.

      Delete
    14. இடையில், தமிழர்களின் உணர்ச்சி அரசியலுக்கு எடுத்துக்காட்டாகத் தமிழ்நாடு வாழ் இலங்கை ஏதிலியர்கள் நிலை பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இது தொடர்பாக நீங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களை எப்படிக் குற்றம்சாட்டுகிறீர்கள் என்பது எனக்குச் சிறிதளவும் புரியவில்லை. இந்திய நடுவண் அரசு தன் இறையாண்மை, பாதுகாப்பு போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி அவர்களை அப்படி ஓர் நிலையில் வைத்திருக்கிறது. இது முழுக்க முழுக்க நடுவண் - மாநில அரசுகள் தொடர்பானது. இரண்டு அரசுகளுமே தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் கையிலேயே இருக்கும் நிலையில் தனிமனிதர்களான ஈழ ஆதரவுத் தலைவர்கள் என்ன செய்ய முடியும் என எனக்குத் தெரியவில்லை. இம்முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு என்ன பாதிப்பு வந்தாலும் அவர்களுக்காக ஈழ ஆதரவுத் தலைவர்கள் முன்நிற்கிறார்கள்; போராடுகிறார்கள்; அரசுடன் பேச்சு நடத்துகிறார்கள்; அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைத் தங்கள் சொந்தச் செலவில் செய்கிறார்கள். அண்மையில், முகாமில் வாழ்ந்து வந்த இணையர்கள் இருவரையும் அவர்தம் குழந்தைகளையும் எந்தக் காரணமும் இன்றிக் கொட்டிலில் மாடுகளைப் பிரிப்பது போல் வெவ்வேறு ஊர்களில் உள்ள முகாம்களில் வாழுமாறு இந்நாட்டு நீதி அமைப்பு ஆணையிட்டது. அதற்கு எதிராக அந்தப் பெண்மணி போராடியபொழுது அவர் சார்பில் அரசுடன் பேச்சு நடத்த வழக்குரைஞரை உடனே அனுப்பி உதவியது ம.தி.மு.க-தான். இது நீங்கள் கேட்ட கேள்விக்கான ஒரு சிறு விடை. இதுபோல் நிகழ்வுகள் ஏராளம் உண்டு. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டால்தான் இங்கு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதால் ஆண்டுதோறும் அதற்காகச் சட்ட நடவடிக்கை எடுத்து வைகோ மூக்குடைபடுவதைச் செய்தித்தாள்களில் நீங்களும் பார்த்துக் கொண்டுதான் இருப்பீர்கள் என நம்புகிறேன். இவற்றுக்கெல்லாம் மேலாக இன்னும் இந்தியப் பேரரசை எதிர்த்து வேறென்ன செய்து விட முடியும் என எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை உங்களுக்குத் தெரிந்தால் அருள் கூர்ந்து தெரிவியுங்கள்! உரியவர்களிடம் கூறி நடவடிக்கை எடுக்க முயல்கிறேன்.

      தற்பொழுது சல்லிக்கட்டு நடத்தப்படும் விதத்தைப் பற்றி எழுதியிருந்தீர்கள். ஒன்றுக்கு மேற்பட்டோர் பாய்ந்து பிடித்ததைப் பார்த்ததாகக் கூறினீர்கள். அப்படிச் செய்ய முயன்றபொழுது ஒவ்வொரு முறையும் கடுமையாகக் கண்டித்து ஆட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையும் நான் பார்த்தேன். கான்சாபுரம் காவலர் உயிரிழப்பு கண்டிப்பாக வருத்தத்துக்குரியதுதான். ஆனால், ஒரு விளையாட்டைத் தொடர வேண்டுமா வேண்டாவா என்பதை அந்தந்த மக்கள்தாம் முடிவு செய்ய வேண்டும் என்ற உங்கள் கருத்தின் அடிப்படையிலேயே பார்த்தாலும், இந்த விளையாட்டைத் தொடர வேண்டும் என்று நம் மக்கள் விரும்பும் நிலையில், இவ்வளவு மக்கள் கூடும் ஒரு நிகழ்ச்சிக்குக் காவல்துறைப் பாதுகாப்பு என்பது தேவைதானே? எனில், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்படிப்பட்ட நேர்ச்சிகள் (விபத்துகள்) தவிர்க்க முடியாததுதானே? அதற்கென்ன செய்யலாம்? இந்த விளையாட்டை நிறுத்தி விட்டால் காவல்துறையினர், இதில் விளையாடுபவர்கள் எனப் பலரின் உயிரைக் காப்பாற்றலாம். ஆனால், தரமுள்ள நாட்டு மாட்டுப் பாலும், நாட்டு மாட்டு இனமும் ஒரேயடியாக அழிந்தே போகும். அதனால் ஏற்படும் பல நோய்களும் உயிரிழப்புகளும் இன்ன பிற பாதிப்புகளும் இதை விடக் கொடுமையாக இருக்குமே, அதற்கென்ன செய்யலாம்? இதற்கான விடையை நான் சொன்னால் என்னை இரக்கமற்றவன் என நினைப்பீர்கள். எனவே, இது குறித்த முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன் ஐயா!

      தற்பொழுதைய சல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்கும்பொழுது "நீங்கள் குறிப்பிட்ட பலவும் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டன" என்ற என் வரிகள் உங்கள் நினைவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். நான் கேள்விப்பட்டதைச் சொன்னேன். நீங்கள் அளித்த பரிந்துரைகளில் "பார்வையாளர்களுக்கும் மைதானத்துக்கும் இடையே பாதுகாப்பு அரண், வாடிவாசலின் அமைப்பு, விளையாட்டில் பங்குபெறும் எருதுகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை" என இந்த மூன்றும் ஏற்கெனவே தமிழ்நாட்டுச் சட்டப்படி உண்டு. அதுவும் மாவட்ட அரசுக் கண்காணிப்புப் போன்ற கடுமையான மேற்பார்வைகளும் உண்டு. எந்த சல்லிக்கட்டுப் பேரவைகளுக்கு இதற்கெனப் போராடும் உரிமை உண்டு என்று நீங்கள் கூறியிருந்தீர்களோ அவர்களின் தலைவர் (கார்த்திகேயன் சிவசேனாதிபதி அவர்கள்) வெளிப்படையாக, முன்னணித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியதுதான் அது. எல்லா இடங்களிலும் நெறிமுறைகளை மீறுவதற்கனவே சிலர் இருப்பார்கள். அவர்களை வைத்து மொத்த அமைப்பும் தவறு என்றோ, எந்த நெறிமுறைகளும் இல்லாமல் இந்தப் போட்டிகள் நடப்பதாகவோ நாம் கூற முடியுமா?

      Delete
    15. மற்றபடி, தொடக்கத்தில் உங்களைப் போல் நானும் "ஒருபுறம் உழவர்கள் தொடர்ந்து கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்து கொண்டு மடியும் நிலையில், ஒரு விளையாட்டுக்காக இவ்வளவு பெரிய போராட்டம் தேவையா?" என்றுதான் கருத்திட்டுக் கொண்டிருந்தேன். என்னை டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்களுக்கு என்னுடைய இந்தப் பதிவுகள் தெரியும். ஆனால், சல்லிக்கட்டுப் போராட்டமும் உழவர் பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்கானதுதானே என்று எனக்குத் தோன்றிய நொடியில் நான் மாறி விட்டேன்.

      "என் கருத்தை ஆதரிக்க எனக்கிருக்கும் அதே உரிமை அக்கருத்தை எதிர்ப்பவனுக்கும் உண்டு" என்கிற விக்டர் ஹியூகோவின் வரியை நான் படிக்காதிருக்கலாம். ஆனால், "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும மணம் உண்டு" என்கிற அண்ணாவின் பொன்மொழியை அறிந்தே வளர்ந்திருக்கிறேன். நீங்கள் எதிர்ப்புத் தெரிவியுங்கள்! சல்லிக்கட்டு குறித்து மட்டுமில்லை நான் சரி என நம்பும் எது பற்றி வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் எதிர்க் கருத்தைத் தாராளமாகத் தெரிவியுங்கள்! ஆனால், அதற்குண்டான காரணம் சரியாக இருக்க வேண்டும் இல்லையா? அப்படி இல்லாவிட்டால் அது குறித்து என் கண்டனத்தைப் பதிவு செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது இல்லையா?

      சல்லிக்கட்டைப் பொறுத்த வரை உங்களைப் போலத்தான் நானும். முழுக்க முழுக்கச் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் நான். நான் மட்டுமில்லை எங்கள் தலைமுறையே அப்படித்தான். எனவே, சல்லிக்கட்டுக்கும் எனக்கும் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. எல்லாம் ஊடக வழி அறிவுதான்.

      இறுதியாக, மக்கள் போராட்டம் என்பது குறிஞ்சி மலர். அது பூக்கும்பொழுதே பறித்துச் சூடிக் கொள்வோம். பின்னணி, உள்நோக்கம் போன்றவையெல்லாம் அப்புறம் பார்க்கலாம். என்னையும் மதித்து இவ்வளவு நீண்ட விளக்கம் அளித்ததற்கு நன்றி! உங்கள் மனம் புண்படும்படி அந்தக் கருத்தோ இந்த மறுமொழியோ அமைந்திருந்தால் அதற்காகப் பொறுத்தருளுங்கள்!

      வணக்கம்!

      Delete
    16. அய்யா,

      முதலில் ஒன்று... எனது பதிலில் தனிப்பட்ட தாக்குதலாக நான் கருதி எழுதியது போன்ற ஒரு தொனி இருக்குமானால் நீங்களும் பொறுத்தருளுங்கள்.அது என் இயல்பும் கிடையாது என்பதுடன் இதற்கு முந்தைய என் பதிவுகள் பலவற்றை நீங்கள் போற்றி பின்னூட்டமிட்டதை நான் மறந்தவனும் அல்ல !

      என் பதிவின் நோக்கம் எந்த உள்நோக்கமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் சில அரசியல்வாதிகளும் நடிகர்களும் கடைசி நேரத்தில் கலந்து, பெயரை தட்டி பறிக்கிறார்களே என்பதுதான்...

      " மக்கள் போராட்டம் என்பது குறிஞ்சி மலர். அது பூக்கும்பொழுதே பறித்துச் சூடிக் கொள்வோம். பின்னணி, உள்நோக்கம் போன்றவையெல்லாம் அப்புறம் பார்க்கலாம். "

      மிகவும் சத்தியமான வார்த்தைகள் அய்யா.

      ஈழப்போராட்டத்தை பற்றி நேரம் அமையுமாயின் விரிவாக பேசுவோம் அய்யா.

      மற்றபடி என் வலைப்பக்கத்திலும் சரி, மற்றவர்களுக்கு நான் அளிக்கும் பின்னூட்டங்களிலும் சரி, உங்களிடமிருந்தெல்லாம் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் என அடிக்கடி குறிப்பிடுவேன்... அது தன்னடக்கமோ, அவையடக்கமோ கிடையாது ! உண்மையும் அதுதான் !

      நட்புடன் தொடருவோம் அய்யா







      Delete
    17. மிக்க மகிழ்ச்சி ஐயா!

      ஆனால் அதே நேரம், வயதிலும் பட்டறிவிலும் படிப்பு, தகுதி என எல்லாவற்றிலும் என்னை விடப் பெரியவரான தாங்கள் என்னிடம் ‘பொறுத்தருளுங்கள்’ எனவெல்லாம் சொல்லக்கூடாது ஐயா! மேற்படி சல்லிக்கட்டுப் பதிவுக்கான என் கருத்துரை மிகவும் சிறியது. அதற்கு நீங்கள் அவ்வளவு விரிவாகவும் அத்தனை ஆழமாகவும் பல்வேறு உலகியல் காரணங்களைச் சுட்டியும் விளக்கம் அளித்திருந்ததும் அதில் இருந்த பல தன்னிலை விளக்கங்களும் கண்டு ஒருவேளை நான் உங்களைக் காயப்படுத்தி விட்டேனோ என்று எண்ணினேன். அதனால்தான் நான் பொறுத்தருளும்படி கேட்டேன். அதற்காக நீங்களும் அப்படிச் சொல்ல வேண்டும் எனத் தேவை இல்லை ஐயா! நீங்கள் பெரியவர்! என்றும் என் மதிப்புக்குரியவர்!

      மிக்க நன்றி! வணக்கம்!

      Delete
  15. இ.பு.ஞானப்பிரகாசன்!

    ஜல்லிக்கட்டுனு வரும்போது கலாச்சாரம் கலாச்சாரம்னு அடிச்சுக்கிறீங்க, சாதீய அடையாளங்கள்தான் நம் கலாச்சரத்தின் முக்கிய அங்கம். நீ இந்த சாதி, உனக்குனு ஒரு தகுதி இருக்கு, உன் பொண்ணுங்க எல்லாம் மேலாடை போட்டுக் கொள்ள தகுதியற்றவர்கள், நீ கோயிலுக்குள் போக தகுதியற்றவன், நீ படிக்கத் தகுதியற்றவன்னு என்பவை எல்லாமே தமிழர்களின் கலாச்சாரம்தான்.

    தமிழன்ன் தமிழன் என்று சொல்வதே சுத்தமான ஏமாத்து. முதலியார், பிள்ளைவால், சானான், பாறையர், பள்ளர், வன்னியர், மறவர், கள்ளர் என்பவைகள்தான் உண்மையான தமிழர் அடையாளங்கள்.

    பெண்ணடிமைத்தனத்தை போற்றுவது.. பெண் குழந்தை பெற தகுதியற்றவாள் என்றால், ஆண் இரண்டாம் மணம் செய்யலாம். அவள் தங்கையை மணக்கலாம் என்பதெல்லாம் தமிழர் கலாச்சாரம்தான் . விதவை,, மழடி என்கிற முத்திரைகள் குத்தப்பட்டு பெண்ணடிமைத்தனத்தை போற்றியதும் "தமிழர்கள்'தான். அதையெல்லாம் காத்தே ஆகணும், ஏன் அகற்றணும்னு நீங்க ஏன் போராடுவதில்லை? ஏன் ஜல்லிக்கட்டு மாட்டும்தான் தமிழர் அடையாளம், அதை காத்தே ஆகனும்னு நிக்கிறீங்க?? எனக்கு உண்மையிலேயே புரியலை. விளக்க முடியுமா உங்க தமீழர் கலாச்சார காப்பு பற்றி??

    ReplyDelete
    Replies
    1. தமிழர் பண்பாடு என்றால் என்னவென்றே தெரியாத அல்லது தெரிந்தே தமிழர் பண்பாட்டை வேண்டுமென்றே இழித்துரைக்கிற மிகக் கீழ்த்தரமான மனப்பான்மை இது!

      சாதிதான் தமிழர் பண்பாடு என்று உங்களுக்கு எவன் சொன்னது? இராபர்ட்டு கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ படித்திருக்கிறீர்களா? அதில் அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார், சாதி என்பது தமிழர்களிடம் பிற்காலத்தில் வந்து ஒட்டிக் கொண்டதுதானே தவிர அவர்களின் சொந்தப் பண்பு இல்லை என்று. அதே மாதிரிதான் பெண்ணடிமைத்தனமும். சங்க காலப் பெண்பால் புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? தொண்ணூற்று ஆறு! பெண்ணடிமைத்தனம் கொண்ட சமூகத்தில் புலவர்கள் மட்டுமே இத்தனை பேர் இருக்க முடியுமா? ஆக, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி உரிமை இருந்திருக்கிறது என்பதுதான் வரலாற்று நூல்கள் காட்டும் உண்மை.

      இரண்டாம் திருமணத்தைப் பொறுத்த வரை, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்கள் வாழ்க்கைத் துணையைப் பிடிக்காவிட்டால் அவரை விட்டுவிட்டு இன்னொரு திருமணம் புரிந்து கொள்ளும் முறை தமிழர்களிடையே இருந்திருக்கிறது என்று நான் சொல்லவில்லை, பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் கி.ரா ஆனந்த விகடனில் வெளிவந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். தான் சிறு வயதாக இருந்தபொழுதே கூடப் பெண்கள் - ஆண்கள் இருவருமே தங்கள் வாழ்க்கைத்துணை பிடிக்காவிட்டால் அவரை விட்டுவிட்டு இன்னொரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்ததைப் பார்த்திருப்பதாகவும், அந்தளவுக்குப் பாலின சுதந்திரம் கொண்டிருந்த இந்த சமூகம் இன்று பல பாலியல் சிக்கல்களில் உழல்கிறதே என்றும், இத்தகைய உண்மைகளை எடுத்துரைக்கும் வகையில் தான் ஒரு நூல் எழுத இருப்பதாகவும் அந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

      கணவனை இழந்து விட்டால் ஒரு பெண் மங்கலத்தன்மை இழந்து விடுவதாக இன்று கருதப்படும் வழக்கம் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இல்லை என்று தமிழ் ஆய்வாளர் இராம.கி தன் ‘வளவு’ தளத்தில், தாலி பற்றிய ஆராய்ச்சித் தொடரில் கூறியுள்ளார்.

      ஆக, பெண்ணடிமைத்தனமோ, சாதியமோ அல்லது நீங்கள் கூறும் இன்ன பிற இழிவான அடையாளங்களோ தமிழர் பண்பாடு இல்லை. பார்ப்பனர்களின் வரவுக்குப் பின், எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களையே பார்த்துப் பின்பற்றும் முறை தமிழர்களிடையே தோன்றியதால் ஏற்பட்ட பிற்கால விளைவுகளே இவை. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், மூதறிஞர் வ.சு.மாணிக்கம் அவர்கள் எழுதிய தமிழ்க் காதல், அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை, பரிதிமால் கலைஞர் அவர்கள் எழுதிய கட்டுரைகள் என ஏராளமான நூல்கள் என் கருத்துக்களுக்கான அசைக்க முடியாச் சான்றுகளாக இன்றும் திகழ்கின்றன. சமூகத்தில் இருக்கும் சாக்கடைத்தனமான அடையாளங்களையெல்லாம் ஒவ்வொன்றாகத் தேடிக் கண்டெடுத்து அவையெல்லாம்தாம் தமிழர் அடையாளங்கள் என நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் எழுதியிருக்கும் முறையைப் பார்த்தால் உண்மையாகவே புரியாமல் கேட்பது போலெல்லாம் இல்லை. தமிழர்களையோ தமிழ்ப் பண்பாட்டையோ வேண்டுமென்றே இழித்துரைப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுமாறு எச்சரிக்கிறேன்!

      Delete
    2. இ.பு.ஞானப்பிரகாசன்January 18, 2017 at 8:30 AM

      ***தமிழர் பண்பாடு என்றால் என்னவென்றே தெரியாத அல்லது தெரிந்தே தமிழர் பண்பாட்டை வேண்டுமென்றே இழித்துரைக்கிற மிகக் கீழ்த்தரமான மனப்பான்மை இது!

      சாதிதான் தமிழர் பண்பாடு என்று உங்களுக்கு எவன் சொன்னது? ***

      நாந்தான்சொல்றேன். நீர் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால், அது யார் தப்பு? சும்மா தமிழர் பணபாடு மண்ணாங்கட்டினு ஏமாத்திக்கொண்டு திரிகிறீர்.

      Delete
    3. *** தமிழர்களையோ தமிழ்ப் பண்பாட்டையோ வேண்டுமென்றே இழித்துரைப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுமாறு எச்சரிக்கிறேன்!***

      என்ன மிரட்ட்டுக்கிறீராக்கும்? நீர் என்ன நான் என்ன பேசணும்னு எச்சரிக்கிறது? இதுபோல் எச்சரிக்கிறேன்னு மிரட்டுவதை நிறுத்தும்!

      Delete
  16. ***ஆக, பெண்ணடிமைத்தனமோ, சாதியமோ அல்லது நீங்கள் கூறும் இன்ன பிற இழிவான அடையாளங்களோ தமிழர் பண்பாடு இல்லை. பார்ப்பனர்களின் வரவுக்குப் பின், எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களையே பார்த்துப் பின்பற்றும் முறை தமிழர்களிடையே தோன்றியதால் ஏற்பட்ட பிற்கால விளைவுகளே***

    அடேங்கப்பா! இவனுகளுக்கு மூளையே இல்லை. பார்ப்பான் ஆடுனா ஆடுவானுக வெட்டு வெட்டுவானுக? மண்டையில் என்ன இருக்கு, உங்க தமிழினத்துக்கு? சுயபுத்தி கிடையாதா என்ன? ஆறாவது அறிவு உங்க திர்ராவிட இனத்துக்கு கெடையாதா?

    எதுக்கெடுத்தாலும் பார்ப்பான் சொன்னான் நாங்க லகேட்டொம்னு ஒரு கூட்டம்.

    வெள்ளைக்காரன்ந்தான் ஜாதி உருவாக்கி எங்களை ஏமாத்திட்டான்னு இன்னொரு கூட்டம்.

    இதே வேலைக்கழுதையா போச்சு. அவன் பண்ணினான் இவன் பண்ணினான். நாங்க எல்லோருமே யோக்கியர்கள்னு!!

    ReplyDelete
  17. நான் எப்படி பேசணும், எதைப் பேசணும்னு எச்சரிக்கைவிடும் தமிழினப் போராளிகள் கவனிக்கவும்.

    தமிழ் கலாச்சாரம் பற்றி எந்தக் கொம்பனும் எனக்கு சொல்லித் தரவேண்டிய அவசியம் இல்லை. ஏட்டுச் சுரைக்காய் எனக்குத் தேவையற்றது. அது ஒரு ஃபிக்ஷன் அவ்வளவுதான்.

    நடைமுறையில் தமிழன் என்கிற தனி அடையாளம் எல்லாம் நான் வளர்ந்த சூழலில் கிடையாது. சாதி என்கிற அடிப்படைதான் நான் வளர்ந்த தமிழ் சமூகம் இருந்தது இருக்கிறது என்பதை நான் சத்தமாகச் சொல்லுவேன். ஏனென்றால் அதுதான் உண்மை!

    நான் சொல்லும் உண்மை உனக்கு கசக்குதா பொத்திக்கொண்டு இரும். என்னிடம் வந்து நீ உண்மையைச் சொல்வது தப்பு, உன்னை நான் எச்சரிக்கிறேன்னு சண்டியர்த்தனம் செய்வதற்கெல்லாம் வேற ஆளைப் போயிப் பாரும்.

    உம்மைவிட நான் பலமடங்கு தமிழன். அதற்காக தமிழ் சமூகம் செய்த அயோகியத்தனங்களுக்கு எல்லாமே காரணம் பார்ப்பனர்கள் அல்லது வெள்ளையர்கள்தான் காரணம்ம் என்று அவர்களை கை காட்டிவிட்டு என் சமூகம் என்பதால், தமிழ் சமூகம் மாசற்றது என்று உம்மைப்போல் ஜோடிச்சுப் பொய் சொல்லிக்கொண்டு அலைய வேண்டிய அவசியமோ அல்லது தேவையோ எனக்கு இல்லை.

    நான் கண்கூடாகப் பார்த்த சாதி ஆட்கொள்ளும் தமிழ் சமுதாயம்தான் நடப்பில் உள்ளது. இதை என் சுற்றத்தார், நண்பர்கள் மூலம் நானே பார்த்து இருக்கிறேன். அப்படி இருக்கும்போது எவனோ ஒரு ஞானப்பிரகாசன் வந்து எனக்குத் தமிழ்க் கலாச்சாரம் பற்றி நடைமுறையில் இல்லாத பொய்க் கதைளைச் சொல்லி அதை நான் ஏற்றுக்கொள்ளணும்னு என்னை எச்சரிப்பதெல்லாம் மடமையின் உச்சம். அதுக்கு வேற யாராவது இருப்பான், அவனிடம் போய் நீர்,, உன் பொயுரையை வைத்துக்கொள். உம்மைவிட நான் பொய் சொல்லாதாத சுத்தத் தமிழன். ஏனென்றால் என்ன்னைப்பொருத்தவரையில் என் சமூகம் என்பதால் அவர்கள் செய்த எல்லா அயோக்கியத்தனத்தைய்யும் மறைத்து, பார்ப்பனர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் எல்லா கெட்ட பெயர்களையும் கொடுத்துவிட்டு என் சமூகம் யோக்கியாமானதென்று பேசுவது ஒரு பொய்யனின் குரல்.

    சாதீய சூழல், பெண்ணடிமைத்தனத்தை போற்றுதல் எல்லாமே என் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நானே என் கண்கூடாக்கப் பார்த்தது, பார்ப்பது. என் சொந்த பந்தங்களிலேயே, அக்கா குழந்தை பெறாததால் தங்கையை மணம் முடித்துக் கொடுத்த நிகழ்வு உள்ளது. இளம் விதவைகள் உண்டு. இதுவரை வேறு சாதியில் தீருமணம் செய்தவர்வர்கள் ஒருவர்கூட கிடையாது, அப்படியே ஒரு பெண்னோ ஆணோ இன்னொரு சாதியைச் சேர்ந்தவரை காதலித்து இருந்தாலும், அக்காதல் தோல்வியில்தான் முடியும். ஆக தமிழ்ன் என்கிற பேச்சு ஏட்டுச் சுரைக்காய். உண்மையான நடப்பல்ல! சாதியச் சூழல் பற்றி கதை கதையாக என்னால் சொல்ல முடியும். நான் நடக்கும் உண்மையை சொல்லிக்கொண்டு இருக்கும்போது நீர் எச்சரிக்கிறேன்னு சண்டியர்த்தனம் பண்ணுவது படு கீழ்த்தரமான செயல். உம் ஏட்டுச் சுரைக்காயை கொண்டுபோய் குப்பையில் போடும். கண்ணை விழித்து உன்னைச் சுற்றி என்ன நடக்கிறாதென்று பாரும்.

    "உனக்கு எவன் சொன்னது?"

    என்கிற கேள்விக்கு நானே என் அனுபவத்தை சோல்லும்போது. எந்த கொம்பனும் என்னைக் கேட்க தகுதியற்றவன் என்பது புரிந்ந்து கொள்வது நலம்.

    ReplyDelete
    Replies
    1. வருண் அவர்களே! உங்கள் பதிலுரைகளை எல்லாம் பார்த்தேன்.

      சண்டியர்த்தனம் செய்வது, பொய் சொல்லித் திரிவது போன்றவை என் வேலைகள் அல்ல. மேலும், என்னிடம் கேள்வி கேட்டு, "பதில் சொல்லு, பதில் சொல்லு" என்று அலறியது நீங்கள்தாம். அதனால்தான் நான் மேற்படி எல்லாவற்றையும் எழுதினேனே அன்றி நானாக உங்களுக்கு அறிவுரை கூற வரவில்லை. கேள்வி எழுப்பிவிட்டு, பதில் தனக்கு சாதகமாக இல்லை என்றவுடன் "பொத்திக் கொண்டு இரு" என்கிறீர்கள். நல்ல நாகரிகம்!

      மற்றபடி தமிழினத்தின் சாதிய முகம் எவ்வளவு கொடூரமானது, எந்தளவுக்கு சாதியச் சாக்கடை இந்த இனத்தில் ஊறிப் போய் உள்ளது என்பவையெல்லாம் உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் எனக்கும் ஓரளவு தெரியும். அதனால்தான் சாதியை எதிர்த்துத் தொடர்ந்து எழுதி வருகிறேன். என் வலைப்பூவிலும் ஆணவக் கொலைகள், கோயில் நுழைவு, இட ஒதுக்கீடு, தாலி எதிர்ப்பு பற்றியெல்லாம் காத்திரமான பதிவுகளை எழுதியிருக்கிறேன். அவற்றுக்காக நிறைய எதிர்ப்புகளையும் ஈட்டியிருக்கிறேன்; பெரியவர்களிடமிருந்து நல்ல பெயரையும் பெற்றிருக்கிறேன். சாதியே தமிழ்நாட்டில் இல்லை; தமிழ் இனத்தில் அப்பழுக்கே இல்லை என்பது இல்லை நான் சொல்ல வந்தது; சாதியும் நீங்கள் குறிப்பிட்ட இன்ன பிறவும் தமிழரின் அடையாளங்கள் இல்லை என்பதை மட்டுமே நான் சொன்னேன். காரணம், நீங்கள் கேட்ட கேள்வி அதுதான். "ஜல்லிக்கட்டு தமிழர் அடையாளம் எனப் போராடுகிறீர்களே! சாதிய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனம் போன்றவையும் தமிழர் அடையாளங்கள்தாம். அவற்றையும் காக்க வேண்டிப் போராடுவதுதானே" என்று மிக அருவெறுப்பான ஒரு கேள்வியை நீங்கள் எழுப்பியிருந்தீர்கள். அதனால்தான் அவை தமிழர் அடையாளங்கள் இல்லை என நான் சில சான்றுகளைக் காட்டினேன். அவற்றை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். ஆனால், உங்கள் கேள்விக்கான பதில்தான் அது என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! ஒருவரிடம் கேள்வி எழுப்பினால் அவர் தனக்குத் தோன்றுகிற, தான் உண்மை என நம்புகிற பதிலைத்தான் சொல்ல முடியும். "அது எப்படி நீ அந்தப் பதிலைச் சொல்வாய்" என்று கேட்டால் அப்படிக் கேட்பதுதான் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல மடமையின் உச்சம்.

      தமிழர் அடையாளங்கள் எவை எனக் கேள்வி எழுப்பினால் அது பற்றி அறிஞர்களும் ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் என்ன சொல்லியிருக்கிறார்களோ அவற்றைத்தான் எடுத்துக் காட்ட முடியும். மற்றபடி, சமூக நடப்பு என்பது ஒவ்வொரு காலத்திலும் வேறுபடும். ஒரு தலைமுறைக்கு முன்பு இதே தமிழ் சமூகத்தில் குறிப்பிட்ட வயதுக்குப் பின் பெண்களைப் பள்ளிக்குக் கூட அனுப்பத் தயங்கினார்கள். கடந்த தலைமுறையில் கல்லூரிக்கும் வேலைக்கும் அனுப்பும் அளவுக்கு முன்னேற்றம் வந்தது. இன்று படிப்பதற்கே வெளியூர், வெளிநாடு எனத் துணிந்து அனுப்புகிறார்கள். ஆக, மக்கள் வாழ்க்கை என்பது ஒவ்வொரு காலத்திலும் மாறுபடும். அந்தந்தக் காலத்தில் அவரவர் பார்ப்பதும், அனுபவப்படுவதும்தாம் அந்த இனத்தின், சமூகத்தின் அடையாளம் என்று ஆளாளுக்குச் சொல்லித் திரியத் தொடங்கினால் அந்த சமூகத்துக்கு என ஒரு நிலையான அடையாளமாக எதுவும் இருக்காது. எனவேதான், வரலாற்றின் தொடக்கத்தில் எந்த நிலை இருந்ததோ அதையே அந்த இனத்தின், சமூகத்தின் அடையாளமாக நிறுவுகிறார்கள்.

      இது உங்களுக்குப் பிடிக்காவிட்டால் இந்த இனத்தின் அடையாளம் என நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதையே நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடலாம். யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால், அதையே பொது இடத்தில் சொன்னால், வெறும் நாட்டு நடப்பைக் காரணம் காட்டி இதுதான் தமிழ் இனத்தின் அடையாளம், பண்பாடு எனக் கண்ட குப்பைகளையெல்லாம் எடுத்து வந்து நீங்கள் ஒட்ட வைக்க முயன்றால், நான் அதைப் பார்க்க நேர்ந்தால் கண்டிக்கத்தான் செய்வேன். அதையே நீங்கள் மிரட்டல் என எடுத்துக் கொண்டு மிரண்டு போனால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

      மற்றபடி, நான் பெரிய பொய்யன், ஜோடித்துப் பொய் கூறித் திரிபவன் என்றெல்லாம் ஏதேதோ சொல்லியிருந்தீர்கள். அதற்கு நான் பதிலளிப்பதை விட, சான்றுகளோடு பேசும் நான் சொல்வது உண்மையா அல்லது வெறும் நாட்டு நடப்பையும் சொந்த அனுபவத்தையும் மட்டுமே வைத்துக் கொண்டு பேசும் நீங்கள் சொல்வது உண்மையா என்பதை இதைப் படிப்பவர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்!

      Delete
    2. வருண், நாம் ஓரு ஒருவரின் முகம் மற்றொருவர் அறியாதவர்கள்.ஒருவரின் படிப்பு, சமூக நிலை மற்றவருக்கு தெரியாது. பதிவுகளின் மூலம் மட்டுமே அறிமுகம் கொண்டவர்கள்.வெளிப்படும் விதம் வேறாக இருந்தாலும் உங்கள் இருவரிடமுமே சமூகத்தின் சீரழிந்த பகுதிகளை பற்றிய ஆதங்கமும் கோபமும் மேலோங்கியிருக்கிறது... என் பதிவு குறித்த ஞானபிரகாசன் அவர்களின் சாடல் ஒரு ஆரோக்யமான கருத்து மோதலுக்கான ஆரம்பம். உங்களின் பதில் பின்னூட்டமும் அதே புள்ளியில் தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் இறங்கி அடித்துவிட்டீர்களே வருண் ?... ஆரோக்யமான விவாதமாய் அமையும் பின்னூட்டங்களுக்கு என் வலைப்பூ காத்திருக்கும்... ஆனால் தனிமனித தூற்றல்களுக்கு இங்கு இடம் கிடையாது ! அப்படியாக அமைந்த பின்னூட்டங்களை நீக்குவதுடன், உயிருடன் தான் இருக்குறீர்களா என நீங்கள் ஞானபிரகாசனிடம் கேட்டதற்கு இந்த வலைப்பூவின் நிர்வாகி என்ற முறையில் அவரிடம் மன்னிப்பு கோரும் அதே வேலையில், அனானிமஸின் அதே கேள்விக்காக உங்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். ஆரோக்யமாய் தொடருவோம்...

      Delete
    3. ஐயா! அந்தாளின் தவறுக்காக நீங்கள் சிறியவனான என்னிடம் மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டா! அதற்கு மாறாக, நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். அவர் எழுதிய எதையும் நீக்க வேண்டா! அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பதிவுலகம் காலகாலத்துக்கும் நினைவு கூரும் வகையில் அவர் எழுதிய அத்தனையும் அப்படியே இருக்க விடுங்கள்! அதுதான் இப்படிப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை!

      "ஆரோக்யமான விவாதமாய் அமையும் பின்னூட்டங்களுக்கு என் வலைப்பூ காத்திருக்கும்... ஆனால் தனிமனித தூற்றல்களுக்கு இங்கு இடம் கிடையாது !" என்ற உங்கள் வரிகளுக்காக நன்றி!

      Delete
  18. வணக்கம் சாம்! தாமதமான வருகைக்கு மன்னிக்க. கொரிதா என்ற எருது விளையாட்டு பற்றியறிந்து கொண்டேன். சாதி, மதம் கடந்து இந்த ஜல்லிக்கட்டு, அனைவரையும் ஒன்று சேர்த்திருப்பது வரவேற்கக் கூடியதே. இளைஞர்கள் இந்த அளவுக்கு வீதியில் இறங்கிப் போராடுவதும் வரலாறு காணாத ஒன்று. நன்றி சாம்!

    ReplyDelete
  19. மஞ்சு விரட்டிய போதும், இதுபோன்ற கருத்துக்கள் களம் கண்டதாக தெரியவில்லை
    நற்றமிழ் நண்பர்களே!
    உற்றதை உரைத்து உயர்வடைவோம் உயர்த் தமிழால் நன்றி

    ReplyDelete


  20. ***
    Two die after being hit by bulls in Pudukottai, on first day of legal jallikattu

    In a situation that is fast turning into a nightmare for the Tamil Nadu government, two people lost their lives in a jallikattu event at Pudukottai district in Tamil Nadu.

    The event was inaugurated by Health minister Vijay Bhaskar. The District collector, School Education minister Mafoi Pandiarajan and other government officials were also present in the village, according to a government press release on the event.

    Pudukottai district collector Ganesh confirmed to TNM that two people had lost their lives in the jallikattu organized by the government.

    According to local reporters, Mohan (32) was one of the organisers and he was severely injured after a bull charged at him.

    Raja (35) a participant also died after sustaining severe injuries.

    The two were taken to a government hospital, according to the police. The hurriedly organised jallikattu at Rapoosal village of Pudukottai did not abide by most safety regulations, according to reports.

    According to sources, more than 80 people were injured, and these included spectators.

    Visuals that were beamed on many TV channels showed many men inside the arena as the bulls were left loose. More than 150 bulls took part in the event***

    Are you guys happy now??

    உங்க தமிழர் எழுச்சி ரெண்டு பேரை புதைகுழிக்கு அனுப்பியிருக்கு! பெரிய சாதனைதான்!

    எங்கே அந்த கமலஹாசன்??

    ரெண்டு பேர் பலியானதுக்கும் அந்தாளும்தான் பொறுப்பு!!


    ReplyDelete
  21. சாம் பொறி பறக்குது இங்கே பின்னூட்டத்தில் ...
    நிறையப் பேசாலாம் இதுகுறித்து

    தொடருங்கள் சாம்

    ReplyDelete
  22. ***ஆனால் தனிமனித தூற்றல்களுக்கு இங்கு இடம் கிடையாது !***

    அடேங்கப்பா!!! :)))

    ReplyDelete