வாழ்க்கையின் சில சமயங்களில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் " கைப்புள்ள " கேரக்டர்களை சந்திக்கவும், அவர்களுடன் பழகவும் நேரிடும் ! வாய்ச்சவடாலும், குடித்துவிட்டு சலம்புவதுமாக சமூக வரைமுறைகளை இவர்கள் அசால்ட்டாக மீறினாலும் இந்த கைப்புள்ளைகளின் பேரில் நமக்கு கரிசணமே மிஞ்சும் ! காரணம் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் கள்ளங்கபடமற்ற மனசு ! எப்படி உதார்விட்டு திரிந்தாலும், எவ்வளவு அவமானப்பட்டாலும் நட்புக்கு ஒரு உதவியென்றால் இவர்கள்தான் முதலில் நிற்பார்கள்.
முபாரக்கும் அப்படிப்பட்டவன் தான் !
விடலைப் பருவத்தில் நாங்களெல்லாம் தெருவோரமாய் நின்று பயபார்வையுடன் சைட் அடிப்பதை மட்டுமே கெட்டபழக்கமாக (!) கொண்ட சுமார் கெட்டவர்கள் என்றால் எங்களைவிட இரண்டு வயது மூத்தவனான முபாரக் பாரில் அமர்ந்து குடிக்கும் அளவுக்கு தைரியமான ராஜா ரெக்கார்டிங் சென்ட்டர் குரூப்பை சேர்ந்த மகா பொல்லாதவன் !!
நான் முபாரக்கை முதன் முதலில் சந்தித்ததே ஒரு சுவாரஸ்யமான கதை !
தனியாக நின்று சைட் அடித்தால் பிகர் மடங்காது என்பது ஜொள்ளுதாத்தா காலத்து நம்பிக்கை என்பதால் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரான நான் தான் என் ஏனைய சுமார் மூஞ்சி குமார் நண்பர்களுக்கு சைட் துணை ! அப்படி ஒரு நாள் நண்பனின் காதலுக்கு துணையாக தெருவோரத்தில் நின்ற சமயத்தில் எதிர்கொண்டு மடக்கினான் முபாரக் ! என் நண்பன் சைட் அடித்தது முபாரக்கின் ஆள் !
எங்களிருவரையும் பக்கத்திலிருந்த பெட்டிக்கடைக்கு தள்ளி சென்றவன், ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு அவனின் காதல் பிரதாபங்களைப் பேச தொடங்கிவிட்டான் !
அந்த பெண்ணை காலேஜுக்கு அழைத்துவரும் ரிக்சாக்காரருக்கு சட்டை வாங்கிகொடுத்ததிலிருந்து, அவள் வரும் ரிக்சாவை சைக்கிளில் துரத்தி சென்று ரோஜாப்பூ வீசியது வரை அவன் சொல்லிமுடித்தபோது இருட்டிவிட்டது ! ஒரு வழியாய் அவனிடமிருந்து தப்பித்து ஓடினோம் !
ஒரு வாரம் கழித்து என்னை மீன்டும் கடைதெருவில் வைத்து மடக்கினான் !
" என்னாடா ?! அந்த காலேஜ் பக்கமே காணோம் ?....! "
" அந்த பொண்ணை நான் சைட் அடிக்கல முபாரக் ! என்னோட பிரெண்டு தான்... இப்ப அது உன்னோட ஆளுன்னு தெரிஞ்சதும்.... "
" ஏண்டா... நான் அவளை லவ் பண்றேன்னு சொன்னனே தவிர அவ என்னை லவ் பண்றான்னு சொல்லலையே ! "
நான் ஜகாவாங்கி முடிக்கும் முன்னரே ஒரே போடாக போட்டான் முபாரக் !
அந்தப் பெண் என் நண்பனையும் ஏறெடுத்து பார்க்கவில்லை என்றாலும் முபாரக்குடனான என் நட்பு இறுகியது !
ஒரு நல்ல முகுர்த்தத்தில் என்னை ராஜா ரெக்கார்டிங் செண்ட்டர் குரூப்புக்கு அறிமுகம் செய்துவைத்தான் ! கடைக்கு வரும் மற்ற நண்பர்களெல்லாம் வேலை முடித்தோ, காலேஜிக்கு பிறகோ வருவார்கள். ஆனால் கடையின் முழுநேர உறுப்பினன் முபாரக் ! சரியாக கடை திறக்கும் நேரத்தில் வெள்ளை வேட்டி, ஏதாவது ஒரு கலர் பிளெய்ன் முழுக்கை சட்டையில் ஆஜராகிவிடுவான் முபாரக். மதியத்துக்கு முன்னால் வடை, சமோசா, இரண்டு மூன்று டீ, சிகரெட்... மதியம் உணவுக்கு செல்பவன் குட்டித்தூக்கத்துக்கு பிறகு மீன்டும் வருவான் ! இரவு கடை மூடும்வரை டீ, சிகரெட் !
ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் முபாரக்கின் திருநாள் !
" அண்ணே ! சீக்கிரமா கடையை மூடுங்க... பாருல டேபிள் அரேஞ்செல்லாம் பண்ணிட்டேன்... கிளம்புங்க கிளம்புங்க ! "
ஆரம்பத்திலிருந்தே பரபரப்பவனின் சலம்பல் பாரில் சுருதி ஏறியவுடன் அதிகமாகும் !
" அண்ணே... பில்லை நல்லா பாருங்கண்ணே...போன தடவை ரெண்டு வாட்டர் பாக்கெட்டை கூட்டிட்டான் ! "
புல் மப்பிலும் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக சலம்புவான் !
பரிட்சையில் பிட் அடித்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான் எனபது தெரியுமே தவிர,அவன் படித்தது எத்தனை வகுப்புகள் என்பது யாருக்கும் தெரியாது !
" ம்ம்ம்... சவுத் ஸ்கூல்ல சிங்கமா சுத்திக்கிட்டிருந்த என்னை அந்த பி டி மாஸ்டர் மட்டும் பிடிக்காம விட்டிருந்தா.... "
மப்பில் சலம்பும்போது வகுப்பை கேட்டால் தலையில் குட்டுவான் !
" டேய் ! டேய் ! நிறுத்து ! எங்க சைட் அடிக்கவா ? இடுப்புயரம் வளரல... அதுக்குள்ள... சரி சரி ! ஹீரோ யாரு நீயா ? அப்ப நீ கேரியருக்கு போ ! டேய் துணைக்கு போற நாயி நீ சைக்கிள் மிதி ! பின்னால உக்காந்து வர்றவனுக்குதான் பிகர் மடங்கும் தெரியும்ல.... அப்புறம்... சட்டையை இன் பண்ணாத.... "
பெண்கள் உயர்நிலைப்பள்ளி பக்கம் சுற்றும் விடலைகளை அவ்வப்போது நிறுத்தி லவ் டிப்ஸை அள்ளி வீசுவான் !
" இவளையெல்லாம்.... இவளையெல்லாம்.... "
ஒரு மாலை கடைக்கு வந்தவன் திரும்ப திரும்ப பேசிக்கொண்டே புகைவிட்டான் !
" ஏன் முபாரக் ? என்னாச்சி... ? "
தான் ரெக்கார்ட் செய்துகொண்டிருந்த பாட்டுக்கு ஷார்ப்பை ஏற்றிவைத்துவிட்டு வந்து முபாரக் அருகில் அமர்ந்து கேட்டார் கடை ஓனர் சகாயம் அண்ணன் ! மெல்லிய சிரிப்புடன் எந்த சலனமுமில்லாமல் பேசி, பசங்களை பேச வைக்கும் கலையில் சகாயம் அண்ணன் கைதேர்ந்தவர் !
" அது வந்துண்ணே... நம்ம மில் ஓனர் பொண்ணு இருக்கால்ல... அவ... அவ... என்ன சொல்லியிருக்கா தெரியுமா ?.... "
" ம்... சொல்லு... சொன்னாதானே தெரியும் ?! "
முபாரக் பேச்சில் சுவாரஸ்யமாக, அவனின் கையிலிருந்த சிகரெட் அண்ணன் கைக்கு மாறியது !
" அவளோட பிரெண்ட் ஒருத்தி அவ குஸ்பூ மாதிரி இருக்கான்னு சொன்னதுக்கு இவ, நான் என்னா அவ்ளோ அசிங்கமாவா இருக்கேன்னு கேட்டிருக்காண்ணே ! இவளையெல்லாம்... "
" சரி, விடு முபாரக் ! மேக்கப் இல்லாத குஸ்பூவை நாம யாருமே பார்த்ததில்லதானே ?! "
கூலாக பேசிக்கொண்டே முடிந்துபோன சிகரெட் துண்டை தூரவீசிவிட்டு மீன்டும் ரெக்கார்டிங் போய்விட்டார் சகாயம் அண்ணன் ! நாங்கள் சிரிக்க தொடங்குவதற்கு முன்னாலேயே வேறு சிகரெட் வாங்க தெருவில் இறங்கியிருந்தான் முபாரக் !
" ச்சீ ! போய்யா... ஆண்டவன் உனனக்கு புண்ணியம் பண்ணாததாலதானே நீயே பிச்சை எடுக்கறே... இதுல எனக்கு புண்ணியமா ?! "
" அய்யா தர்மம் பண்ணுங்க ! ஆண்டவன் உங்களுக்கு புண்ணியத்தை கொடுப்பார் !..."
என இரைஞ்சும் பிச்சைக்காரரை எரிந்து விழுந்து விரட்டுவான் !
மதியம் அதே பிச்சைக்காரருக்கு கையேந்திபவன் மாமி கடையில் மீல்ஸ் வாங்கிகொடுத்துவிட்டு இவன் சிங்கிள் டீ அடித்துகொண்டிருப்பான் !
" யப்பா... தர்மபிரபு... உண்னோட கணக்கு நோட்டே முடியபோகுதுப்பா... சீக்கிரமா காசைகொடு ! "
" தலைவர் சொல்லிட்டாரு மாமி ! ஆண்டவன் எனக்கு புண்ணியம் கொடுத்ததும் முதல் போனி மாமிக்குதான் ! "
புலம்பும் மாமிக்கு நக்கல் பதில் !
விசிறி, ரசிகன் என்பதையெல்லாம் தாண்டி இளையராஜா வெறியன் முபாரக் ! அவரின் பாடல்களைதான்,அவரின் பாடல்களை மட்டும்தான் கேட்பான்.
" என்னா மியூசிக்... நம்ம மொட்டை... மொட்டைதாண்டா ! "
ஒரு கையில் சிகரெட்டும் மறுகையில் டீயுமாய் கண்கள் மூடி சொக்குவான் ! ( ராஜாவின் ரசிகர்கள் மன்னிப்பார்களாக ! இளையராஜாவுக்கு முபாரக் வைத்திருந்த செல்லப்பெயர்தான் மொட்டை ! )
ரோஜா பாடல்கள் வெளிவந்து ரஹ்மான் புயல் வீச தொடங்கிய காலம்...
" ம்ம்ஹும் ! வேதம் புதிது அது இதுன்னு எத்தனை பேரை பாத்துட்டோம்... ?! இதெல்லாம் சும்மா சீசன் மியூசிக் ! நாளைக்கு நம்ம மொட்டையோட படப்பாட்டு ரிலீசாகுதுல்ல... அண்ணே ! நம்ம ரெக்கார்டிங் செண்ட்டருல அந்த ரோஜா பட பாட்டு வரக்கூடாது ! "
" டேய் லூசு ! ராஜா ரெக்கார்டிங்ன்னு பேர்தான் வச்சிருக்கேன்.... ராஜா பாட்டு மட்டும்தான் கிடைக்கும்ன்னு எழுதலை ! ஏன்டா ? எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ் பாட்டுக்கெல்லாம் ஒன்னும் சொல்லாத இப்ப இந்த சின்ன பையனோட பாட்டு மட்டும் வேணாங்கற... ஏன் உங்க தலைவரை இந்த பையன் மிஞ்சிடுவான்னு பயமா இருக்கா ?! "
சகாயம் அண்ணனின் கிண்டலுக்கு சட்டென எழுந்துபோய்விட்டான் முபாரக்.
அடுத்தடுத்த நாட்களில் அவர் வியாபார தேவைகளை விளக்கி கூறியும் மசிவதாயில்லை முபாரக் ! அவனுக்கு தெரியாமல் ரோஜா பட ரெக்கார்டை வாங்கிவிட்டார் சகாயம் அண்ணன். விசயம் தெரிந்ததும் கோபித்துகொண்டு போய்விட்டான் முபாரக் !
" விடுங்கடா நாளைக்கு காலையில கடைக்கு முன்னால நிப்பான்.. இல்ல... வார கடைசியில பாருக்கு வரனுமுல்ல... ! "
இல்லை ! ஒரு மாதம்வரை கடைபக்கமே வரவில்லை முபாரக் ! வெற்றிலை பாக்கு நீங்கலாக அனைவரும் சகாயம் அண்ணன் தலைமையில் அவன் வீட்டுக்கு கிளம்பினோம்...
" புரிஞ்சிக்கோ முபாரக்... இன்னைய தேதிக்கு அந்த பட பாட்டை தான் அத்தனைபேரும் ரெக்கார்ட் பண்ணி கேக்கறான்... கடை மேல இருக்கற லோன் உனக்கு தெரியும்தானே... "
வீட்டு திண்ணையில் குந்தி அமர்ந்திருந்த முபாரக்கிடம் தங்கையின் கல்யாணம்,தம்பியின் படிப்பு என, சொந்த சோக கதைகளையெல்லாம் கலந்துகட்டினார் சகாயம் அண்ணன் !
" ஆனா ஒரு கண்டிசன்... நான் இருக்கறப்போ அந்த பட பாட்டை ரெக்கார்ட் போட கூடாது ! "
நீண்ட பஞ்சாயத்துக்கு பிறகு மனமிறங்கினான் முபாரக் !
" நீ சொல்லிட்டீல்ல... சரி முபாரக் ! "
" கிழிஞ்சுது போ ! இவன் கடையில இல்லாத நேரம்ன்னு ஒன்னு இருந்தாதானே... "
சகாயம் அண்ணனின் பதிலுக்கு கமெண்ட் அடித்த ரமேஷின் வாயை அவசரமாய் பொத்தினேன் !
" சரிப்பா ! வாங்க கடைக்கு கிளம்பலாம் ! "
" இல்ல... இல்ல... முதல்ல பாருக்கு... அப்புறமா கடைக்கு ! "
" எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல்லேயிருந்து " கதையாய் திண்ணையிலிருந்து குதித்தான் முபாரக் !
" பாருடீ ! இந்த வெட்டி ஆபீசரை அழைச்சிக்கிட்டு போக இத்தனை வெட்டிங்க ! நல்லவேலை... திண்ணை தேய்ஞ்சிடுமேன்னு பயந்துக்கிட்டிருந்தேன் ! "
ஜன்னலிலிருந்து கேட்ட முபாரக்கின் பெரிய அக்காவின் குரல் சத்தியமாய் எங்கள் காதுகளில் விழவில்லை !
இளையராஜாவின் சிம்பொனி வெளியீட்டுவிழா நடந்த நேரத்தில், ஊரின் பிரமுகர் ஒருவருக்கு வந்திருந்த அந்த விழா அழைப்பிதழை எப்படியோ வாங்கிகொண்டு வந்துவிட்டான். இளையாராஜாவின் முகம் ஆயில் பெயிண்ட்டினால் வரையப்பட்ட ஓவியம் அச்சிடப்பட்ட அழைப்பிதழ் !
நான் கொஞ்சம் சுமாராக வரைவேன் ! ஒரிஜினலின் மீது கட்டமிட்டு வரையும் பாணியில், ஏறக்குறைய தத்ரூபமாய் வரைந்துவிடுவேன் ! இளையராஜா ஆயில் பெயிண்டிங் படத்தை என்னிடம் வரைந்து கேட்டான் முபாரக். அதுவும் கேன்வாசில் ! அதனை ரெக்கார்டிங் செண்ட்டரில் மாட்ட வேண்டுமென்பது அவன் ஆசை ! அது எனக்கு சரியாக வராது என எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஓவியத்துக்கான அனைத்து உபகாரணங்களையும் வாங்கி வந்துவிட்டான் !
பல மாதங்கள் உழைத்து, ஒரு வழியாய் வரைந்து முடித்து, ஒரு சுபமுகுர்த்த நாளில் கடைக்கு எடுத்து சென்றேன்...
" என்னாடா ?... முபாரக் இளையராஜா படம் கேட்டான்... நீ அவரோட பையன் கார்த்திக் ராஜாவை வரைஞ்சி கொண்டுவந்திருக்க... "
சகாயம் அண்ணன் சீரியசாக கேட்க, சிறிது நேரம் என்னை முறைத்த முபாரக்...
" சரி விடுங்கண்ணே ! ராஜாவோ ராஜாவோட மகனோ... மாட்டிடுவோம் ! "
ராஜா ரெக்கார்டிங் செண்ட்டரில் கார்த்திக் ராஜா கொஞ்ச காலம் முறைத்துக்கொண்டிருந்தார் !
" இதென்னா புஸ்த்தகம் ?!... டேய் உள்ளார கில்மா புக் தானே ஒளிச்சி வச்சிருக்கற... ? "
" இல்ல முபாரக்... பாலகுமாரன் புக்தான் ! "
" பாலகுமாரனா ?... அது யாரு ! "
நான் லைப்ரரியிலிருந்து எடுத்து சென்றிருந்த புத்தகத்தை பிடுங்கி வைத்துகொண்டு சலம்பியவன், கடைக்கு இளம் பெண்கள்கூட்டம் ஒன்று வருவதை கண்டதும் சட்டென புத்தகத்தை விரித்துவைத்துகொண்டான் !
" சும்மா சொல்லக்கூடாதுடா.... பலகுமாரன் பாலகுமாரன் தான் ! இவரும் நம்ம மொட்டையை போல பெரிய ஆளுடா ! "
" டேய் முபாரக் !உன் மாமாடா ! "
ஸ்டைலாய் தம் இழுத்தபடி கடைக்கண்ணால் பெண்களை பார்த்துகொண்டே உச் கொண்டி கொண்டிருந்தவன் சகாயம் அண்ணன் அலர்ட் கொடுத்ததும் சட்டென எழுந்தான்...
" டேய் ! அந்த முப்பதாவது பக்கத்தை படிச்சி பாரு...இன்னாமா எழுதியிருக்காரு தலைவரு ! "
புத்தகத்தை சட்டென மூடி என் கையில் திணித்துவிட்டு போயே போய்விட்டான் !
சில நிமிடங்களிலேயே முபாரக்கை பாலகுமாரன் விசிறியாய் மாற்றியதில் நான் மகிழ...
" டீ ! ஏதோ தீயிற ஸ்மெல் வருதுல்ல ! "
பெண்கள் கூட்டம் கிசுகிசுக்க...
" சொல்றாங்கள்ல... அவன் சொன்ன முப்பதாம் பக்கத்தை பாரு ! "
சகாயம் அண்ணன் நமுட்டு சிரிப்புடன் கூற, புரியாமல் புத்தகத்தை திறந்தேன்... மாமாவிடமிருந்து முபாரக் மறைத்த சிகரெட் துண்டு... பாலகுமாரன் பல பங்கங்களுக்கு பொத்தலாகியிருந்தார் !
முபாரக் மீன்டும் வருவான் !
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

சாம்,
ReplyDeleteகலக்கல். எனக்கும் என் பள்ளிப் பருவத்து ரெகார்டிங் செண்டர் நினைவுகள் வந்துவிட்டது இதைப் படித்ததும். இன்றைக்கும் முபாரக் போன்று பல ராஜா ரசிகர்களைக் காணலாம். ராஜாவுக்கும் ரோஜாவுக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இருப்பதை இவர்கள் அப்போதே புரிந்துகொண்டார்கள் போலும். நல்ல பதிவுக்குப் பாராட்டுக்கள்.
வாருங்கள் காரிகன்,அதுவும் முதலாவதாக வந்திருக்கிறீர்கள் !
Deleteஉங்களின் இசை விருப்பங்கள், காமிக்ஸ் காதல், பள்ளிபருவத்து ரெக்கார்டிங் செண்ட்டர் அனுபவங்களையெல்லாம் வைத்து பார்த்தால் நமக்கெல்லாம் ஏறக்குறைய ஒரே வயதாகதான் இருக்கும் என தோன்றுகிறது !
அந்த காலகட்டத்தில் ரெக்கார்டிங் செண்ட்டர்களும், சலூன் மற்றும் பெட்டிக்கடைகளும்தானே நம் பால்ய குதூகலங்களின் ஊற்றுக்கண்களாய், சங்கம இடங்களாய் விளங்கின !
எல்லாமே எதிர்பார்ப்புகளாய் மாறிவிட்ட இன்றைய நமது கொடுக்கல் வாங்கல் வாழ்க்கைக்கு கொஞ்சமேனும் பசுமை பூசுவது பால்ய நினைவுகள் தானே ! அந்த காலத்தில் நமது மனதில் படிந்த எதிபார்ப்புகளற்ற நட்புகளும், கடைக்கண் பார்வைகளும், பரிமாறிக்கொள்ளப்படாமலேயே போன காதல் வார்த்தைகளும் நம் நெஞ்சங்களில் இன்றும் இளஞ்சூட்டை விரவிக்கொண்டுதானெ இருக்கின்றன !
நன்றி காரிகன்.
தவறு... தவறு... இது சாமானியனின் கிறுக்கல்கள் அல்ல, வாழ்த்துக்கள் நண்பரே,,, தொடரும் நமது நட்பூ....
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com
வாங்கஜீ ! உங்களின் முதல் வருகைக்கு நன்றி !
Deleteநிச்சயமா ஜீ ! நட்போட டீம் ஒர்க் பண்ணலாம்ஜீ !!!
"எல்லாமே எதிர்பார்ப்புகளாய் மாறிவிட்ட இன்றைய நமது கொடுக்கல் வாங்கல் வாழ்க்கைக்கு கொஞ்சமேனும் பசுமை பூசுவது பால்ய நினைவுகள் தானே ! அந்த காலத்தில் நமது மனதில் படிந்த எதிபார்ப்புகளற்ற நட்புகளும், கடைக்கண் பார்வைகளும், பரிமாறிக்கொள்ளப்படாமலேயே போன காதல் வார்த்தைகளும் நம் நெஞ்சங்களில் இன்றும் இளஞ்சூட்டை விரவிக்கொண்டுதானெ இருக்கின்றன !"
ReplyDeleteசாம்,
எத்தனை கருத்தாழமிக்க வார்த்தைகள்! மெய்மறந்து படித்தேன். சபாஷ். வாழ்த்துக்கள்.
"உங்களின் இசை விருப்பங்கள், காமிக்ஸ் காதல், பள்ளிபருவத்து ரெக்கார்டிங் செண்ட்டர் அனுபவங்களையெல்லாம் வைத்து பார்த்தால் நமக்கெல்லாம் ஏறக்குறைய ஒரே வயதாகதான் இருக்கும் என தோன்றுகிறது ! "
எனக்கும் இதேதான் தோன்றுகிறது. நீங்கள் செயின்ட் ஜோசெப் காலேஜில் படித்தவராக இருப்பின் ஒருவேளை நாம் சந்தித்திருக்கலாம்.
நன்றி காரிகன்,
Deleteஅது ஏனோ தெரியவில்லை... எனது வலைப்பூவில் எழுதுவதைவிட உங்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும்போது வார்த்தைகள் அதிகமாவே கொட்டுகின்றன ! ( உங்களின் வலைப்பூவில் எனது பின்னூட்டங்களும் உதாரணம்! ) May be... you have some special wavelength !
" நீங்கள் செயின்ட் ஜோசெப் காலேஜில் படித்தவராக இருப்பின்... "
இல்லை ! ஆனால்... லயோலா கல்லூரியில் மழைக்கு ஒதுங்கியிருக்கிறேன் ! ஆமாம், ஒன்பதாம் வகுப்பு படித்துகொண்டிருந்த போது சென்னைக்கு சுற்றுலா வந்த நாங்கள் ஓர் இரவு லயோலா காலேஜில் தங்கினோம் !!!
உண்மையை சொல்வதென்றால் பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் பிரான்ஸ் வந்துவிட்டேன். எனது மேல்படிப்பு நிகழ்வுகளெல்லாம் பிரான்சில்தான் ! பிரெஞ்சு மொழியை மட்டுமே மூலதானமாக கொண்டு ( அன்றைய எனது ஏட்டுசுரைக்காய் பிரெஞ்சுக்கும், பிரான்சில் புழங்கும் பிரெஞ்சுக்கும் மலை, மடு வித்யாசம் ! )பிரான்ஸ் வந்திறங்கிய காலகட்டத்தின் நிகழ்வுகளை எழுதினாலே எனது வலைப்பூவில் பல மாதங்களுக்கு ஜல்லியடிக்கலாம் !
ஒரு சின்ன உதாரணம் : வகுப்பு தோழி ஒருத்தி டின்னர் ஒன்றுக்கு என்னையும் வேறு சில நண்பர்களையும் அழைத்திருந்தாள்... அதுதான் நான் பிரான்ஸ் வந்தபிறகு அங்கு வாய்த்த நண்பர்களுடனான எனது முதல் சந்திப்பு ! ரெஸ்ட்டாரெண்ட்டின் வாசலில் நாங்கள் அனைவரும் அவளுக்காக காத்திருக்க, வந்தவள் ஒவ்வொருவரின் கன்னத்திலும் முத்தமிட்டு மாலை வணக்கம் கூற தொடங்கினாள். ( ஆண் பெண் பாகுபாடின்றி, நன்கு அறிந்தவர்கள் ஒருவர் மற்றொருவர் கன்னத்தில் முத்தமிட்டு முகமன் கூறுவது அந்த நாட்டின் பண்பாடு )
எனக்கோ கைகளும்,கால்களும் தந்தியடிக்க தொடங்கின ! முகம் வியர்த்து வழிய, என்னை நெருங்கியவளிடமிருந்து விலகி,சட்டென கையை நீட்டினேன்... மெல்லிய சிரிப்புடன் கை பற்றி குலுக்கி மாலை வணக்கம் சொன்னாள் அவள் !
எப்பூடீ ?!!!
இன்று அந்த நிகழ்வை நினைத்தால் சிரிப்பு வருவதோடு, நமது சமூகத்தில் அரோக்யமாய் நிகழ வேண்டிய ஆண், பெண் நட்பை பாலியலுடன் தொடர்படுத்தி பஒருவிதமான படபடப்பு நிலையிலேயே வைத்திருக்கிறோம் என நினத்தால் வருத்தம் மேலிடுகிறது. ( இதற்கான காரணங்களில் ஒன்றாக எனது சாமானிய மூளைக்கு தோன்றும் " வித்யாச கூச்சல் " சினிமா பாடல்களை பற்றி உங்கள் தளத்திலேயே குறிப்பிட்டுள்ளீர்கள் ! ) இதை பற்றி எனது " பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமுதாயம் " பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
மற்றபடி... இருபது வருடங்களாக விடுமூறைக்கு மட்டுமே இந்தியா செல்லும் NRI நான் !
நன்றி ! விரைவில்...
சாமானியன்
என் பக்கமாக இருந்தசில அனுபவங்கள் வருகிறதே.....! வாழ்த்துக்கள் ! சாமானியன் அவர்களே! நிணைவூட்டியதற்கு...
ReplyDeleteனது வலைப்பூவின் பக்கமாய் வந்ததற்கு நன்றி வலிப்போக்கன் அவர்களே !
Deleteஉங்கள், எனது.. ஏன் நாம் அனைவரின் அனுபவங்கள்தான் இவை !
நன்றி
சாமானியன்
இனிமையான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறீர்கள்! சிறு வயதில் நானும் அண்ணனும், 12 பாடல்களை எழுதிக் கொண்டு (60 கேஸட்டில் பதிவதற்கு!) மாதம் ஓரிரு முறையாவது ரெக்கார்டிங் சென்டர்களுக்கு செல்வோம்! "மேகம் கொட்டட்டும்" பாடலுக்கு "எக்கோ" ரெக்கார்டிங் செய்து, ஒவ்வொரு வரிக்குப் பிறகும் எக்கோ அடிக்கிறதா என்று ஆவலாக கேட்டதை எல்லாம் ஞாபகப் படுத்தி விட்டீர்கள்! :D
ReplyDeleteநன்றி கார்த்திக் !
Delete"மேகம் கொட்டட்டும்" பாடலுக்கு "எக்கோ" ரெக்கார்டிங் செய்து, ஒவ்வொரு வரிக்குப் பிறகும் எக்கோ அடிக்கிறதா என்று ஆவலாக கேட்டதை எல்லாம் ஞாபகப் படுத்தி விட்டீர்கள்!... "
புத்தாண்டு பிறப்பிற்காக சகலகலா வல்லவன் படத்தின் " இளமை இதோ இதோ " பாடலின் முதல் வரிகளான " ஹேப்பி நியூ இயர் " பல முறை ரிப்பீட் ஆகுமாறு பதிவு செய்ததில் தொடங்கி... எத்தனை அலப்பறைகள் !
அது ஒரு கவலைகளற்ற கனா காலம் !
சாமானியன்
இளமைக்கால இளையராஜா ரசிகரான நண்பரை ரசித்து எழுதிய வரிகள் ரசிக்க வைத்தது! அருமையான பதிவு! நன்றி!
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி ஐயா !
Deleteநம் அனைவரின் நட்பு வட்டத்திலும் முபாரக் போன்ற ஒருவர் நிச்சயமாய் இருப்பார் !
நன்றி
சாமானியன்
அருமையான எழுத்தில் அழகான கருத்துக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஐயா,
Deleteஎனது வலைப்பூவினை கண்டு படித்து, வாழ்த்தி பின்னூட்டமிட்டதற்கு நன்றி.
சாமானியன்
நகைச்சுவை கலந்த எதார்த்தமான நடையில் முபாரக் முதலான கதாபாத்திரங்களைக் கண்முன் நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
ReplyDeleteநிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு, தொடக்கத்திலிருந்து முடிவுவரை சலிப்பில்லாமல் வாசிக்க வைக்கிறது.
சுவையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். வளர வாழ்த்துகள்.
’பாலியல் புரிதலற்றுப் புழுத்துப்போகும் சமுதாயம்’ என்னும் பதிவில், பாலியல் குற்றங்களைத் தடுப்பதில், அரசு, அரசியல்வாதிகள், காவல்துறை, பொதுமக்கள் என அனைவரது அலட்சியப் போக்கையும் விரிவாக ஆராய்ந்திருக்கிறீர்கள்; கண்டித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteபிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தங்களுக்குள்ள ஆர்வத்தை இப்பதிவின் மூலம் அறிய முடிகிறது.
மிகவும் தரமான பயனுள்ள பதிவு இது.
தொடருங்கள். நன்றி.

//மேலும் நம் ஜாதி கட்டமைப்பிலும் கறுப்பு அலர்ஜிக்கான காரணங்கள் உண்டு ! பெரும்பாலும் நிறத்தின் மூலமாகவே ஜாதிகட்டமைப்பு தமிழ் சினிமாவில் மிகவும் தந்திரமாய், ஜாக்கிரதையாய் பாதுகாக்கப்படுகிறது ! இதை விளக்கவேண்டுமானால் இன்னொரு கட்டுரை தேவை !//
ReplyDelete//அடியாட்கள் தொடங்கி பிக்பாக்கெட் திருடன், கஞ்சா விற்பவன்வரை விளிம்புநிலை மனிதர்கள் அனைவரையும் சினிமாவில் கறுப்பாகவே பார்த்து பழகி, தெருவில் யாராவது திருடன் என கத்தினால் அழுக்கான உடையணிந்த கறுப்பு நபர் மீது சட்டென சந்தேகம் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம் ! மிகைபடுத்துவதாக தோன்றினாலும் உண்மை இதுதான் !//
உண்மை...உண்மை.
நிறத்துக்கும் அழகுக்கும் அடிமையாகிற நம் மக்களின் பலவீனத்தை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.
அனைத்துத் தரப்பினரும் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு.
மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன் சாமானியன்.
ஐயா,
Deleteஒரே நேரத்தில் எனது மூன்று பதிவுகளை படித்து விரிவான பின்னூட்டங்களும் அளித்திருக்கிறீர்கள் ! உங்களை போன்ற அனுபவமிக்க மூத்தவர்களின் வார்த்தைகள் எனக்கு ஊக்கமளிப்பவை.
உங்களின் வருகைக்கும், மனப்பூர்வமான வாழ்த்து மற்றும் பாராட்டுதல்களுக்கும் நன்றி.
சாமானியன்
அனுபவங்களை வித்தியாசமான முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteஅனுபவங்களை வித்தியாசமான முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteஉங்களை போன்றவர்களின் தொடர் ஊக்கமே என்னை போன்ற புதியவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.
சாமானியன்
செமை நாஸ்டால்ஜிக்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ராஜாவின் முரட்டு பக்தன் முபாரக் இன்று நலமாகவே இருப்பார் என்று நினைக்கிறன்..
ஜோரான பதிவு
வாழ்த்துக்கள்
தளத்தை தமிழ்மணத்தில் இணைக்கவும்
வார்த்தைகளுக்கு நன்றி !
Deleteராஜாவின் முரட்டு பக்தர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய எனது " மீன்டும் முபாரக் " வரும் வரை காத்திருங்கள் !
சில மாதங்களாக தமிழ்மணாத்தில் இணைக்க முயற்சித்து வருகிறேன்... முடியவில்லை !
சாமானியன்
நல்ல ஒரு பயணம்...
ReplyDeleteநன்றி ! என் வலைப்பூவில் தங்கள் பயணமும் தொடரட்டும் !
ReplyDeleteஅருமையான பதிவு! சுகமான ராகங்கள்! ஆம் நம் இளம்கால நினைவுகள் சுகமான ராகங்கள் தானே! இந்த வரி முபாரக்கிற்குப் பிடிக்கலாம்..."ராஜாவின்" என்ற ஒரு வார்த்தையை சுகமான ராங்களின் முன் இணைத்தால்....!!!!
ReplyDeleteஇப்போது மீண்டும் முபாரக்கிற்குச் சொல்கின்றோம்.....(இந்தப்பதிவு எப்படி எங்கள் கண்களில் படாமல் போனது என்று தெரியவில்லை!)