Sunday, June 15, 2014

முற்பகல் செய்யின்... ( சிறுகதை )

பிரபல ஐந்துநட்சத்திர ‍ஹோட்டல் ஒன்றின் அறை...


" கொண்டாந்துட்டீங்கல்ல...நம்ம வாக்கு சுத்தம்... என்னால முடியும்ங்கற காரியத்துக்குதான் ஒத்துக்குவேன் ! நமக்கு... கையில காசு... ம்ம்ம்... டேய் அப்புறம் என்னா ?! "


" ...ம்ம்ம்... வாயில தோச தலைவரே ! "


சோடாவில் கலந்த விஸ்கியை விழுங்கியபடி இழுத்த‌ அமைச்சரின் பேச்சுக்கு எடுத்துகொடுத்தான் அவருக்கு பக்கத்தில் நின்றிருந்த அந்தரங்க தொண்டரடிபொடி !


" இதுல நீங்க கேட்ட ஒரு கோடி இருக்கு சார் ! "


எதிரிலிருந்த கோட்சூட் மனிதர் தயக்கமாய் சூட்கேஸை நீட்டினார் !



" ம்ஹும்... அதை நான் தொட மாட்டேன்... கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு படம் புடிச்சிட்டா... "


போதையிலும் புத்திசாலித்தனமாக (!) அமைச்சர் பேச, விழித்தார் கோட்சூட் !


" ஐயா வாங்கமாட்டாரு... நான் வாங்குவேன்ல... ! "


பாய்ந்து பெட்டியை பிடுங்காத குறையாக வாங்கிய தொண்டரடிபொடியிடமிருந்து வீசிய பட்டை வாடைக்கு முகம் திருப்பிகொண்டார் கோட்சூட் !


" ஐயா... நீங்க மத்தவங்க மாதிரியா ? படம் புடிக்கறவன் கொடலை உருவிட மாட்டோம் ?! " 


கை உயர்த்தி சொறிந்து கொள்வது போன்ற பாவனையில் இடுப்பு வேட்டியில் சொருகியிருந்த பிச்சுவாவை தொட்டுக்காட்டியபடி தொண்டரடிபொடி உறும, ஏஸியை மீறி கோட்சூட்டின் முகத்தில் வியர்வை ஊற்று !


" சார் மெர்ஸலாகிட்டாபோல... சும்மா தமாசுக்கு சார் ! "


" அப்ப நான் கிளம்பறேங்க ! காண்ட்ராக்ட் கிடைச்சதும் மிச்சத்தை செட்டில் பண்ணிடறேன்... "



தொண்டரடிபொடியின் தமாசுக்கு அமைச்சரும் பெரிதாய் சிரிக்க, அவசரமாய் கிளம்பினார் கோட்சூட் !


" டேய்... சாரை வாசலாண்ட விட்டுட்டு வா... "


"லைவரே... யாரோ ஒரு சின்ன பொண்ணு உங்களாண்ட பேசனும்னு டார்ச்சர் கொடுக்குது தலைவரே.... "


" அது யாருடா ? நான் இங்க இருக்கறது நம்ம கட்சிகாரனுங்களுக்கே தெரியாதே... "


கோட்சூட்டை வழியனுப்பிவிட்டு வந்த தொண்டரடிபொடி சொல்ல சற்றே உஷாரானார் அமைச்சர் !


" இல்லீங்க தலைவரே நல்லா மிரட்டி உருட்டி விசாரிச்சிட்டேன்... தப்பா தெரியல... நீங்க கார்லேருந்து இறங்குனதை பாத்திருக்கு... இளசு தலைவரே... இருபது இருபத்திரெண்டுதான் இருக்கும்... சும்மா சினிமா ஸ்டாராட்டம் இருக்கு தலைவரே ! "


" எங்கடா ? "


தலைவரின் சபலம் விழிக்க தொடங்கியது !


" கெஞ்சிக்கினே என் பின்னாடியே ரூம் வாசல் வரைக்கும் வந்துடிச்சி தலைவரே... தோ கூப்பிடறேன் ! "


" ணக்கம் சார் ! "


அலைபாயும் கூந்தலும், டைட் டீ ஷர்ட்,  ஜீன்சுமாய் அறைக்குள் நுழைந்த இளம் பெண்ணை கண்டதும் போதையில் இடுங்கியிருந்த அமைச்சரின் கண்கள் அகல விரிந்தன !


" ‍ஹய்யோ... நான் உங்க பேன் சார்... நீங்க செஞ்ச நல்ல காரியங்களையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கேன் சார்... யூ ஆர் ரியலி கிரேட் சார் ! "


ஏதோ சினிமா நடிகரிடம் பேசுவதை போல அவள் வழிகிறாள் என புரிந்தாலும் அது அமைச்சருக்கு பிடித்திருந்தது ! அவள் கைகள் உயர்த்தியபோது குட்டை டீ ஷர்ட் விலகி தெரிந்த சிவந்த சின்ன இடுப்பு இன்னும் பிடித்திருந்தது !


" ம்ம்ம்... சொல்லும்மா என்ன வேணும் ? "


" அது வந்து... சார் ! இந்த ஆளை கொஞ்சம் வெளிய அனுப்புங்க சார் ! மீசையும் தொப்பையுமா... ஐயே ! "


சட்டென அருகில் வந்து கிசுகிசுத்தவளை கண்டு அமைச்சரின் இதயதுடிப்பு எகிறியது !



" டேய் ! நீ கீழ பார்ல இரு... கையில செல்போனை வச்சிக்க... நான் பாப்பாகிட்ட பேசிட்டு கூப்பிடறேன்... "


தனது தொப்பையை ஒரு கையாலும் மீசையை மறுகையாலும் தடவிகொண்டே  தொப்பை தொண்டரடிபொடியை விரட்டினார் அமைச்சர் !


" டேய்... இரு ! இரு ! இந்த பெட்டியை எடுத்துக்கிட்டு போயிடு... இல்ல ! வேணாம் ! பாருல வச்சுக்க வேணாம் ! "


உஷாராக ஆரம்பித்து படு உஷாராக முடித்தார் அமைச்சர் !


" ம்... இப்ப சொல்லும்மா ! "


" அது வந்து சார்... ‍ஹய்யோ ! என்ன சார் இது ? விஸ்கியை சோடாவுல கலந்து... நானே ரா தான் சார் ! "


அமைச்சரின் முகத்துக்கு நேராக அலைபாய்ந்த அவளின் கூந்தல் மணத்திலும், பெர்ப்ப்யூமிலும் அவரின் ரத்தத்தில் ஒரு பெக் கூடியது ! அவளோ உரிமையாய் அவரின் கிளாசில் ஸ்காட்சை தாராளமாய் கவிழ்த்துவிட்டு பக்கத்து கிளாசில் தனக்கென கொஞ்சமே கொஞ்சம் ஊற்றிகொண்டாள் !


" ஆ‍ஹா ! இந்த காலத்து பொண்ணுங்க இருக்கீங்களே... "


முடிக்காமலேயே அவள் கொடுத்த கிளாசை தன் வாயில் கவிழ்த்துகொண்டார் அமைச்சர் !


" வா ! வா ! வந்து சீக்கிரமா வண்டில ஏறு ! "


சூட்கேசுடன் ஓடிவந்தவளை அவ‌சரப்படுத்தினான் அவன் !


" தூ... உங்கப்பன் இருக்கானே.... சரியான தூ....டா ! எங்க கிழவன் கையைபிடிச்சி இழுத்துடுவானோன்னு பயந்துட்டேன் ! அதோட... ரூமுலேருந்து வெளியே வந்தப்போ ரிசப்சன்ல போலீஸ்க்காரங்க அவரோட ரூமை விசாரிச்சிக்கிட்டிருந்தாங்க...


" அந்தாளை பார்க்க போலீஸ் வர்றது சகஜம்... அதுவும் மாச ஆரம்பம்... மாமுலுக்கா இருக்கும்...


" ஏன்டா ? என்ன இருந்தாலும் அப்பா காசையே இப்படி... "


" சும்மா இருடீ ! நல்லவாயன் சம்மாதிச்சதை நாரவாயன் திங்கறான்னு சொல்வாங்க... எங்கப்பனே ஒரு நாரவாயன்தாண்டி ! இது மாதிரி எத்தனை சூட்கேஸ் அந்தாளு பெட்ரூமுல திறக்காம கிடக்கு தெரியுமா ?... சரி ! சரி ! பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் போன் பண்ணி இன்னைக்கு நைட் பார்ட்டியோட ஜமாவை ஆரம்பிக்கறோம்ன்னு சொல்லு ! "


" மிஸ்டர்... அந்த பெட்டியை கொடுத்துட்டு எங்ககூட வர்றீங்களா ப்ளீஸ் ! "


" யோவ் ? யாருய்யா நீ ? நான் யாருன்னு தெரியுமா ? "


" தெரிஞ்சுதான் பேசறேன் தம்பி ! நான்... லஞ்ச ஒழிப்பு துறை... "


புன்சிரிப்போடு தன் அடையாள அட்டையை காட்டினார் நான்கைந்து பேர் புடைசூழ நின்றிருந்த மனிதர் !


" ஏய்... நீ எங்கம்மா ஓட பார்க்குற ? "


சட்டென ஓட யத்தணைத்த இளம்பெண்ணை பாய்ந்து பிடித்தார் மப்டியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி !


ஞ்சம் வங்கிய அமைச்சர் மதுபோதையில் கைது செய்யப்பட்டார் ! லஞ்ச பணத்துடன் தப்பிக்க முயன்ற அமைச்சரின் மகனும் இளம் அழகியும் பிடிபட்டனர் !!


மறுநாள் தினசரிகளின் தலைப்பு செய்தியில் அச்சிடப்பட்டிருந்த புகைப்படங்களில் மட்டுமே அமைச்சர் சிரித்துகொண்டிருந்தார் !





இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

37 comments:

  1. Replies
    1. வாங்க விஸ்வா,

      கொஞ்ச நாளா காணோமேன்னு இருந்தேன்... வேலை பளு காரணமாக இருக்கலாம் என் நினைத்ததால் தனிமடல் அனுப்பவில்லை.

      எனது வலைப்பூவின் முதல் பினூட்டம் உங்களுடையது... எனது இந்த முதல் சிறுகதைக்கும் உங்களின் பின்னூட்டமே முதலாவதாக அமைந்ததில் மிக மகிழ்ச்சி !

      நன்றி
      சாமானியன்

      Delete
  2. இன்னும் "மாட்ட" வேண்டியவர்களும் இருக்கிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. லிஸ்ட்டை அனுப்புங்க சார்... " பொறி " இல்ல " பொரி " வச்சி பிடிச்சிடலாம் !

      நன்றி
      சாமானியன்

      Delete
  3. இரண்டு விஷயங்கள் சொல்லலாம் என்று தோன்றியது நண்பரே...

    1. கதைக்கு இந்த நாலு படங்கள் தேவையில்லை என்று தோன்றியது... Actually, படங்களே தேவையில்லை...

    2. Paragraph எங்கு ஆரம்பிக்கின்றது என்றே தெரியவில்லை... அதிக இடைவெளி விடவும்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்து மற்றும் அலோசனைகளுக்கு நன்றி கார்த்திக் !

      Paragraph சரி செய்துவிட்டேன் !

      தொடர்ந்து உங்களின் கருத்துகளை பதியுங்கள் நண்பரே

      நன்றி
      சாமானியன்

      Delete
  4. சாமான்யன் அவர்களுக்கு,
    வணக்கம். வாசகரை அவரறியாது தன்னுள் மூழ்கடிக்கும் ‘கதைசொல்லித்தனங்கள் இல்லாத கதை‘ உங்களுக்குக் கைவருகிறது . தி.ஜானகிராமனின் ‘ரசிகனும் ரசிகையும்‘ என்னும் சிறுகதையை வாய்ப்பிருந்தால் படித்துப் பாருஙகள்.
    சில வரிகளை நீக்கியிருந்தால் இக்கதையிலும் அந்த வடிவசோதனை வாய்த்திருக்கும் போலத் தோன்றுகிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகைக்கு நன்றி !

      பெரிய வார்த்தைகளை போட்டு, தி.ஜானகி ராமன் மேற்கோளுடன்... இந்த கதைக்கு இப்படி ஒரு பின்னுட்டத்தை நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை நண்பரே ! கட்டுரை மற்றும் வாழ்க்கை அனுபவங்களை சரளமாய் எழுத முடிந்த அளவுக்கு சிறுகதை கைகூடுமா என்ற சந்தேகத்துடனேயே இதனை பதித்தேன்.

      தி.ஜானகிராமனின் படைப்புகளை படிக்க நெடுநாள் ஆசை, ஆனால் பிரான்சில் வசிக்கும் என்னால் ஆசைப்பட்ட தமிழ் நூல்களை அவ்வளவு எளிதில் வாங்கிவிட முடிவதில்லை ! தபால் மூலம் வாங்க நினைத்தால் பல நடைமுறை சிக்கல்கள் ! இந்த வருடம் விடுமுறைக்கு இந்தியா வரும் போது நிச்சயம் வாங்கிவிட வேண்டும் !

      உங்களின் பின்னூட்டத்தினை படித்த பிறகு, இனி எழுதும் பதிவுகளை என்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியை உணர்கிறேன் !

      தங்களுக்கு நேரமிருப்பின் எனது முந்தைய பதிவுகளை படித்து உங்களின் கருத்தினை சொல்லுங்களேன் !

      நன்றி
      சாமானியன்

      Delete
  5. முதல் பாலிலேயே சிக்சர் அடிச்சிட்டீங்க சாமானியன்! ஆரம்பம் முதல் கடைசி வரை தொய்வின்றி நகர்கிறது. ஒரு சிறுகதையை கடைசி வரை விறுவிறுப்பாக கொண்டுசெல்வது ஒரு சிலரால் மட்டுமே முடியும், பாராட்டுக்கள்... ஆனால் ஒரு விஷயம், மகனே அப்பாவிடம் கொள்ளையடிக்க எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கவேண்டும்? வீட்டிலேயே ஆட்டையைப் போடலாமே!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி ஸ்கூல்பையன் அவர்களே !

      அந்த மூவருடன் நாலாவதாய் மிக சரியான இடத்தில் என்னையும் " லாக் " செய்துவிட்டீர்கள் ! லாஜிக் ஓட்டையில் நான் அரெஸ்ட் !

      நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பது சரிதான் ! அமைச்சரின் மகனின் உரையாடல்களில் ஒரு சில வாக்கியங்களை சேர்த்திருந்தாலே இந்த குழப்பத்தை சரி செய்திருக்கலாம் !

      எந்த பதிவையும் எழுதிய உடனே பிரசுரித்துவிடாமல் மீன்டும் ஒரு முறை, எழுதியவர் என்ற கண்ணோட்டத்திலிருந்து விலகி, விமர்சன பார்வையுடன் படித்துபார்க்க வேண்டிய அவசியத்தை உங்களின் பின்னூட்டத்தின் மூலம் உணர்கிறேன்.

      நன்றி
      சாமானியன்

      Delete
  6. ஒரே கல்லுல மூணு மாங்கா அடிச்சுட்டீங்களே.... பாஸூ

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான் ஜீ !

      நன்றி
      சாமானியன்

      Delete
  7. வணக்கம் சாமானியன்.

    உங்கள் கதை நன்றாக உள்ளது.
    எனக்குச் சிறுகதைகள் எழுதுவது தான் பிடிக்கும்.
    நிறைய எழுதி இருக்கிறேன்.
    ஆனால் வலைக்காக எழுதும் போது கதையை மிகவும் சுறுக்கி
    எழுதினால் தான் வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்கள் என்று
    கதையை மிகவும் சுறுக்குவதால் சிறுகதைக்குள்ள “மரபு“ கெட்டுவிடுகிறது.
    சும்மா ஒரு சின்ன விசயத்தைச் சொல்லிச் செல்வது போல் தான் கதையை அமைக்க முடிகிறது.

    நீங்கள் சற்று விரிவாக எழுதி இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
    உங்களின் பதிவகளை அவசியம் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி !

      நீங்கள் கூறியது உண்மைதான் ! ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீளும் பதிவுகள் வலைப்பூக்களில் சாத்தியமில்லை எனதான் தோன்றுகிறது !

      புதிய பதிவுகளை நிச்சயம் தெரியப்படுத்துகிறேன்.

      நன்றியுடன்
      சாமானியன்

      Delete
  8. அலோவ் இது சாமனியன் எழுதிய கதை மாதிரி தெரியவில்லை

    நல்ல அருமையான நடை..
    மெச்சூர்ட் ... வாழ்த்துக்கள் தோழர் தொடர்க

    http://www.malartharu.org/2014/04/sicilian-maria-puzo.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி நண்பரே !

      உங்களின் த சிசிலியன்... பதிவை படித்து பின்னூட்டமும் பதிந்துள்ளேன் ! நல்ல பதிவு நண்பரே !
      http://www.malartharu.org/2014/04/sicilian-maria-puzo.html

      தொடர்ந்து வருகை தாருங்கள்

      நன்றி
      சாமானியன்

      Delete
  9. அழகிய பருவப் பெண்ணை அனுப்பித் தந்தையிடமிருந்து பெற்ற மகனே பணத்தைக் களவாடும் வித்தியாசமான நிகழ்வு கதைக்கு விறுவிறுப்புச் சேர்க்கிறது.

    நீங்கள் கையாண்டிருக்கும் ‘நடை’யும் தொய்வில்லாமல் கதையைக் கொண்டுசெல்கிறது.

    ’அவரின் ரத்தத்தில் ஒரு பெக் கூடியது’, ‘தலைவரின் சபலம் விழிக்கத் தொடங்கியது’ போன்ற விவரிப்புகளை வெகுவாக ரசிக்க முடிகிறது.

    எதார்த்த நடையில் சொல்லப்பட்ட ‘விறு விறு’ கதை இது.

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டுக்கு, முக்கியமாய் ’அவரின் ரத்தத்தில் ஒரு பெக் கூடியது’, ‘தலைவரின் சபலம் விழிக்கத் தொடங்கியது’ போன்ற நுன்நகைச்சுவை கலந்த வரிகளை ரசித்து படித்ததற்கு நன்றி ஐயா !

      சாமானியன்

      Delete
  10. இதுகதையில் நடக்கும் சம்பவங்கள் வெளிநாடாக இருந்தால்..இது நடக்கும் என்று ஒரு வேளை நம்பலாம்.. உள்நாடாக இருந்தால் வாய்பே்பே... இல்லை... சினிமா மாதிரி ..ஒரு ச்சு கொ்ட்டி திருப்தி அடையலாம். தங்களின் நடைக்கும் சொல்ல வந்த கருத்துக்கும் வாழ்த்துக்கள்!.. லஞ்ச ஒழிப்பு போலீசே லஞ்சம் வாங்கிய கதை தங்களுக்கு தெரியாதென்று நிணைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி தோழரே !

      " லஞ்ச ஒழிப்பு போலீசே லஞ்சம் வாங்கிய கதை... "

      உண்மைதான் ! சமூக யதார்த்தம் அப்படிதான் இருக்கிறது ! கற்பனை கதையிலாவது பழிதீர்த்து கொள்வோமே !

      நன்றி
      சாமானியன்

      Delete
  11. vanakam saamaanian
    idhu thiruttu kudumba arasialvaadhien nilamai. idhu thaan kaathu uttu pudikiratha ? sabash

    sattia

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகைக்கும், வார்த்தைகளுக்கும் நன்றி சத்யா அவர்களே !

      சாமானியன்

      Delete
  12. சிறப்பாக எழுதி உள்ளீர்கள்! பாராட்டுக்கள்! தொடருங்கள்! கதையை அன்றே படித்துவிட்டாலும் (மொபைலில் படித்தமையால்) உடனே கருத்திட முடியவில்லை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நினைவில் வைத்து பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி ஐயா.

      சாமானியன்

      Delete
  13. நண்பா, உங்களை ஒருமேட்டரில் கோர்த்து விட்டு இருக்கிறேன் எனது பதிவை காண்க.....

    ReplyDelete
    Replies
    1. இதென்ன கலாட்டா ?... என்னைய வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணிடலியே... ?!!!

      சாமானியன்

      Delete
  14. சிறுகதைகள் அதிகம் எழுதியது இல்லை! ஆனால், வாசகன் என்ற முறையில் ஒரு கருத்து: நீளத்தை இன்னும் சற்று குறைத்திருக்கலாமோ என்று தோன்றியது! :) "சூது கவ்வும்" படத்தில் இடம் பெறும் காட்சிகளை நினைவுறுத்தியது இந்தக் கதை (பாடல் உட்பட!)! :) ஆனால், அந்தப் படத்தில் அமைச்சர் (M.S. பாஸ்கர்) ஒரு நல்ல வாயர்! :D

    ReplyDelete
    Replies
    1. " சிறுகதைகள் அதிகம் எழுதியது இல்லை!... "

      ஆனால் நீங்கள் எழுதிய சிற்சில " சிறு " சிறுகதைகள் சுவாரஸ்யமானவை நண்பரே !

      " "சூது கவ்வும்" படத்தில் இடம் பெறும்... "

      இதனை இன்னும் யாரும் குறிப்பிடவில்லையே என ஆச்சரியத்துடன் தான் இருந்தேன் !

      இந்த கதையை ஆரம்பித்து, அமைச்சரின் மகன் பேசுவதாக அமைந்த " நல்ல வாயன்... " வசனத்தை Key in செய்யும்போதுதான் பொறி தட்டியது ! கதையை பதியாமலேயே விட்டுவிடலாம் எனக்கூட நினைத்தேன்...

      ஆனால் நீங்கள் குறிப்பிட்டதை போல,

      " ஆனால், அந்தப் படத்தில் அமைச்சர் (M.S. பாஸ்கர்) ஒரு நல்ல வாயர் "

      என நானும் எண்ணியதால்தான் பதித்தேன் ! சூழ்நிலை ஒன்றாக தோன்றினாலும் opposite கதாபாத்திரங்களை கொண்டது இந்த கதை.

      நன்றி கார்த்திக்.
      சாமானியன்

      Delete
  15. வெல்டன் சாம்,

    சிறுகதை எழுதத் துவங்கியாயிற்று. வாழ்த்துக்கள். ஒரே வசனங்களாக இருந்தால் நாடக பாணியைப் போல மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. அதை தவிர்க்க நீங்கள் கொஞ்சம் வர்ணனைகள் சேர்த்துக்கொண்டு எழுதுங்கள். எதோ எனக்குத் தோன்றிய ஒரு சின்ன சிந்தனை. உங்கள் எழுத்தின் மீது எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் யோசனைக்கும் நம்பிக்கைக்கும் நன்றி காரிகன் ! உங்களின் பதிவுக்கான புன்னூட்டத்தில் மும்முரமாக இருக்கிறேன்...!!!

      உங்கள் தளத்தில் சந்திப்போம் !

      சாமானியன்

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. k bakyarajin twist indha kathaiyel irrukudu

    ReplyDelete
  18. பாக்யராஜ் ட்விஸ்ட்டுன்னுலாம் பயமுறுத்தறீங்க... !!! அடுத்ததா பாக்யராஜோட முருங்கைக்காய் மேட்டரும் இருக்குன்னு சொல்லிடாதீங்க !!!

    சாமானியன்

    ReplyDelete
  19. கதை நல்லாயிருக்கு....கடைசி பத்திகளில் கொஞ்சம் குழப்பம் புரிய இரண்டாம் முறை படிக்க வேண்டியதாயிருந்தது

    ReplyDelete
    Replies
    1. கதையில் சில குழப்பங்கள் இருப்பது உண்மைதான் ! எழுதி முடித்தவுடன் சிறிது பொறுத்திருந்து, விமர்சன கண்ணோட்டத்துடன் படிக்காமல் சட்டென பதிந்துவிட்டதால் ஏற்பட்டது. இனி அந்த தவறு நேராது பார்த்துக்கொள்வேன்.

      நன்றி
      சாமானியன்

      Delete
  20. mudal kathai endru namba mudiyavillai.jaykanthan eluthil ulla somuga gobam therigirathu.oru kathai vettri adiya twist nadi valm ethirbara thirupam thevai.nothing is missing.so it is a very good story.keep it up nanba

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி !

      எனக்கு சமூக கோபமிருப்பது உண்மை ! சமூக சீரழிவுகளை பேசாத எதுவும் நல்ல படைப்பல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து.

      எழுத்தில் நான் செல்ல வேண்டிய தூரம் மிக திகம் இருக்கிறது !

      தொடர்ந்து வருகை தாருங்கள் தோழி.

      Delete