நமது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் !
" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது ! "
" எங்க வீட்டுக்காரரோட கோபத்துக்கு முன்னால யாராலும் நிக்க முடியாது ! "
" நான் கொஞ்சம் முன்கோபி ! "
கோபத்தில் ஒரு மனிதனின் உருவமே முற்றிலும் வேறுவிதமாக மாறிவிடுகிறது ! குரலை உயர்த்தி பேசுவதில் தொடங்கி, பொருட்களை வீசி எறிவது வரை, சில நேரம் எதிரிலிருப்பவரை அடித்துவிடுவது வரை கோபத்தின் வெளிப்பாடு பலவகை !
சரி, " ஆத்திரத்தில் அறிவிழத்தல் " உண்மைதானா ?
ஆழமாக யோசித்தால் இல்லை என்றே படுகிறது ! கோபமும் இடம், பொருள், ஏவல் அறிந்தே வெளிப்படும் என தோன்றுகிறது ! மேலிருந்து கீழாக பாயும் நீரை போன்றது கோபம் ! அது எப்போதும் நம்மைவிட வலிமையில் குறைதவரிடமே தோன்றுகிறது. இங்கு வலிமை என்று நான் குறிப்பிடுவது உடல் வலிமையை மட்டுமல்ல. அது பொருளாதாரமாக, சமூக ஏற்ற தாழ்வாக கூட இருக்கலாம்.
அரசியல்வாதி கூட கோபத்தில்கண் சிவக்கும்போது அருகில் நிற்கும் அப்பாவி தொண்டனை தான் அறைகிறார் ! அவரை திட்டமிட்டு தரக்குறைவாய் விமர்சிக்கும் மாற்றுகட்சி தலைவரிடம் கூட்டணிக்காக போகும்போது அரவணைத்து அகமகிழுகிறார் ! அதிக இடம் கிடைக்கவேண்டுமல்லவா ?!
ஒரு உதாரணம்...
தெருவில் நடந்து கொண்டிருக்கிறோம்... எங்கிருந்தோ ஓடி வந்த சிறிய நாய்க்குட்டி நமது விலை உயர்ந்த கால்சட்டையில் சிறுநீர் கழிக்க முற்படுகிறது... ஒரே எத்தாக எத்தி நாய்க்குட்டியை விரட்டிவிடுவோம்தானே ?
அந்த சிறிய நாய்க்குட்டியின் இடத்தில் நம் இடுப்புயரம் வளர்ந்த ஒரு முரட்டு நாயை கற்பனை செய்துகொள்ளுங்கள் !
கால் சதைக்கு வந்தது கால்சட்டையோடு போயிற்று என நினைத்து அந்த நாய் சிறுநீர்கழித்து செல்லும்வரை சப்தநாடியும் ஒடுங்கி நிற்போம் இல்லையா ?!
மற்றொரு உதாரணம் !
இன்று நமக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்க போகிறது... தலைமை அதிகாரியை சந்திக்க போகிறோம்... ஏற்கனவே தாமதமாகிவிட்டது ! நேர்த்தியான உடையில் வீட்டிலிருந்து அவசரமாய் வெளியேறும் நேரம்...
" பேனாவை மறந்துட்டீங்க... "
கொண்டுவருபவர் மனைவியோ, பிள்ளையோ, வேலைக்காரரோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ! ஏதோ ஆர்வக்கோளாறில் உங்களிடம் நீட்டும் பேனாவை அவர் அவசரமாய் திறக்க, அதிலிருந்து தெரித்த மை நம் சட்டை முழுவதும் !
" அறிவிருக்கா உனக்கு... " என தொடங்கி ஆடிவிட மாட்டோம் ?!
இதுவே நம் உயரதிகாரியின் முன்னால்...
நமது வேலை உயர்வு உத்தரவில் கையெழுத்திடுவதற்கு அவர் பேனா மூடியை திறக்க, மை நம் சட்டையில் தெரித்துவிடுகிறது ! அவர் பதறுகிறார்...
" அட விடுங்க சார் ! துவைச்சிட்டா போயிடும்... அப்படி போகலேன்னாலும் என்னோட பதவி உயர்வு ஞாபகார்த்தமா இருந்துட்டு போகட்டுமே சார் ! எங்க சார் என்னோட சட்டையிலேயே பதவி உயர்வு கையெழுத்து போட்டுட்டார்ன்னு சொல்லிக்குவேன் ! "
எப்படி வழிவோம் ?!
வலிமையின் வெளிப்பாடாக முன்னிறுத்தப்படும் கோபம் உண்மையில் பயத்தின்,இயலாமையின் வெளிப்பாடு !
சிறிய நாயாகட்டும், பெரிய நாயாகட்டும், அதிகாரி உதாரணமாகட்டும், அனைத்திலும் பயமே கோபத்தின் வெளிப்பாடாக அமைகிறது ! விலை உயர்ந்த கால்சட்டையை அசிங்கபடுத்திவிட்டதே என்ற இயலாமையில் நாய்க்குட்டியை எட்டி உதைத்த கோபம், பெரிய நாயை ஒன்றும் செய்ய முடியாது எனும் போது அடங்கி விடுகிறது ! வேலைக்கு தாமதமாகிவிடுமே என்ற கோபத்தில் கத்தும் நாம், இந்த மைக்காக கோபித்தால் அதிகாரி எங்கே நமது வேலை உயர்வுக்கு உலை வைத்துவிடுவாரோ என பம்மிவிடுகிறோம் !
நம் பேட்டையின் சண்டியர் தெருவில் வம்புக்கிழுத்தால் ஒதுங்கிவருவோம் !
" சாக்கடையில கல்லெறிஞ்சா நமக்குதான் சார் அசிங்கம் ! "
அறிவுரை வேறு !
ஆனால் நமது இயலாமையினால் அடங்கிய கோபம் நமக்கு அடங்கி நடப்பவர்கள்மீது இன்னும் ஆக்ரோசமாய் பாயும் !
" என்னா காபி இது.....?! சூடும் இல்ல... சர்க்கரையும் இல்ல... ! "
மாலையில் வீடு திரும்பியதும் ஆசையாய் வரவேற்கும் அப்பாவி மனைவிமீது பாயும் ! நமது சமூகத்தில் பல ஆண்களின் கோபத்துக்கான இடிதாங்கிகளாக இருப்பது அப்பாவி மனைவிகள்தான் !
மதிப்பெண் குறைந்த பிள்ளைகளை இழுத்துபோட்டு அடிப்பதும் இலயாமைதான் !
" ஏன்டா.. உன்னை டாக்டராக்கனும்,கலெக்ட்டராக்கனும்ன்னு நான் ராத்திரி பகலா உழைக்கிறேன்... "
இதுதான் ! நாமே நமது சமூக அந்தஸ்த்துக்காக, அவர்களின் விருப்பம் அறியாமல் தீர்மானித்துக்கொண்டவை நடக்காமல் போய் விடுமோ என்ற பயம் ! இயலாமை !
கோபத்தைவிட மோசம் முன்கோபம் ! ஏதோ ஒன்று நடந்த பிறகு கோபப்படுவதையாவது நியாயப்படுத்த முயலலாம்... அதென்ன முன்கோபம் ?!
" சார் ரொம்ப முன்கோபி ! "
இதைவிட கேவலமான அறிமுகம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ! தன் கோபத்தையே திறமையாய் முன்னிறுத்தும் அறியாமை !
ஒரு நிமிட கோப உணர்வால் நமது உடலும் மனதும் எவ்வளவு பாதிக்கப்படுகிறது தெரியுமா ? சட்டென உயரும் இரத்த அழுத்தத்தில் தொடங்கி, நரம்புத்தளர்ச்சிவரை கோபத்தினால் உண்டாகும் கேடுகளை பல பக்கங்களுக்கு எழுதலாம் !
கோபம் தவறென்றால் நம்மை சுற்றி நடக்கும் தவறுகளை பார்த்துக்கொண்டு சும்ம இருக்க முடியுமா ?
கோபம் இயலாமையின் வெளிப்பாடென்றால் தன் வாழ்க்கை முழுவதுமே கோபக்கார மனிதனாக உலாவி சமூக சீரழிவுகளை சினந்து கவிதைவடித்தானே பாரதி ? எமனையே எள்ளி நகையாடி, அந்த எமனின் வாகனமும் நெருங்க பயப்படும் யானையின் காலால் மாய்ந்த அவனின் வாழ்க்கை தவறா ?!
இல்லை தவறில்லை ! கோபம் தவறில்லை, அது நமது கட்டுக்குள் இருக்கும்வரை ! ஒருவர் மீதான கோபத்தை அதற்கு சம்மந்த்தமில்லாத ! மற்றொருவரிடம் காட்டாதவரை !
அதைதான் " ரெளத்திரம் பழகு " என்றான் பாரதி !
சமூகத்தின் பெண்ணடிமை கொடுமையை கண்ட பாரதி அதனை தன்னால் மாற்ற முடியாது என்ற இயலாமையில் தன் மனைவியிடம் எரிந்து விழவில்லை ! மாறாய் அந்த வழக்கத்தை ஒழிக்க தானே முன்னுதாரணமாய் திகழ்ந்தான். மனைவி கணவனின் பின்னால் நடந்த அந்த காலகட்டத்தில் தன் மனைவியின் தோள் மீது கைபோட்டுவீதிகளில் உலா வந்தவன் பாரதி !
இரயில் பெட்டியிலிருந்து தன்னை வெளியே தள்ளிய வெள்ளை அதிகாரியை எட்டி உதைக்கவில்லை காந்தி ! அந்த கோபத்தை கனலாய் தன்னுள் தாங்கி இந்திய சுதந்திரத்துக்கே வழிவகுத்தார் !
" வெங்காயம் " என திட்டியதோடு நில்லாமல் சமூக ஏற்ற தாழ்வுகள் தொடங்கி மூட பழக்கங்கள் வரை அனைத்தையும் சாடியதால்தான் பெரியாரை பற்றி இன்றும் பேசுகிறோம் !
இதுதான் ரெளத்திரம் பழகுதல் ! கோபத்தை மடை மாற்றுதல் !! நமக்கு கோபம் தரும் செயல்களை முதலில் நாம் செய்யாதிருக்க வேண்டும். நமக்கு முன்னாலிருப்பவர் யாராக இருந்தாலும் அவர் செய்தது தவரென்றால் நேரடியாக நிதானமாக சுட்டிக்காட்டும் நெஞ்சுரம் வேண்டும்.
குரல் உயர்த்தி பேசினால்தான் கோபத்தை தெரிவிக்கலாம் என்றில்லை. நம் கோபம் நியாயமெனில் நமது ஒரு பார்வையே எதிராளியை அடக்கிவிடும் ! ஆத்திரத்தில் நிலை தடுமாறி குழறி பேசும் வார்த்தைகளைவிட வலுவானது சட்டென தோன்றிவிடும் மெளனம் !
இல்லை ! என்ன முயற்சித்தாலும் என்னையும் அறியாமல் கோபத்தில் நிலைத்தடுமாறி விடுகிறேன் என்கிறீர்களா ? சட்டென அங்கிருந்து நகர்ந்துவிடுங்கள் ! இரண்டு மூன்று முறை ஆழ மூச்சிழுத்து, முடிந்தால் ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து பாருங்கள் ! கோபம் காணாமல் போய்விடும் ! கோபத்துக்கான காரணத்தை,முடிந்தால் அந்த கோபத்தையே உற்று நோக்குங்கள் ! சட்டென ஒரு வெளிச்சம் பரவுவதை காண்பீர்கள் !
திரும்பி சென்று உங்கள் தரப்பை நிதானமாய் விளக்குங்கள் ! உங்கள் தரப்பின் காரண காரியங்களை விளக்குங்கள். பல தருணங்களில் கோபத்துக்கான காரணம் சரியான புரிதலின்மையே ! " இதனை செய் ! " என கட்டளையிடுவதைவிட ஏன் செய்ய வேண்டும் என விளக்கி கூறுங்கள்.
ஆத்திரத்துக்கான மற்றொரு முக்கிய காரணம் கெளரவம் ! இவன் சொல்லி நான் கேட்பதா, இவன் என்னை எதிர்ப்பதா என்பவை போன்ற போலி கெளரவங்கள் ! சிறியவரோ பெரியவரோ, ஆனோ பெண்ணோ, ஏழையோ பணக்காரனோ யாராக இருந்தாலும் அவர்களின் பேச்சிலிருக்கும் நியாயத்தை உணர்ந்தோமானாலும் பல நேரங்களில் கோபம் தவிர்க்கலாம்.
ஒரு நிமிடத்துக்கும் குறைந்த நேரத்துக்கு நீடிக்கும் கோபத்தில் தவறி விழும் வார்த்தைகள் பல வருட நட்பை, உன்னதமான உறவுகளை முறித்துவிடலாம். ஆத்திரத்தில் ஓங்கிய கையால் நாம் மிகவும் நேசித்த உயிரை கூட பலி கொடுத்துவிடக்கூடிய சூழ்நிலை அமைந்துவிடலாம்.
நம் கோபத்தினால் உறவு முறிந்த யாரையாவது இனி சந்திக்க நேர்ந்தால்... இன்முகத்துடன் முதல் வணக்கம் நம்முடையதாக இருக்கட்டும் !
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.