மதம் ஜாதி
மொழி பிராந்தியம்
என நாம்
பிரிந்திருந்தாலும்
நமக்குள்ளிருக்கும்
மனிதம் ஒன்றுதான் !
அன்பே அதன்
அடிநாதம் !
குடும்பம் உறவு
நட்பு சுற்றம்
தாண்டிய சாமானியனையும்
நேசிப்போம் !
நாம் கடக்கும்
பாதைகளெங்கும்
அன்பு விதைப்போம் !
இனிவரும் வருடங்களில்
இப்பூமியை
நம் அன்பு
விருட்சங்களால்
இன்னும் அழகாக்குவோம் !
மொழி பிராந்தியம்
என நாம்
பிரிந்திருந்தாலும்
நமக்குள்ளிருக்கும்
மனிதம் ஒன்றுதான் !
அன்பே அதன்
அடிநாதம் !
குடும்பம் உறவு
நட்பு சுற்றம்
தாண்டிய சாமானியனையும்
நேசிப்போம் !
நாம் கடக்கும்
பாதைகளெங்கும்
அன்பு விதைப்போம் !
இனிவரும் வருடங்களில்
இப்பூமியை
நம் அன்பு
விருட்சங்களால்
இன்னும் அழகாக்குவோம் !
இதை செய்ய வேண்டும், அதை நிறுத்த வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என பல்வேறு உறுதிமொழிகளுடன் ஒவ்வொரு புத்தாண்டையும் தொடங்கி, அந்த உறுதிமொழிகளெல்லாம் காலண்டர் தாள்களைவிடவும் வேகமாய் உதிர்ந்து மறைந்த வேகத்தில் ஆண்டின் இறுதியை நெருங்கி, மீன்டும் ஒரு புத்தாண்டினை புது சத்தியத்துடன் தொடங்கி...
ஆகையால் தோழர் தோழிகளே... உறுதியற்ற உறுதிமொழிகளும் சாத்தியப்படாத சத்தியங்களும் வேண்டாம் !
மகிழ்ச்சியாய் இருப்போம் ! இந்த ஆண்டு முழுவதையும் சந்தோசமாய் கழிப்போம் !!
நீண்ட ஆயுள், ஆரோக்யம், செல்வம் என்றெல்லாம் வாழ்த்துகிறோமே தவிர சந்தோசமாக இருங்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், உங்களை சுற்றி உள்ள இவ்வுலகின் அற்புதங்களை உணருங்கள் என வாழ்த்துவது கிடையாது !
சற்றே ஓடுவதை நிறுத்திவிட்டு யோசித்தோமானால் இந்த நொடி மட்டுமே நிரந்தரம் என்பது புரியும் ! நிலையற்ற இவ்வாழ்க்கையின் நிலயான இத்தருணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுவோம். இன்னும் நிறைய நேரமிருக்கிறது இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன என்றே நினைக்கிறோம். ஆனால் நாளையே இந்த வாழ்க்கை நின்றுவிடுமானால்... நாம் சாதிக்க நினைத்தையெல்லாம் சாதித்து விட்டோமா ? நாம் நேசிப்பவர்களிடம் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லி விட்டோமா ? நான் எப்படி வாழ நினைத்தேனோ அப்படி வாழ்ந்துவிட்டேன் அல்லது வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என நம்மில் எத்தனை பேரால் சொல்ல முடியும் ?!
நமக்கு நல்லது என நாம் மனதில் வரித்துக்கொண்ட கற்பனைகளை தேடி நித்தமும் ஓடுவதை சற்றே நிறுத்திவிட்டு நிதானித்து பார்த்தோமானால் நம்மை சுற்றி நமக்காக நிகழ்ந்து கொண்டிருக்கும் நல்லவைகள் புலப்படும் ! நம்மை தேடிவரும் நன்மைகளை நாம் உணராதது புரியும் !
உங்களின் பெற்றோர்களை கொண்டாடுங்கள். வயோதிகத்தின் நிழல் வேகமாய் படரும் அவர்கள் உங்களுடன் இருக்கும் பொழுதை பெருமையுடன் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
உங்களை இன்னும் பிள்ளைகளாய் நேசிப்பது அவர்கள் மட்டும்தான். அவர்கள் உங்களை வளர்த்த விதத்தில், உங்களுக்கு அளித்த வசதிகளில் குறைகள் இருந்திருக்கலாம், ஆனால் அவர்களால் முடிந்ததை முழு மனதுடன் உங்களுக்கு அளித்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றும் அவர்கள் உங்களின் பின்னால் இருக்கிறார்கள். உங்களின் வெற்றிகளை பாராட்ட ! தோல்வியின் போது தோள்தொட்டு தூக்க ! உங்களின் மகிழ்ச்சியை அவர்களுடையதாய் கொண்டாட ! உங்களின் துக்கத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ள !
காதலனோ காதலியோ அல்லது கணவனோ மனைவியோ, உங்கள் துணைக்கான நேரத்தை அவர்களுடன் முழுமையாக செலவிடுங்கள்.
நம் வேலை பளு, குடும்ப தேவைகள், அன்றாட காரியங்கள் என பலவற்றுக்கு மத்தியில் நமக்கென காத்திருக்கும், நமக்கென வாழும் நம் துணையின் தேவைகளை பல நேரங்களில் மறந்து விடுகிறோம் ! ஆனால் வாழ்க்கை படகு ஒரு துடுப்பை விட இரு துடுப்புகளால் செலுத்தபடும்போது சீராய் போகும் என்பதை மறந்துவிடாதீர்கள் !பரஸ்பர புரிதலும், ஒற்றுமையும், விட்டுக்கொடுத்தலும் இல்லையென்றால் இல்லறத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் !
உங்களின் குழந்தைகளுடனான நேரத்தை அவர்களுக்காக முழுமையாய் செலவிடுங்கள். மிக வேகமாய் வளரும் அவர்களின் சிறகுகள் விரிந்து அவர்களின் வாழ்க்கைக்காக அவர்கள் பறந்து விடுவார்கள்.
நம் குழந்தைகளை கண்காணிப்பதிலும், கண்டிப்பதிலும், அறிவுரைகள் கூறுவதிலுமே அவர்களுக்கான நேரத்தை செலவிடும் நாம் நம் குழந்தைகளை பற்றி பெருமைபட்டது எப்போது ? அவர்களை கடைசியாய் பாராட்டியது எப்போது ? அவர்களின் வளர்ச்சிக்கு தேவை நம் ஊக்கம். அது மட்டும் தான் நாம் நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அளிக்கும் உறுதியான அஸ்த்திவாரம்.
நண்பர்களை நினைவில் கொள்ளுங்கள் !
எந்த எதிர்ப்பார்ப்புகளும் அற்ற பால்ய பருவத்தில் நம் தோள் மீது கைபோட்டு நடந்தவர்கள் தொடங்கி, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்முடன் இணைந்தவர்கள் எத்தனைபேர் ? ஓடி வந்து உதவியவர்கள் எத்தனை பேர் ? அவ்வப்போது அவர்கள் நமக்காக நம் பாதையை மறைத்த தடைகளை நகர்த்தியிராவிட்டால் நாம் இன்று இங்கிருந்திருப்போமா ? தவறான புரிதல்களால் அவர்களுக்கும் நமக்குமான உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் ! தொடர்பு நின்று போயிருக்கலாம் ! ஆனால் அவர்களுடன் நாம் கழித்த இனிய தருணங்கள் நம் மனங்களில் கல்வெட்டுகளாய் பதிந்தேதான் இருக்கும் !
அந்த நண்பர்களை மீன்டும் சந்திக்க நேர்ந்தால் முதல் புன்னகை நம்முடையதாக இருக்கட்டும் !
மொத்தத்தில் இந்த உலகத்தை, அது நாம் கேட்காமலே நமக்கு கொடுத்திருக்கும் கொடைகளை நேசிப்போம் ! மகிழ்ச்சியாக இருப்போம் ! நிரந்தரமற்ற இவ்வாழ்வின் நிரந்தரமான இத்தருணத்தை நிறைவாக அனுபவிப்போம் ! நம்மை சுற்றியுள்ள இவ்வுலகின் அற்புதங்களை ரசிப்போம் ! நம் அன்பினால் இவ்வுலகுக்கு இன்னும் கொஞ்சம் அழகூட்டுவோம் !
வாழ்க்கை அழகானது ! அதனை அழகாக நீங்கள் நினைக்க நினைக்க, அது இன்னும் அழகாக உருவெடுக்கும் ! ஒரு குழந்தையாய் விளையாடுங்கள் ! பைத்தியமாய் நடனமாடுங்கள் ! கிறுக்கனைபோல் கத்தி ஆழ சுவாசியுங்கள் !!!
இவ்வுலகம் அற்புதங்கள் நிரம்பியது ! இத்தருணத்தில் வாழ்வதால் மட்டுமே அந்த அற்புதங்களை உணர முடியும் !
ஒவ்வொரு விடியலையும் ஒரு புத்தாண்டாய் கொண்டாடுவோம் !
( 2013 மற்றும் 2014 வாழ்த்து பதிவுகளின் திருத்தப்பட்ட தொகுப்பு )
பட உதவி : GOOGLE
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.
அருமை நண்பரே வாழ்வியல் தத்துவத்தின் யதார்த்தத்தை அழகாக, எளிமையாக, இயல்பாக, எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புதிய பதிவு நண்பரே...
எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன்.
நண்பரே, தங்களது My Blog List டில் என்னை’’யும் (?) இணைத்துக் கொண்டமைக்கு 2 ½ கிலோ நன்றிகள்.
ReplyDelete"//ஆகையால் தோழர் தோழிகளே... உறுதியற்ற உறுதிமொழிகளும் சாத்தியப்படாத சத்தியங்களும் வேண்டாம் !
ReplyDeleteமகிழ்ச்சியாய் இருப்போம் ! இந்த ஆண்டு முழுவதையும் சந்தோசமாய் கழிப்போம் !!//"
- அருமை. அருமை. நன்றாக சொன்னீர்கள் நண்பரே.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteசாம்,
ReplyDeleteஆழமான, பொருள் பொதிந்த, முதிர்ச்சியான எண்ணவோட்டம் கொண்ட கட்டுரையை எழுதி புத்தாண்டின் துவக்கத்தை சிறப்பு செய்ததற்கு வாழ்த்துக்கள்.
ஒரு சம்பிரதாயமாகவே புத்தாண்டை நான் வரவேற்கிறேன். மற்றபடி இதில் கொண்டாட எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. காலத்தை ஒரு நீண்ட பாதையாகப் பார்த்தால் புதிய ஆண்டு பற்றிய மிகைகள் கண்ணிலேயே படாது என்று தோன்றுகிறது. எனவே இந்த புத்தாண்டு உறுதிமொழி அபத்தங்கள் என்னிடமில்லை. அன்பு செய்வதும் வாழ்கையை மகிழ்ச்சியால் நிரப்புவதுமே உண்மையான செயல்கள். ஒவ்வொரு நாளையும் புத்தாண்டாக கொண்டாடுவோம் என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வழுக்கும் எழுத்து. (அதாவது நிறுத்தமுடியாத அளவுக்கு) பாராட்டுக்கள்.
Life is strangely familiar.
அண்ணா வணக்கம்!
ReplyDeleteநீண்டதாகப் பின்னூட்டமிட்டுப் போக முடியவில்லை.
தங்களின் பல கருத்துகள் நான் பின்பற்றாதவை. பின்பற்ற வேண்டியவை.
நிச்சயம் முயல்வேன்.
நெறிப்படுத்தியமைக்கு நன்றிகள் பல!
ReplyDeleteகுடும்பம் உறவு
நட்பு சுற்றம்
தாண்டி "சாமானியனையும்"
நேசிப்போம் !
2015 - ஆம் ஆண்டு அனைவரும் "சாமானியனை"
நேசிக்கும் ஆண்டாக வாழ்த்துக்கள்!
புதுவை வேலு
ReplyDeleteபொலிக.. பொலிக.. புத்தாண்டு!
புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
மிகவும் சிறப்பான கருத்துக்களை ஆலோசனைகளாக தந்துள்ளீர்கள்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDelete//உங்களின் பெற்றோர்களை கொண்டாடுங்கள். வயோதிகத்தின் நிழல் வேகமாய் படரும் அவர்கள் உங்களுடன் இருக்கும் பொழுதை பெருமையுடன் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
ReplyDeleteஉங்களை இன்னும் பிள்ளைகளாய் நேசிப்பது அவர்கள் மட்டும்தான். அவர்கள் உங்களை வளர்த்த விதத்தில், உங்களுக்கு அளித்த வசதிகளில் குறைகள் இருந்திருக்கலாம், ஆனால் அவர்களால் முடிந்ததை முழு மனதுடன் உங்களுக்கு அளித்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றும் அவர்கள் உங்களின் பின்னால் இருக்கிறார்கள். உங்களின் வெற்றிகளை பாராட்ட ! தோல்வியின் போது தோள்தொட்டு தூக்க ! உங்களின் மகிழ்ச்சியை அவர்களுடையதாய் கொண்டாட ! உங்களின் துக்கத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ள !//
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்! பெற்றோர்களை உயர்வாக நினைக்கும், அன்பு செலுத்தும் பிள்ளைகள் வாழ்க்கையில் எந்த நிலையிலும் என்றும் உயர்ந்தே இருப்பார்கள்!
தங்களின் எண்ணம் போல் இந்த புத்தாண்டு சாதி,சமய வேறுபாடு அற்ற புத்தாண்டாக அமையட்டும். வாழ்த்துக்கள்,
ReplyDeleteசாம் சார்
ReplyDeleteநல்ல பதிவு . உறுதி மொழிகள் அர்த்தமற்றவை என்பது ஒவ்வொரு ஆண்டும் கடக்கும்போது புரியும் . புது ஆண்டு பிறப்பதால் புது மனிதன் உருவாவதில்லை . புதுச் சிந்தனைகள் உதிக்கும்போதே உருவாகின்றான். ஆண்டுகள் கடப்பதால் பழக்க வழக்கங்கள் மாறிவிடும் என்பது புது ஆண்டு பிறக்கும்போதே புரிந்து விடுகிறது நடக்காதென்று! என் நண்பன் ஒரு புதிய ஆண்டின் தொடக்கத்தில் சிகரெட் பிடித்தான் . திடீரென அவனாகவே ' அடடா ! இந்த வருடம் சிகரெட்டை விட்டு விட வேண்டும் என்று உறுதி எடுத்திருந்தேன் . மறந்து பற்றவைத்து விட்டேனே! சரி பரவாயில்லை ...பற்ற வைத்தது பற்ற வைத்ததுதான் அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் ' என்று மீண்டும் ஒரு இழுப்பு இழுத்தான். நான் நீண்ட நேரம் சிரித்தேன்.
உங்களின் தத்துவார்த்தமான வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்தியம் . புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சாம் சாரே,
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Saam,
ReplyDeletepeRROrkaLai koNdaadungkaL
natpu paaraattungkaL
ellaaam sari, thurOgikaLaiyum, ehtirikaLaiyum, ketta eNNam koNdavarkaLaiyum enna seyyaNumnu sollalaiyE saam???!
manniththu avargaLaiyum naNbaraakka muyalvOm! :))))
HNY to you! :)
புத்தாண்டில் தேவையானவையை கோர்த்து அழகாக தந்துள்ளீர்கள் முத்தான பதிவு தொடரட்டும்....
ReplyDeleteமிக்க நன்றி சகோ ! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!
வணக்கம் சகோதரரே!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மனிதத்தைக் காத்து மகான்களாய் வாழ்வோம்!
புனிதமெனப் போற்றிப் புகழ்ந்து!
உளந்தொட்ட பதிவு சகோதரரே!.. மிக அருமை!
நன்றியுடன் வாழ்த்துக்களும்!
ஆம்.அன்பு மட்டுமே அனைவரையும் ஒன்றுசேர்க்கும்
ReplyDeleteவணக்கம் சகோ. மிகவும் அருமையான கருத்துமிக்க பதிவு. உறுதிமொழிகளை எடுத்து அவற்றைப் பறக்கவிடுவதைவிட எடுக்காமல் மகிழ்ச்சியாய் நன்மை செய்து வாழ்வதே சிறப்பு..பெற்றோரையும், துணையையும், பிள்ளைகளையும் நண்பர்களையும் போற்றச் சொன்னது அருமை சகோ..இதுதானே அன்றாடம் தேவை..
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ, உங்கள் மனம் போல நன்றாய் அமையட்டும்.
அண்ணா
ReplyDeleteபதிவின் தொடக்கத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் வாழ்த்து ஒரு குட்டி பாப்பா கைநீட்டி நிற்பதை போல வடிவில் அழகாவும், அர்த்தமுள்ளதாவும் இருக்கு:) புத்தாண்டில் மிக நல்ல சிந்தனை. ஒரு முழுமையான வாழ்க்கைமுறைக்கான கையேடு போல அழகான பதிவு! இதில் இருக்கும் தெளிவு, உங்கள் வாழ்வின் எல்லா தருணங்களிலும் உங்களுக்கு சாத்தியமாகடும் அண்ணா:) புத்தாண்டு வாழ்த்துகள்!
2013 மற்றும் 2014 வாழ்த்து பதிவுகளின் திருத்தப்பட்ட தொகுப்பு என்று கூறியிருப்பினும் இவ்வாண்டிற்கும் பொருந்திவருகிறது. தங்கள் எண்ணம்போல நடக்க வேண்டுவோம். வலைப்பூவின் பதிவுகள் வழியாக நட்பினைத் தொடர்வோம்.
ReplyDeleteHappy new Year. Good Advise
ReplyDelete
ReplyDelete"நீண்ட ஆயுள், ஆரோக்யம், செல்வம் என்றெல்லாம் வாழ்த்துகிறோமே தவிர சந்தோசமாக இருங்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், உங்களை சுற்றி உள்ள இவ்வுலகின் அற்புதங்களை உணருங்கள் என வாழ்த்துவது கிடையாது !
சற்றே ஓடுவதை நிறுத்திவிட்டு யோசித்தோமானால் இந்த நொடி மட்டுமே நிரந்தரம் என்பது புரியும் ! நிலையற்ற இவ்வாழ்க்கையின் நிலயான இத்தருணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுவோம்." என்ற வழிகாட்டலையே எனது உறவுகளுடன் பகிர விரும்புகிறேன். இந்தச் சிறந்த புத்தாண்டுப் பதிவுக்கு எனது பாராட்டுகள்.
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே. ஆண்டின் ஆரம்பத்தில் நல்ல கருத்துக்களை கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லவற்றை ஏற்றுத் தீயவற்றை நீக்கி இனிய புத்தாண்டாக்குவோம்!
ReplyDeleteபுத்தாண்டில் அருமையான தொடக்கம்......
ReplyDeleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்
ReplyDeleteமிக நல்ல பதிவு ஐயா. நன்றி.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உறுதிமொழிகளின் ஆயுள் காலம், எடுப்பவரின் மன உறுதியைப் பொருத்தது! ஆனால், அவற்றை எடுக்க அடுத்த புத்தாண்டு வரை காத்திருக்காமல், நம்மால் இயலும் மாற்றங்களைச் சிறுகச் சிறுக செய்து வந்தாலே, ஒவ்வொரு புத்தாண்டும் முந்தையதை விட இனியதாக மலரும்! வெகு தாமதமாகத் தான்... ஆனாலும் பரவாயில்லை! அடுத்த ஆண்டு வரை இது புத்தாண்டு தானே?! :) இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!
ReplyDeleteநேரத்தின் மதிப்பை உணர்ந்து நம் நேசத்துக்குரியவர்களுடன் அதை செலவழிக்க அறிவுறுத்தும் அருமையான கருத்துகள். உணர்ந்து நடந்தால் அதுவே வாழ்க்கையின்பம். இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
:) யதார்த்தமான பதிவு... நேரில் நின்று நீங்கள் பேசுவதை கேட்பது போல் உள்ளது...
ReplyDelete(belated new year wishes...)
மற்றும், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... & பொங்கல் வாழ்த்துக்கள்...
எப்படித் தங்களின் பதிவு விடுபட்டது என்று தெரியவில்லை! பல பதிவுகள் இப்படித்தான் விடுபடுகின்றது. அருமையான பதிவு! மனிதம் பற்றியும், நம்முடன் நேசமுடன் இருப்பவர்களுக்கு நேரம் ஒதுக்குதல் பற்றியும் பேசித் தொடங்கிய இந்தப் புத்தாண்டு நல்ல ஆண்டாக அமையட்டும். தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
Are you in need of a loan?
ReplyDeleteDo you want to pay off your bills?
Do you want to be financially stable?
All you have to do is to contact us for
more information on how to get
started and get the loan you desire.
This offer is open to all that will be
able to repay back in due time.
Note-that repayment time frame is negotiable
and at interest rate of 2% just email us:
reply to us (Whats App) number: +919394133968
patialalegitimate515@gmail.com
Mr Jeffery